தனுஷ் – விக்னேஷ் ராஜா கூட்டணி குறித்து வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Actor Dhanush: நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது இட்லி கடை மற்றும் தேரே இஸ்க் மெய் என தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் படங்கள் விறுவிறுப்பாக தயாராகி வருகின்றது. இந்த நிலையில் இந்தப் படங்களை தொடர்ந்து தனுஷ் நடிக்க உள்ள 54-வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகியுள்ளது.

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி குறித்து வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தனுஷ் 54

Published: 

10 Jul 2025 10:53 AM

நடிகர் தனுஷ் (Actor Dhanush) நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படத்தை இயக்குநர் விக்னேஷ் ராஜா (Director Vignesh Raja) இயக்க உள்ளதாக முன்பு தகவல்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது. இவர் முன்னதாக நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த போர் தொழில் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சைக்கோ த்ரில்லர் பாணியில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப்பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இயக்குநர் விக்னேஷ் ராஜா அடுத்ததாக நடிகர் தனுஷை வைத்து அவரது 54-வது படம் இயக்க உள்ளது குறித்து இன்று தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஸ்னல் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக பிரபல நடிகை மமிதா பைஜுவை நடிப்பதும் இந்த அறிவிப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ள நிலையில் படத்தின் பணிகள் இன்று தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் குறித்த அப்டேட்கள் அடுத்தடுத்து சினிமா வட்டாரங்களில் வைரலாகி வந்த நிலையில் இன்று படக்குழு அதிகாரப்பூர்வ அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் நடிகர் தனுஷ் மற்றும் விக்னேஷ் ராஜா கூட்டணியில் உருவாக உள்ள இந்தப் படத்தில் நடிகர்கள் ஜெயராம், சுராஜ் வெஞ்சரமுடு, கருணாஸ், ப்ரித்வி பாண்டியராஜ், நிதின் சத்யா, காவ்யா ஸ்ரீராம் என பலர் இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளனர். இதில் நடிகர் ஜெயராம் பல வருடங்களாகவே தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். ஆனால் நடிகர் சுராஜ் சமீபத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான வீர தீர சூரன் பாகம் 2 படத்தின் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களிடையே அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று தனுஷின் நடிப்பில் உருவக உள்ள படத்தின் அப்டேட் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Also Read… அட்லி படத்திற்காக மீண்டும் இணையும் நடிகர்கள் அல்லு அர்ஜுன் – ராஷ்மிகா மந்தனா?

D 54 படம் குறித்து படக்குழு வெளியிட்ட அதிகராப்பூரவ அறிவிப்பு:

Also Read… ஜானகி v/s ஸ்டேட் ஆஃப் கேரளா படத்தின் பெயரை மாற்ற படக்குழு சம்மதம்

நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாக உள்ள படங்களின் அப்டேட்:

நடிகர் தனுஷ் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் குபேரா. இந்தப் படம் தமிழ் ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் மற்ற மொழிகளில் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து இட்லி கடை மற்றும் தேரே இஸ்க் மெய்ன் ஆகிய இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது.

அதன்படி நடிகர் தனுஷ் இயக்கி நாயகனாக நடித்துள்ள இட்லி கடை படம் வருகின்ற அக்டோபர் மாதம் 1-ம் தேதி 2025-ம அண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடிகர் தனுஷ் இந்தியில் இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் நடித்து வரும் தேரே இஸ்க் மெய்ன் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் போஸ்ட் புரடெக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.