Urvashi: எனக்கு கிளாமர் ரோலில் நடிக்க சுத்தமா பிடிக்காது.. எனது வாழ்க்கையை மாற்றியது அவர்தான் – நடிகை ஊர்வசி பகிர்ந்த விஷயம்!

Urvashi About Glamour Roles: தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் தனது நடிப்பின் மூலம் பிரபலமானவர் நடிகை ஊர்வசி. இவர் சமீபத்தில் துணை நடிகருக்கான தேசிய விருதையும் வென்றிருந்தார். இந்நிலையில் முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசிய இவர் கிளாமர் ரோலில் நடிக்க தவிர்த்தது பற்றி பேசியுள்ளார்.

Urvashi: எனக்கு கிளாமர் ரோலில் நடிக்க சுத்தமா பிடிக்காது.. எனது வாழ்க்கையை மாற்றியது அவர்தான் - நடிகை ஊர்வசி பகிர்ந்த விஷயம்!

நடிகை ஊர்வசி

Published: 

14 Oct 2025 08:30 AM

 IST

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ்-களில் மிகவும் பிரபலமான நாயகியாக இருந்துவந்தவர் ஊர்வசி (Urvashi). இவர் தற்போது படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தது அசத்திவருகிறார். இவர் நடிப்பிில் தமிழில் இறுதியாக கடந்த 2024ம் ஆண்டு வெளியான எமக்கு தொழில் ரொமான்ஸ் (Emakku Thozhil Romance) என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு முன் ஜே பேபி (J Baby) என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் வித்தியாசமாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் எமோஷனலில் மூழ்கடித்தார் என்றே கூறலாம். அந்த வகையில், நடிகை ஊர்வசியின் கதாபாத்திர தேர்வும் மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தமிழில் 1983ம் ஆண்டில் வெளியான “முந்தானை முடிச்சி” (Munthanai Mudichu) என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தை நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் நடித்திருந்தார். இந்த படத்தய் தொடர்ந்து, கிட்டத்தட்ட இதுவரையில் சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் முன்பு ஒரு நேர்காணலில் பேசிய இவர், சினிமாவில் கிளாமர் கதாபாத்திரங்களை தவிர்த்த காரணம் குறித்தும், தெலுங்கு படங்களில் ஆரம்பத்தில் நடிக்காதது பற்றியும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ரெட்டை கதிரே… சூர்யாவின் மாற்றான் படம் இன்றுடன் 13 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது

கிளாமர் ரோலில் நடிக்காதது குறித்து பேசிய ஊர்வசி :

அந்த நேர்காணலில் பேசிய ஊர்வசி, “எனக்கு படங்களில் நல்ல வேடங்களில் நடிக்கவேண்டும், எனக்கு கிளாமர் ரோலில் நடிப்பதற்கு பிடிக்காது. அந்த காரணத்தினால்தான் தெலுங்கு படங்களை தவிர்க்க தொடங்கினேன். அப்போது கமல் சார்தான் எனக்கு அட்வைஸ் பண்ணாரு, அவர் ” ஊர்வசி நீங்க நல்ல வேடங்களில் நடிக்க நினைக்கிறீங்க, கிளாமர் ரோல் மற்றும் ரொமேன்ஸ் காட்சியில் நடிக்கவேண்டாம் என நினைக்கிறீர்கள். நீங்கள் ஏன் மலையாளம் சினிமாவின் பக்கம் செல்லக்கூடாது என என்னிடம் கேட்டார். மலையாளம் சினிமாவில் இருந்து நல்ல படங்ககளுக்கான ஆஃபர் வரும்போது, படங்களில் நடிக்கவும் தொடங்கினேன்.

இதையும் படிங்க: தமிழ் சினிமாவில் எனது ‘Lucky Charm’ அவர்தான்.. சமந்தா சொன்ன நடிகர் யார் தெரியுமா?

நடிகை ஊர்வசியின் புதிய படத்தின் முதல் பார்வை பதிவு

ஆனால் தமிழ் சினிமாவில் இருந்துதானே நான் சென்றேன், மலையாளத்திலும் படங்களில் நடித்திருக்கிறேன். குழந்தை நட்சத்திரமாக நுழைந்தது மலையாள சினிமாவில்தான். ஆனால் ஒரு நடிகையாக எனக்கு வாழ்க்கையை கொடுத்தது தமிழ் சினிமாதான் என நடிகை ஊர்வசி வெளிப்படையாக பேசியிருந்தார். இது தொடர்பான தகவல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.