அனல் பறக்கும் தனுஷின் நடிப்பில் வெளியானது தேரே இஸ்க் மெய்ன் படத்தின் டீசர்
TERE ISHK MEIN TEASER (Hindi) | நடிகர் தனுஷ் பாலிவுட் சினிமாவில் தற்போது நடித்துள்ள படம் தேரே இஸ்க் மெய்ன். இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. ரொமாண்டிக் ஆக்ஷன் ட்ராமாவாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் நடிகை கிருத்தி சனோர் நாயகியாக நடித்துள்ளார்.

தேரே இஸ்க் மெய்ன்
பாலிவுட் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் ஆனந்த் எல் ராய். இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ராஞ்சனா. இந்தி மொழியில் உருவான இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடித்து இருந்தார். மேலும் இந்தப் படத்தின் மூலம் இந்தி சினிமாவில் நடிகர் தனுஷ் நாயகனாக அறிமுகம் ஆனது குறிப்பிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் தனுஷின் நடிப்பை ரசிகர்கள் வெகுவாகப் பாராட்டினர். சமீபத்தில் இந்தப் படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. ஆனால் ஏஐ தொழில்நுட்பத்தில் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியை தயாரிப்பு நிறுவனம் மாற்றி அமைத்தது இயக்குநர் மற்றும் தனுசிற்கும் ஏமாற்றத்தை அளித்ததாக வெளிப்படையாக தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை தொடர்ந்து இந்தி சினிமாவிலும் தொடர்ந்து நடித்து வருகிறார் தனுஷ். அதன்படி இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்திலேயே அத்ரங்கி ரே படம் நடித்து இருந்தார். இது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது மூன்றாவது முறையாக இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் நடித்துள்ளார். தேரே இஸ்க் மெய்ன் என்ற இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடிக்க நடிகை கிருத்தி சனோன் நாயகியாக நடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
தேரே இஸ்க் மெய்ன் படத்தின் டீசரை வெளியிட்ட படக்குழு:
அதன்படி இந்தப் படத்தில் நடிகர்கள் தனுஷ் மற்றும் கிருத்தி சனோன் உடன் இணைந்து நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கலர் எல்லோ ப்ரசண்ட் சார்பாக தயாரிப்பாளர்கள் ஆனந்த் எல் ராய், ஹிமான்ஷு சர்மா, பூஷன் குமார், கிரிஷன் குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த நிலையில் படத்தின் டீசரைப் படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. மேலும் இந்தப் படம் வருகின்ற 28-ம் தேதி நவம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read… இது ராட்சசன் இல்லை.. இது ஆர்யன் – வெளியானது விஷ்ணு விஷால் பட டீசர்!
தேரே இஸ்க் மெய்ன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Ishk karte toh bahut hain, ab #TereIshkMein mitne ki tayyari hai…❤️🔥
Welcome to the grand world of Shankar and Mukti – in cinemas worldwide on 28th November, in Hindi and Tamil.#TereIshkMeinTeaser: https://t.co/EWTqy0xczP@dhanushkraja @kritisanon @arrahman @aanandlrai… pic.twitter.com/5FdnelplAU
— T-Series (@TSeries) October 1, 2025
Also Read… ஜிவி பிரகாஷ் குமார் – சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது குடும்பநல நீதிமன்றம்