யூடியூபில் 5 மில்லியன் பார்வைகளைக் கடந்தது பராசக்தி படத்தின் ரத்னமாலா பாடல்!
Ratnamala song Lyrical Video | தமிழ் சினிமாவில் தற்போது ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் பராசக்தி. ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்த நிலையில் இந்தப் படத்தில் இருந்து இரண்டாவது சிங்கிள் வீடியோவான ரத்னமால நேற்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

பராசக்தி
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தனது 25-வது படத்திற்காக இயக்குநர் சுதா கொங்கரா உடன் கூட்டணி வைத்தார். இவர்களின் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான போதே ரசிகர்கள் அதனை கொண்டாடித் தீர்த்தனர். இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி இந்தப் படத்தின் அறிமுக வீடியோ முதலில் வெளியானது. அதில் படத்திற்கு பராசக்தி என்று பெயர் வைக்கப்பட்டு இருப்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. மேலும் நடிகர் சிவகார்த்திகேயனின் தோற்றம் 60களில் இருந்தது போல காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. இந்த வீடியோவைப் பார்த்ததுமே படம் ஒரு பீரியட் ட்ராமாவாக இருக்கும் என்று தெளிவாக தெரிந்தது.
தொடர்ந்து இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீ லீலா நடித்துள்ள நிலையில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ரவி மோகன், ராணா டகுபதி, அதர்வா மற்றும் பேசில் ஜோசஃப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில் படம் வருகின்ற 14-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தொடர்ந்து படம் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி வருகின்றது.
5 மில்லியன் பார்வைகளை கடந்தது ரத்னமாலா பாடல்:
இந்த நிலையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையில் முன்னதாக பராசக்தி படத்தில் இருந்து அடி அலையே பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் படத்தில் இருந்து நேற்று 25-ம் தேதி நவம்பர் மாதம் 2025-ம் ஆண்டு ரத்னமாலா என்ற பாடலின் லிரிக்கள் வீடியோ வெளியானது. இந்தப் பாடல் தற்போது யூடியூபில் 5 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Also Read… 2026-ம் ஆண்டில் வரிசைக்கட்டும் சூர்யாவின் படங்கள் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
பராசக்தி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
The Timeless Love is Winning Hearts#Ratnamala From #Parasakthi Crosses 5 Million+ Views On YouTube♥️🎊
🎶🎙️ @gvprakash
✍️ @JayashreeRD#ParasakthiFromPongal#ParasakthiFromJan14@siva_kartikeyan @Sudha_Kongara @iam_ravimohan @Atharvaamurali… pic.twitter.com/P6376YiMG5— DawnPictures (@DawnPicturesOff) November 26, 2025
Also Read… LK7 படத்தின் ப்ரீ புரடெக்ஷன் பணிகளில் களமிறங்கிய லோகேஷ் கனகராஜ்!