Parasakthi: இன்னும் 100 நாட்களில் சிவகார்த்திகேயனின் பராசக்தி ரிலீஸ்.. படக்குழு வெளியிட்ட ஸ்பெஷல் போஸ்டர் இதோ!
Parasakthi Movie Special Poster: தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படம் பராசக்தி. இப்படமானது வரும் 2026 ஆம் ஆண்டில் ஜனவரி மாதத்தில் வெளியாகும் நிலையில், இன்னும் 100 நாட்கள் மட்டும் உள்ளது. இது தொடர்பான ஸ்பெஷல் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

பராசக்தி படத்தின் புதிய போஸ்டர்
நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் மதராஸி (Madharaasi). இந்த படமானது கடந்த 2025 செப்டம்பர் 5ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இந்த படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் (AR.Murugadoss) இயக்க, அனிருத் (Anirudh) இசையமைத்திருந்தார். அதிரடி ஆக்ஷ்ன் மற்றும் காதல் கதைக்களத்துடன் வெளியான இந்த திரைப்படம், மக்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது. இந்த படத்தை அடுத்ததாக சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படமாக உருவாகியிருப்பது பராசக்தி (Parasakthi). இந்த படத்தை பிரபல இயக்குநரான சுதா கொங்கரா (Sudha Kongara) இயக்கிவருகிறார். இவரின் இயக்கத்தில் இறுதியாக சூரரைப்போற்று என்ற படம் தமிழில் வெளியான நிலையில், அதைத் தொடர்ந்து இந்த பராசக்தி படத்தை இயக்கிவருகிறார்.
இதில் சிவகார்த்திகேயன் முன்னணி வேடத்தில் நடிக்க, அவருடன் நடிகர்கள் ரவி மோகன் (Ravi Mohan), அதர்வா (Atharvaa), ஸ்ரீலீலா (Sreeleela) மற்றும் குருசோமசுந்தரம் உட்பட பல்வேறு பிரபலங்கள் நடித்துவருகின்றனர். இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இன்று 2025 அக்டோபர் 6ம் தேதி முதல் படத்தின் ரிலீசிற்கு 100 நாட்கள் இருக்கும் நிலையில் படக்குழு ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: தனுஷ் – ராஜ்குமார் பெரியசாமியின் டி55 படத்தின் சூப்பர் அப்டேட்!
சிவகார்த்திகேயனின் பராசக்தி படக்குழு வெளியிட்ட ஸ்பெஷல் போஸ்டர் பதிவு :
100 days until the storm finds its voice 🔥#Parasakthi – in theatres on January 14th, 2026💥#ParasakthiFromPongal #ParasakthiFromJan14@siva_kartikeyan @Sudha_Kongara @iam_ravimohan @Atharvaamurali @gvprakash @redgiantmovies_ @Aakashbaskaran @sreeleela14 @dop007… pic.twitter.com/F19oDnfubG
— DawnPictures (@DawnPicturesOff) October 6, 2025
இந்த போஸ்டரில் நடிகர் சிவகார்த்திகேயன் ட்ரெயினில் தொங்கியபடியே, கையில் விளக்கு ஒன்றும் இருப்பதுபோல இந்த போஸ்டரில் உள்ளது. தற்போது வெளியான இந்த போஸ்டர் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டுவருகிறது.
சிவகார்த்திகேயனின் இந்த படமானது கடந்த 1960ம் ஆண்டுகளில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தயாராகியுள்ளதாம். இந்தி திணிப்பிற்கு எதிரான போராட்டம் தொடர்பான திரைப்படமாக இந்த பராசக்தி திரைப்படம் தயாராகிவருகிறதாம்.
பராசக்தி படத்தில் கேமியோ வேடத்தில் தெலுங்கு பிரபலம் :
இந்த பராசக்தி திரைப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் இயக்குனரும் தயாரிப்பாளருமான ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துவருகிறார். மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பாலிவுட் சினிமாவில் களமிறங்கும் சிவகார்த்திகேயன் பட இயக்குநர்!
இந்த படமானது தமிழ், தெலுங்கு, இந்தி , கன்னடம் மற்றும் பல்வேறு மொழிகளில் வெளியாகவும் பான் இந்திய படமாக தயாராகிவருகிறது. இதில் ரவி மோகன் வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இதில் தெலுங்கு பிரபல நடிகரான ராணா டகுபதி சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். இது பற்றி சிவகார்த்திகேயனும் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.