Vanitha Vijayakumar : கார்த்திக் ராஜா எனது சிறந்த நண்பர்.. விமர்சனங்களுக்கு வனிதா விஜயகுமார் விளக்கம்!
Vanitha Vijayakumar Clarifies Ilayaraja Controversy : நடிகர் விஜயகுமாரின் மகள்தான் நடிகை வனிதா விஜயகுமார். இந்நிலையில் சமீபத்தில் இளையராஜா, தன்மீது தொடர்ந்த வழக்கு குறித்து பேட்டி ஒன்றில் வனிதா விஜயகுமார் பேசியிருந்தார். அது மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அதற்கு தனது எக்ஸ் பக்கத்தில் வனிதா விளக்கம் அளித்துள்ளார்.

கார்த்திக் ராஜா மற்றும் வனிதா விஜயகுமார்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வந்தவர் விஜயகுமார் (Vijayakumar). இவரின் மகள்களில் ஒருவர்தான் வனிதா விஜயகுமார் (Vanitha VIjayakumar) . இவர் திரைப்படங்களில் ஹீரோயினாக அறிமுகமாகி பின்னர் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். மேலும் கடந்த 1995ம் ஆண்டு வெளியான சந்திரலேகா (Chandralekha) என்ற படத்தில், தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இவரின் இயக்கத்திலும், நடிப்பிலும் சமீபத்தில் வெளியான படம் மிஸஸ் அண்ட் மிஸ்டர் (Mrs. and Mr.) என்ற திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் இசையமைப்பாளரின் இளையராஜாவின் (Ilaiyaraaja) இசையமைப்பில் உருவான பாடல் பயன்படுத்தப்பட்டிருந்தது. இது தொடர்பாக இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும் இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய நடிகை வனிதா விஜயகுமார், “நான் இளையராஜாவின் வீட்டிற்கு மருமகளாகச் சென்றிருக்கவேண்டியது” என கண்ணீருடன் பேசியிருந்தார்.
இந்நிலையில், அந்த தகவலானது மக்கள் மத்தியில் தவறான விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது. மேலும் அவர் கார்த்திக் ராஜாவையா திருமணம் செய்யவிருந்தார் என இணையதளங்களில் தகவல்கள் வைரலாகி வந்தது. இந்நிலையில் அதை விளக்கும் விதத்தில் எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் “கார்த்திக் ராஜா எனது சிறந்த நண்பர்” என்று கூறியுள்ளார். மேலும் அதை பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.
வனிதா விஜயகுமார் வெளியிட்ட எக்ஸ் பதிவு :
Just to clarify… Karthik raja is my best friend … his wife is also my best friend.. please don’t bring his name in to this … raja appa is like god to me .. and yes I am like his own , that’s how the family treats me .will face the consequences legally
— Vanitha (@vanithavijayku1) July 13, 2025
விளக்கம் கொடுத்த வனிதா விஜயகுமார் :
இந்த பதிவில் நடிகை வனிதா விஜயகுமார், “இதைத் தெளிவுபடுத்த வேண்டும், இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா எனது சிறந்த நண்பர், அவரின் மனைவியும் எனக்குச் சிறந்த நண்பர். தயவுசெய்து கார்த்திக் ராஜாவின் பெயரை இந்த பிரச்சனையில் கொண்டு வராதீர்கள். ராஜா அப்பா எனக்குக் கடவுள் போன்றவர், ஆமாம், நான் அவரின் சொந்தக்காரர்தான். ஏனென்றால் அந்த குடும்பம் என்னை அவ்வாறுதான் நடத்துகின்றனர். மேலும் இந்த படத்தில் பாடல் பயன்படுத்தியது தொடர்பான வழக்கை நான் சட்டப்படி சந்திப்பேன்” என நடிகை வனிதா விஜயகுமார் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : பழம்பெரும் நடிகர்.. சாமி பட வில்லன் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் காலமானார்..
வனிதா விஜயகுமாரின் மிஸஸ் அன்ட் மிஸ்டர் படம் :
இந்த மிஸஸ் அன்ட் மிஸ்டர் படத்தை நடிகை வனிதா விஜயகுமார் இயக்கி மற்றும் நடித்திருந்தார். இதில் அவருக்கு ஜோடியாக நடன இயக்குநர் ராபர்ட் நடித்திருந்தார். இந்த படமானது அடல்ட் காமெடி கதைக்களத்துடன் வெளியாகியிருந்தது. கடந்த 2025, ஜூலை 11ம் தேதியில் இப்படம் வெளியாகியிருந்த நிலையில், இப்படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.
இதையும் படிங்க : அவர் மருமகளா போக வேண்டியது.. இளையராஜாவை விமர்சித்த வனிதா!
மேலும் இளையராஜா இப்படத்தில் தனது பாடலை பயன்படுத்தியதற்காக வழக்கும் தொடர்ந்திருந்தார்.. இந்நிலையில், இந்த தகவலானது மக்கள் மத்தியில் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.