காதலுக்கு பள்ளிக்கூடம் கட்ட போறேன் நானடி… 22 ஆண்டுகளைக் கடந்தது பேரழகன் படம்!

22 Years Of Perazhagan Movie: நடிகர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து நடித்து ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த படம் பேரழகன். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 22 ஆண்டுகள் நிறைவடைந்ததை படக்குழு தற்போது போஸ்டர் வெளியிட்டு கொண்டாடி வருகின்றது.

காதலுக்கு பள்ளிக்கூடம் கட்ட போறேன் நானடி... 22 ஆண்டுகளைக் கடந்தது பேரழகன் படம்!

பேரழகன் படம்

Published: 

06 May 2026 17:28 PM

 IST

தமிழ் சினிமாவில் கடந்த 2004-ம் ஆண்டு மே மாதம் 06-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பேரழகன். இந்தப் படத்தை இயக்குநர் சசி சங்கர் எழுதி இயக்கி உள்ளார். நடிகர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் ஜோடியாக நடித்து இருந்தனர். இவர்கள் இருவருமே இந்தப் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் விவேக், மனோரமா, பாபி, தலைவாசல் விஜய், தேவன், மாணிக்க விநாயகம், கலைராணி, சுகுமாரி, மனோபாலா, டி.பி.கஜேந்திரன், பெரிய கருப்பு தேவர், செல்லதுரை, செல் முருகன், முத்துகாளை, மாளவிகா, சாம்ஸ், பாண்டு, கிளி ராமச்சந்திரன், பாய்ஸ் ராஜன் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் எம். சரவணன், எம்.பாலசுப்ரமணியன், எம்.எஸ். குகன் மற்றும் பி. குருநாத் ஆகியோர் இணைந்து தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசைமைத்த நிலையில் படத்தை போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

22 ஆண்டுகளைக் கடந்தது சூர்யா- ஜோதிகாவின் பேரழகன் படம்:

இந்த பேரழகன் படத்தில் நடிகர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இரட்டை வேடங்களில் நடித்து இருந்த நிலையில் அதில் ஒரு ஜோடி மாற்றுத் திறனாளிகளாக நடித்து இருப்பார்கள். இந்த இரண்டு ஜோடிகளின் வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்பட்டு அவர்களின் வாழ்க்கை என்ன ஆகிறது என்பதே படத்தின் கதை. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 22 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு தற்போது கொண்டாடி வருகின்றது. அது தற்போது வைரலாகி வருகின்றது.

Also Read… ஜன நாயகன் பட ஷூட்டிங்கில் தளபதி விஜயை வெட்கப்பட வைத்த பூஜா ஹெக்டே… வைரலாகும் வீடியோ

பேரழகன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Karuppu: கருப்பு வேட்டை ஆரம்பம்… ஸ்பெஷல் போஸ்ட்டரை வெளியிட்ட சூர்யாவின் கருப்பு படக்குழு!

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..