Karuppu: ராத்து ராசன் இவன்…. சூர்யாவின் கருப்பு படத்திலிருந்து வெளியான அடுத்த பாடல்!
Raathu Raasan Song: இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் இசையமைப்பில், முதல் முதலில் வெளியாகும் பிக் பட்ஜெட் படம்தான் கருப்பு. இப்படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்க, சூர்யா ஹீரோவாக நடித்துள்ளார். இப்படமானது வெளியீட்டிற்கு தயாராகிவரும் நிலையில், இப்படத்திலிருந்து தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, ராத்து ராசன் என்ற புது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

ராத்து ராசன் பாடல்
கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள திரைப்படம்தான் கருப்பு (Karuppu). இந்த படத்தில் நடிகர் சூர்யா (Suriya) அதிரடி ஆக்ஷன் கதாநாயகனாக நடித்திருக்கும் நிலையில், இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி (Rj Balaji) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் ஏற்கனவே இரு படங்கள் வெளியாகியிருக்கும் நிலையில், தற்போது சூர்யாவின் நடிப்பில் இந்த கருப்பு படத்தை மிகவும் பிரம்மாண்டமாக இயக்கியுள்ளார். இந்த படமானது கிட்டத்தட்ட 1 ஆண்டுக்கும் மேலாக தயாராகிவந்த நிலையில், வரும் 2025 மே 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) நடித்திருக்கும் நிலையில், இருவருமே இப்படத்தில் வழக்கறிஞராக நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் (Sai Abhyankkar) இப்படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில், காட் மோட் (God Mode) மற்றும் நாங்க நாலு பேரு என இரு பாடல்கள் வெளியாகியுள்ளது. இந்த வரிசையில் இன்று (14/04/2026) 2026ம் ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 3வது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. “ராத்து ராசன்” (Raathu Raasan) என்ற இப்பாடல் தற்போது ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவிவருகிறது.
இதையும் படிங்க: வருண் தவான், பூஜா ஹெக்டே – மிருணாள் தாகூரின் புது படம் – வெளியானது ஃபர்ஸ்ட் லுக் டீசர்!
கருப்பு ராத்து ராசன் பாடல் குறித்த பதிவு:
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
The energy spreads all over, it’s nothing less than a FESTIVAL!✨#RaathuRaasan – Third single from #Karuppu out now.💥
A @SaiAbhyankkar Musical 🎶
Lyrics : @Lyricist_Vivek
Singer :…— DreamWarriorPictures (@DreamWarriorpic) April 14, 2026
இந்த ராத்து ராசன் பாடலை சாய் அபயங்கர் இசையமைத்து, மகாலிங்கம் பாடியுள்ளார். மேலும் இதில் பாடலாசிரியர் விவேக் வரிகளை எழுதியுள்ள நிலையில், பாடல் அருமையாக வந்துள்ளது. மேலும் இப்படத்தில் சில இடங்களில் ராப் பாடகர் பால் டப்பா ராப் செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. முற்றிலும் ரெட் கலர் தீமில், தெய்வீகம் கொண்ட இந்த பாடல் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
கருப்பு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஏப்போது:
இந்த கருப்பு படமானது முழுக்க ஆக்ஷன் திரில்லர் மற்றும் தெய்வீகம் கலந்த கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இதில் ஷிவதா, ஸ்வாசிகா, யோகி பாபு, ஆர்.ஜே.பாலாஜி, மன்சூர் அலிகான், இந்திரன்ஸ் போன்ற பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது 2026ம் ஆண்டின் தொடக்கத்தில் மக்களின் பிரம்மாண்ட எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இதையும் படிங்க: தனுஷ் – தமிழரசன் பச்சமுத்து கூட்டணி படத்தின் நடிகை இவரா?
ஜன நாயகன் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு தற்போது கருப்பு படத்தின் மீது பாய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இப்படம் வரும் 2026 மே 14ம் தேதியில் வெளியாக தயார்க்கியுள்ளது. அந்த வகையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 2026 ஏப்ரல் 26ம் தேதியில் மதுரையில் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.