Chennai City Gangsters : வைபவின் ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’ படம் எப்படி இருக்கு? எக்ஸ் தள விமர்சனங்கள் இதோ!

Chennai City Gangsters Movie X Reviews : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் வைபவ். இவரின் நடிப்பில் 2025, ஜூன் 20ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் படம்தான் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ். நகைச்சுவை திரைப்படமாக வெளியாகியிருக்கும் இப்படத்தின் எக்ஸ் தள விமர்சனங்கள் பற்றிப் பார்க்கலாம்.

Chennai City Gangsters : வைபவின் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் படம் எப்படி இருக்கு? எக்ஸ் தள விமர்சனங்கள் இதோ!

சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படம்

Published: 

20 Jun 2025 15:18 PM

 IST

நடிகர் வைபவின் (Vaibhav)  முன்னணி நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் (Chennai City Gangsters). இந்த படத்தை அறிமுக இயக்குநர் விக்ரம் ராஜேஷ்வர் (Vikram Rajeshwar) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் இப்படத்தில் வைபவ் முன்னணி கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை அதுல்யா ரவி (Athulya Ravi) இணைந்து நடித்துள்ளார். இந்த சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படமானது முழுக்க நகைச்சுவையை அடிப்படியாகக் கொண்டு உருவாகியிருக்கிறது. இந்த படத்தில் வைபவுடன் பிரபல நடிகர்கள், ஆனந்தராஜ், லிவிங்ஸ்டன், மொட்டை ராஜேந்திரன், ஜான் விஜய், சுனில் ரெட்டி, ரெடின் கிங்ஸ்லி மற்றும் பாலசரணவன் எனப் பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

பல காமெடி நடிகர்களுடன் மிக பிரம்மாண்ட காமெடி படமாக இந்த சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் படமானது அமைந்துள்ளது. இந்த திரைப்படமானது 2025, ஜூன் 20ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

இந்த படத்துடன் நடிகர் தனுஷின் குபேரா மற்றும் அதர்வாவின் டிஎன்ஏ போன்ற இரு படங்கள் வெளியாகியிருக்கிறது. இந்த படமானது முழுக்க நகைச்சுவை அடிப்படையாக உருவாகியிருக்கும் நிலையில் பேமிலி ரசிகர்களை ஈர்த்து வருகிறது. தற்போது இப்படத்தின் எக்ஸ் தளத்தில் வெளியான விமர்சனங்களைப் பற்றி பார்க்கலாம்.

சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் படத்தின் கதைக்களம் :

கதைக்களம் கொஞ்சம் முட்டாள்தனமாக இருந்தாலும் வேடிக்கையான திருட்டு சார்ந்து இப்படத்தின் கதைக்களம் அமைந்துள்ளதாம். மேலும் இப்படத்தில் நகைச்சுவை நடிகர்கள் பட்டாளமே இணைந்து நடித்திருக்கும் நிலையில், இந்த படமானது மிகவும் அருமையாக இருக்கிறதாம்.

சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் படத்தின் நடிகர்கள் நடிப்பு எப்படி :

இந்த சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படமானது முழுக்க நகைச்சுவை காட்சிகளால் நிறைந்திருக்கிறது. மேலும் இப்படத்தின் கதாபாத்திரங்களின் நடிப்பு மிகவும் அருமையாக வந்திருக்கிறது. முன்னணி நடிகர்கள் வைபவ் மற்றும் அதுல்யா ரவியின் நடிப்பும் அருமை. மொத்தத்தில் இந்த படமானது முழுக்க நகைச்சுவை நிறைந்ததாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

வரவேற்பு குறைவு :

நடிகர் வைபவின் இந்த படத்துடன் நடிகர்கள் அதர்வா மற்றும் தனுஷின் படங்களும் வெளியாகியிருக்கிறது. இதில் குபேரா படமானது பிரம்மாண்ட பட்ஜெட்டில் பான் இந்திய படமாக வெளியாகியிருக்கும் நிலையில், மொத்த வரவேற்பும் அந்த படத்திற்குக் கிடைத்து வருகிறது.

இதனால் நடிகர் வைபவ் மற்றும் அதுல்யாவின் நடிப்பில் வெளியாகியிருக்கும் சென்னை சிட்டி கேங்ஸ்டர் படத்திற்கு போதுமான வரவேற்புகள் இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் படத்தில் நகைச்சுவை போன்றவை நன்றாக இருப்பதாக கூறப்படுவதால் நிச்சயம் வீக் எண்டில் பேமிலி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us
Related Stories
70ஸ் நடிகரின் மகள் டூ பிரபல நடிகரின் மனைவி.. இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுமி யார் தெரியுமா?
Sivakarthikeyan: அஜித்தின் படத்தை தயாரிப்பீர்களா? எது நானா.. – வேடிக்கையாக பதிலளித்த சிவகார்த்திகேயன்!
Priyanka Chopra: 6 -7 வருடங்களுக்கு பின் மீண்டும் இந்திய சினிமாவில்… வாரணாசி படத்திற்காக காத்திருக்கிறேன் – பிரியங்கா சோப்ரா பேச்சு!
With Love: 4வது வாரத்திற்கு பிறகும் திரையரங்குகளில் சாதனை படைத்த வித் லவ் திரைப்படம்!
Priyanka Mohan: ‘தலைவர் 173 படத்தில் நடிக்கிறேனா?’ – உண்மையை உடைத்த பிரியங்கா மோகன்!
Sai Abhyankkar: ‘D55 படத்திற்காக ஸ்பெஷல் ஆல்பம் தயாராகிறது’ – ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சாய் அபயங்கர்!
குதிரை மேல் வந்து டெலிவரி செய்த ப்ளிங்கிட் ஏஜெண்ட்.. இணையத்தில் வைரல் காட்சிகள்..
நான்கு நாட்களுக்கு பிறகு குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?
11 மாத குழந்தையின் உயிரைக் காப்பாற்ற ஒன்றிணைந்த மக்கள்
செயல்படாத EPF கணக்குகள்.. தொழிலாளர் அமைச்சகம் முக்கிய முடிவு..