Rajinikanth: சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவு… சர்வதேச திரைப்பட விழாவில் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ பெரும் ரஜினிகாந்த்!

IFFI Lifetime Achievement Award: தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நாயகனாக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் இந்த வருத்தத்துடன் சினிமாவில் பணியாற்ற தொடங்கி 50 ஆண்டுகளான நிலையில், அவரை கௌரவப் படுத்தும் விதத்தில் 56வது சர்வதேச திரைப்பட விருது விழாவில், இன்று வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது.

Rajinikanth: சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவு... சர்வதேச திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெரும் ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

Published: 

28 Nov 2025 13:18 PM

 IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth) தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்துவருகிறார். இவர் சினிமாவில் நுழைந்து இந்த 2025ம் ஆண்டுடன் 50 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. தனது 75வது வயதிலும் தொடர்ந்து சினிமாவில் கதாநாயகனாகவே நடித்து வருகிறார்.  இவரின் நடிப்பில் கூலி படத்தை அடுத்ததாக மிக பிரம்மாண்டமாக ஜெயிலர் 2 (Jailer 2) படமானது தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு, தலைவர்173 (Thalaivar173) படத்திலும் இணைகிறார். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாவில் 50 வருடத்தை நிறைவு செய்த நிலையில், இவருக்கு அரசியல் பிரபலங்கள் முதல் பல்வேறு சினிமா பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

அந்த வகையில் இவருக்கு நடைபெற்று வரும் 56வது சர்வதேச திரைப்பட விழாவில் (56th International Film Festival of India) வாழ்நாள் சாதனையாளர் விருது (Lifetime Achievement Award) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது ரஜினிகாந்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பலரும் பாராட்டி வருகின்றனர். இன்று 2025 நவம்பர் 28ம் தேதியில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் கலந்துகொண்டு விருதைப் பெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:  கோமாளி படத்தின் கதையை இப்படித்தான் எழுதினேன்… – பிரதீப் ரங்கநாதன் பகிர்ந்த விஷயம்! 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது குறித்து வெளியான பதிவு :

56வது சர்வதேச திரைப்பட விழாவானது கடந்த வாரத்தில் தொடங்கியிருந்தது. இந்த நிகழ்ச்சியானது கோவாவில் நடைபெற்று வரும் நிலையில், பல இந்திய படங்கள் திரையிடப்படுகிறது. அந்த வகையில் சிவகார்த்திகேயனின் அமரன் படம் சமீபத்தில் திரையிடப்பட்ட நிலையில், படக்குழு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தனர். இந்த விருது நிகழ்ச்சியானது இன்று 2025 நவம்பர் 28ம் தேதியோடு முடிகிறது என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க: தொடர்ந்து 8-வது முறையாக ரஜினிகாந்த் படத்தில் ஒப்பந்தமாகும் அனிருத்? வைரலாகும் தகவல்

இந்நிலையில் இன்றுதான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளதாம். இதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கோவாவிற்கு நேற்று 2025 நவம்பர் 27ம் தேதியிலே சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 1975ம் ஆனது முதல் சினிமாவில் கதாநாயகனாக நுழைந்தார். அந்த நாள் முதல் கிட்டத்தட்ட 50 வருடங்களாகவே சினிமாவில் கதாநாயகனாகவே நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் பல படங்கள் வெளியாகியுள்ள நிலையில், இவரின் 50வது சிறப்பு படமாக லோகேஷ் கனகராஜின் கூலி படம் கடந்த 2025 ஆகஸ்ட் மாதத்தில் வெளியானது. இந்த படம் சுமார் ரூ 400 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. இப்படத்தை அடுத்ததாக நெல்சன் திலீப்குமாரின் ஜெயிலர் 2 படத்தில் இவர் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் குறித்து ஸ்மிருதி மந்தனா எடுத்த முக்கிய முடிவு
இந்திய அரசாங்கத்தின் CNAP அமைப்பு.. இதன் நோக்கம் என்ன?
குளிர் காலத்தில் அதிகளவில் டீ, காபி குடிப்பீர்களா? அப்போ உங்களுக்கு தான் இந்த எச்சரிக்கை!
லோன் வாங்கியோருக்கு குட்நியூஸ்.. ரெப்போ வட்டி விகிதம் குறைய வாய்ப்பு!