மீண்டும் வருகிறார் இரும்போரை அரசன்.. ‘மரகத நாணயம் 2’ அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது!
Maragadha Naanayam 2 Update : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர் ஆதி. இவரின் நடிப்பில் கடந்த 2017ம் ஆண்டில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப்பெற்ற படம்தான் மரகத நாணயம். இந்த படத்தின் பாகம் 2 உருவாகுவதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மரகத நாணயம் 2 திரைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ஆதி (Aadhi). இவரின் நடிப்பில் தமிழ் மொழியை காட்டிலும் தெலுங்கில் பல படங்கள் தயாராகிவருகிறது. இவர் இறுதியாக தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் அகண்டா பார்ட் 2 (Akhanda 2) படத்தில் முக்கிய வில்லனாக நடித்திருந்தார். இவரின் நடிப்பில் வெளியான இப்படம் மக்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. அந்த விதத்தில் இந்த படமும் வசூலில் தெலுங்கு சினிமாவில் அதிகமாகவே வசூலித்திருந்தது . இந்த படத்தை தொடர்ந்து இவரின் நடிப்பிலும் புது புது படங்கள் தயாராகிவருகிறது. அந்த விதத்தில் இவர் தமிழில் நடித்து சிறந்த வரவேற்பை கொடுத்த திரைப்படம்தான் மரகத நாணயம் (Maragadha Naanayam). கடந்த 2017ம் ஆண்டில் வெளியான இப்படத்தை இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவணன் (ARK.Saravavan) இயக்கியிருந்தார். அசத்தல் காமெடி, திரில்லர் போன்ற கதைக்களத்தில் வெளியான இப்படம் சிறந்த வரவேற்பை பெற்றிருந்தது.
அந்த விதத்தில் இப்படத்தின் பார்ட் 2 திரைப்படம் உருவாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த மரகத நாணயம் பார்ட் 2 (Maragadha Naanayam Part 2) படத்தை, பேஷன் ஸ்டூடியோ மற்றும் ஆர்.டி.சி.மீடியா தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரித்துவருகிறது.
இதையும் படிங்க: தலைவர் 173 படம் குறித்து முக்கிய அப்டேட்டை சொன்ன ரஜினிகாந்த் – வைரலாகும் வீடியோ
மரகத நாணயம் பார்ட் 2 திரைப்படம் குறித்து வெளியாகி அறிவிப்பு வீடியோ :
The curse returns and the king’s hunt reloads 🔥#MaragadhaNaanayam2 officially takes off with a stellar crew. Adding to the excitement, @priyabhavanishankar and #Sathyaraj join the star-studded and our favourite lineup of #MaragadhaNaanayam !
A new chapter begins ⭐️
— Passion Studios (@PassionStudios_) January 15, 2026
இந்த மரகத நாணயம் பார்ட் 2 திரைப்படத்தில் நடிகர் ஆதி கதாநாயகனாக நடிக்க, அவருடன் நடிகை பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் நடிகர்கள் சத்யராஜ், நிக்கி கல்ராணி, அனந்த ராஜ், டேனியல் மற்றும் அருண்ராஜ் போன்ற நடிகர்களும் மிக முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதக் கூறப்பட்டுள்ளது. இந்த பார்ட் 2 படத்தையும் இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்க, இதற்கு இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் இசையமைக்கவுள்ளார்.
இதையும் படிங்க: தனுஷின் 54 படத்தின் டைட்டில் என்ன தெரியுமா? வெளியானது சூப்பர் அப்டேட்
இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடவுள்ள நிலையில், வரும் 2026 ஆண்டு இறுதியில் அல்லது 2027ம் ஆண்டு தொடக்கத்தில் இப்படம் வெளியாகும் என கூறப்படுகிறது. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இப்படம் இல்லாமல், அதற்கு முன் நடந்த சம்பவத்தை மையமாக கொண்டு இப்படம் தயாராகவுள்ளதாம். இப்படம் சுமார் ரூ 100 கோடி பட்ஜெட்டில் தயாராகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தின் அப்டேட்டுகளும் தொடர்ந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.