பழம்பெரும் நடிகர்.. சாமி பட வில்லன் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் காலமானார்..

Kota Srinivasa Rao Demise: சாமி படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான கோட்டா ஸ்ரீனிவாச ராவ் வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக ஜூலை 13, 2025 அதிகாலை 4 மணிக்கு காலமானார். அவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பழம்பெரும் நடிகர்.. சாமி பட வில்லன் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் காலமானார்..

கோட்டா ஸ்ரீனிவாச ராவ்

Published: 

13 Jul 2025 07:20 AM

கோட்டா ஸ்ரீனிவாச ராவ் மறைவு: பழம்பெரும் நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் (83) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கோட்டா ஸ்ரீனிவாச ராவ் தனது 40 கால திரைப்பட வாழ்க்கையில் பல சின்னச் சின்ன வேடங்களில் நடித்துள்ளார். கோட்டா ஸ்ரீனிவாச ராவ் 750 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கோட்டா சீனிவாச ராவ் நடிகர் விக்ரமுடன் இணைந்து வெளியான படம் சாமி மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதுதான் தமிழில் அவரது முதல் படமாகும். இந்த படத்தில் பெருமாள் பிச்சை என்ற கதாபாத்திரம் மூலம் மக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றார். தனது தனித்துவமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இவர் அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக பல படங்களை நடித்துள்ளார். குத்து, ஜோர், ஏய் திருப்பாச்சி, சத்தியம், கோ, சாமி 2 என பல படங்களை வில்லனாக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

தனித்துவமான நடிப்பின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்:

குறிப்பாக திருப்பாச்சியில் சனியன் சகடை என்ற கதாபாத்திரம் மூலம் பெரும் வரவேற்பு பெற்றவர். இவர் நடிகராக மட்டுமல்லாமல் பாடகர், டப்பிங் கலைஞர் என பன்முகத்திறமை கொண்டவர். நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார். கோட்டா ஸ்ரீனிவாச ராவ் 1999 முதல் 2004 ஆம் ஆண்டு வரை விஜயவாடா தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு தமிழ் என பல்வேறு மொழிகளில் 750 க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட கோட்டா ஸ்ரீனிவாச ராவ்:

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக திரையுலகில் இருந்து சற்று விலகி இருந்தார். கோட்டா ஸ்ரீனிவாச ராவிற்கு கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு அதற்காக சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளார். இதற்கிடையில் சமீபத்தில் கோட்டா ஸ்ரீனிவாச ராவின் புகைப்படம் இணையத்தில் வைரலானது. உடல் மெலிந்த நிலையில் ஆளே அடையாளம் தெரியாமல் மாறி இருந்தார். இந்த புகைப்படம் ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியது.

Also Read: விஜய் சேதுபதியின் ‘தலைவன் தலைவி’ – 2வது பாடல் வெளியானது!

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட கோட்டா சீனிவாச ராவ் ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்துள்ளார். ஆனால் சிகிச்சை பலனென்று இன்று அதாவது ஜூலை 13 2025 தேதியான இன்று காலை காலமானார். வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக அவர் அதிகாலை 4 மணி அளவில் உயிரிழந்தார்.

Also Read: ராஷ்மிகா மந்தனாவின் ‘தி கேர்ள்ஃப்ரெண்ட்’ – முதல் சிங்கிள் ரிலீஸ் எப்போது?

கோட்டா ஸ்ரீனிவாச ராவ் காங்கிபாடு ஜூலை 10, 1942 இல் பிறந்தார். இவருக்கு சிறுவயதிலிருந்தே நாடகத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். திரைப்படங்களில் நுழைவதற்கு முன்பு ஸ்டேட் வங்கியில் பணிபுரிந்தார். 1968 இல் ருக்மிணியை மணந்தார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். கோட்டா ஸ்ரீனிவாச ராவ் 2015 இல் பத்மஸ்ரீ விருதைப் பெற்றார். அத்துடன் ஒன்பது நந்தி விருதுகளைப் பெற்றுள்ளார். அவர் 1978 இல் பிரணம் கரீது திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். எஸ்.வி. ரங்கா ராவ், கைகலா சத்யநாராயணா, ராவ் கோபால ராவ் ஆகியோரின் சகாப்தம் முடிந்த பிறகு, கோட்டா ஸ்ரீனிவாச ராவ் அந்த இடைவெளியை நிரப்பினார்.