வடசென்னை மற்றும் அரசன் படங்கள் குறித்து ரசிகரின் ஒப்பீடு – வியந்து பேசிய வெற்றிமாறன்
Director Vetrimaaran about Fans: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் ரசிகர்களின் பார்வை குறித்து வெற்றிமாறன் வெளிப்படையாக பேசியுள்ளார்.

வெற்றிமாறன்
தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றவர் இயக்குநர் வெற்றிமாறன் (Director Vetrimaaran). இவரது இயக்கத்தில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் விடுதலை பாகம் இரண்டு. இந்தப் படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி மற்றும் மஞ்சு வாரியர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் அடுத்ததாக நடிகர் சூர்யாவின் நடிப்பில் வாடிவாசல் படத்தை இயக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வைரலாகி வந்தது. ஆனால் இந்த ஒப்பந்தம் சில காரணங்களால் கைவிடப்பட்டதாக தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.
இதனைத் தொடர்ந்து இந்த விசயத்தை உறுதி செய்யும் விதமாக நடிகர் சிலம்பரசன் உடன் இணைந்து இயக்குநர் வெற்றிமாறன் பணியாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியானது. அதனை உறுதி செய்யும் விதமாக ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிக்கும் படத்திற்கு அரசன் என்று பெயர் வைக்கப்பட்டதாகவும் இந்தப் படமும் வடசென்னை பகுதியை மையமாக வைத்து உருவாக உள்ளது வீடியோவைப் பார்க்கையில் தெளிவாக தெரிந்தது.
வடசென்னை மற்றும் அரசன் படங்கள் குறித்து ரசிகரின் ஒப்பீடு:
இந்த நிலையில் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் இயக்குநர் வெற்றிமாறன் ரசிகர் ஒருவரின் ஒப்பீடு குறித்து பிரமித்து பேசினார். அதில் அவர் கூறியதாவது, வட சென்னை படத்தில் நடிகர் தனுஷும் ஃபன்ங் ஹேர் ஸ்டைல் வைத்திருப்பார், அதே போல அரசன் படத்தின் அறிமுக வீடியோவில் நடிகர் சிம்புவும் அதே மாதிரியான ஹேர் ஸ்டைல் வைத்து இருந்தார்.
அதனால் இந்த இரண்டு படங்களும் ஒரே காலத்தில் நடப்பதாக அந்த ஃபேன் தெரிவித்து இருந்தார். இதனை சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய வெற்றிமாறன் இந்த ஒப்பீடு தன்னை பிரம்மிப்பில் ஆழ்த்தியதாகவும் அதனை அவர் யோசித்து செய்யவில்லை என்றும் அந்தப் பேட்டியில் தெரிவித்து இருந்தார்.
Also Read… நடிகர் ஃபகத் பாசிலின் வித்யாசமான நடிப்பில் நார்த் 24 காதம் படத்தை மிஸ் செய்யாதீர்கள்
இணையத்தில் கவனம் பெறும் வெற்றிமாறன் பேச்சு:
“I saw Fan theory connecting funky hair of #SilambarasanTR in #Arasan & #Dhanush‘s Funk hair in #Vadachennai💇♂️. It’s an interesting thought, may be i can use it😂. I’m happy that Vadachannai is part of cultural conversation of youngsters♥️”
– #VetriMaaranpic.twitter.com/nxORnKlw54— AmuthaBharathi (@CinemaWithAB) November 22, 2025
Also Read… பைசன் முதல் டீசல் வரை… இந்த வீக்கெண்ட் ஓடிடியில் என்ன பார்க்கப் போறீங்க?