பூஜையுடன் தொடங்கியது விஜய் சேதுபதி – பூரி ஜெகன்நாத் கூட்டணியில் உருவாகும் படம்
Actor Vijay Sethupathi: கோலிவுட் சினிமாவில் உட்ச நட்சட்திரமாக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தற்போது பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்த நிலையில் இன்று ஹைதராபாத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு பணிகள் பூஜையுடன் தொடங்கியது.

பூஜையுடன் தொடங்கியது விஜய் சேதுபதியின் புதிய படம்
தமிழ் சினிமாவில் சின்ன சின்ன கதாப்பாத்திரங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர் நடிகர் விஜய் சேதுபதி (Actor Vijay Sethupathi). தனது கடின உழைப்பாள் மட்டுமே சினிமாவில் இந்த உயரத்திற்கு இவர் சென்றது பலருக்கும் எடுத்துக்காட்டாக அமைந்தது. நடித்தால் நாயகனாக மட்டுமே நடிப்பேன் என்று இல்லாமல் வில்லன், குணச்சித்திரம் என அனைத்தையும் ஏற்று நடித்து கலக்கி வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தமிழ் சினிமா மட்டும் இன்றி தற்போது பான் இந்தியா அளவில் வலம் வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த 2025-ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான துடரும் படத்திலும் தமிழில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்த ஏஸ் என இரண்டு படங்கள் இதுவரை திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் தலைவன் தலைவி. விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் நடிகை நித்யா மேனன் நாயகியாக நடித்துள்ளார். படத்தின் பணிகள் நிறைவடைந்து தற்போது படம் 25-ம் தேதி ஜூலை மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த ட்ரெய்ன் படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் படம் தொடங்கியது:
இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இவர் முன்னதாக நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி படத்தில் நாயகியாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் சம்யுக்தா உடன் இணைந்து நடிகை தபு நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்பு நாயகியாக வலம் வந்த நடிகை சார்மி கவுர் தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வந்த நிலையில் தற்போது படத்தின் பணிகள் தொடங்கியுள்ளது.
அதன்படி விஜய் சேதுபதி மற்றும் பூரி ஜெகன்நாத் கூட்டணியில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் பூஜையுடன் இன்று ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை தயாரிப்பாள்ற் சார்மி கவுர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
தயாரிப்பாளர் சார்மி கவுர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#PuriSethupathi Shoot begins 🤗❤️ pic.twitter.com/OSrjxIrb0y
— Charmme Kaur (@Charmmeofficial) July 7, 2025