Thalapathy Vijay : எப்போதும் தமிழ் மட்டும்தான்.. மற்ற மொழி படங்களில் நடிப்பது குறித்து தளபதி விஜய் சொன்ன கருத்து!
Vijay About Other Language Films : தளபதி விஜய் என்றாலே ரசிகர்கள் கூட்டம் ஏராளம் உண்டு. அந்த வகையில் சினிமாவில் முன்னணி நாயகனாக நடித்து, தற்போது அரசியலிலும் தளபதி விஜய் இறங்கியுள்ளார். இந்நிலையில் இவர் முன்னதாக பேசியிருந்த நேர்காணல் ஒன்றில் மற்ற மொழி மற்றும் இன்டர்நேஷனல் படங்களில் நடிக்காதது பற்றிப் பேசியிருக்கிறார். அதைப் பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.

தளபதி விஜய்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நாயகனாக இருப்பவர் தளபதி விஜய் (Thalapthy Vijay) . ரஜினி , கமல் ஹாசன் போன்ற முன்னணி நட்சத்திரங்களில் வரிசையில் இவரும் இருக்கிறார். தமிழ் சினிமாவில் தனது தந்தை எஸ் .ஏ. சந்திரசேகரின் (S.A. Chandrasekhar) படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார் விஜய். அதிக தொடர்ந்து அடுத்தடுத்த இயக்குநர்களின் படங்களில் நடித்து ஹிட்டாக தொடங்கினார். தமிழ் சினிமாவில் மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்து இன்றுவரையிலும் அவர் முன்னணி நாயகனாகவே இருந்துவருகிறார் . இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் இறுதியாக வெளியான திரைப்படம் கோட் (GOAT). இதை இயக்குநர் வெங்கட் பிரபு (Venkat Prabhu) இயக்கியிருந்தார். கடந்த 2024ம் ஆண்டு வெளியான இப்படமானது பெரும் வரவேற்பைப் பெற்று ஹிட்டானது. சுமார் ரூ. 450 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது . இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தனது இறுதி படமான ஜன நாயகனை (Jana Nayagan) அறிவித்திருந்தார்.
இந்த படத்தை இயக்கம் வாய்ப்பு இயக்குநர் ஹெச். வினோத்திற்குக் (H. Vinoth) கிடைத்தது. தளபதி விஜய்யின் இறுதி பாடம் என்பதால் பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகிவருகிறது. இந்நிலையில் தளபதி விஜய் முன்னதாக பேசியிருந்த பேட்டி ஒன்றில் மற்ற மொழி மற்றும் இன்டர்நெஷனல் மொழி படங்களில் நடிக்க ஆசை இருக்கிறதா என்பது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு விஜய் கொடுத்த பதில் மிகவும் ஆச்சர்யாமாக இருக்கிறது.
மற்ற மொழி படங்களில் நடிக்க ஆசையா என்பது குறித்து விஜய் பேச்சு
தளபதி விஜய் முன்னதாக பேட்டி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் தொகுப்பாளர், தமிழில் பல படங்களை ஹிட் கொடுக்கிறீர்கள், என் அமரர் மொழி படங்களில் நடிக்கவில்லை., மேலும் மற்ற மொழி படங்களில் நடிப்பதற்கு ஆசை இருக்கிறதா என்று கேள்விகள் கேட்கப்பட்டது . அதற்குத் தளபதி விஜய் “என்ன காமெடி பண்ணுறீங்களா?” என்று கேட்டார். அதற்கு மேலும் தொகுப்பாளர் உங்களுக்கு இண்டெர்நேஷனல் படங்களில் நடிப்பதற்கு ஆசை இருக்கிறதா என்றும் கேள்விகள் கேட்கப்பட்டது, அதற்குத் தளபதி விஜய், “எப்போதும் தமிழ்தான்” என்று தனது பதிலைக் கொடுத்திருந்தார்.
இந்த பேட்டி வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் தமிழ் மொழி படங்களைத் தவிர மற்ற மொழிகளில் கதாநாயகனாக இந்தப் படங்களிலும் விஜய் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் விஜய் மற்ற மொழி ரீமேக் படங்களில் நடித்திருக்கிறார் தவிர வேறு மொழியில் கதாநாயகனாக எந்த படத்திலும் நடிக்கவில்லை. மேலும் விஜய்யின் ஹிட் படங்கள் மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு ஹிட் கொடுத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.