Thug Life Audio Launch : பீப் சாங் பிரச்னையின் போது போது ரஹ்மான் செய்த செயல் – சிம்பு நெகிழ்ச்சி

Thug Life Audio Launch : மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன் டிஆர், திரிஷா, அபிராமி, அசோக் செல்வன் நடித்துள்ள தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா மே 24, 2025 அன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் பேசிய சிம்பு பீப் சாங் பிரச்னையின் போது தான் மிகுந்த கஷ்டத்தில் இருந்ததாகவும் அந்த சூழ்நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தள்ளிப்போகாதே பாடலை வெளியிட்டதாகவும் பேசியிருந்தார்.

Thug Life Audio Launch : பீப் சாங் பிரச்னையின் போது போது ரஹ்மான் செய்த செயல்  - சிம்பு நெகிழ்ச்சி

சிலம்பரசன் டிஆர்

Published: 

24 May 2025 23:49 PM

மணிரத்னம் (Mani Ratnam) இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் (Kamal Haasan), சிலம்பரன் டிஆர் (Silambarasn TR) உள்ளிட்டோர் நடித்துள்ள தக் லைஃப் (Thug Life) படத்தின் இசை வெளியீட்டு விழா மே 24, 2025 அன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் கமல்ஹாசன், நடிகர் சிம்பு, திரிஷா, இயக்குநர் மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், அபிராமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய அசோக் செல்வன், என்னுடைய குரு கமல்சார். அவர் பேட்டியில் நான் சினிமாவின் மாணவன் எனவே என்னை குரு என்று அழைக்காதீர்கள் என்றார். நானும் சினிமாவின் மாணவன் தான். என்னுடைய சினிமா நீங்கள் தான். விஸ்வரூபம் படப் பிரச்னையின் போது உங்கள் வீட்டு வாசலில் கூடிய நூற்றுக்கணக்கான பேரில் நானும் ஒருவன் என்று பேசினார்.

பீப் சாங் பிரச்னையின்போது உதவிய ரஹ்மான்

 

இதனையடுத்து பேசிய நடிகர் சிம்பு, இந்த இடத்தில் என் தந்தை டி.ராஜேந்தர் மற்றும் அம்மா உஷா ராஜேந்தருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். பிறந்தததில் இருந்தே எனக்கு நடிக்க கற்றுக்கொடுத்து இந்த இடத்துக்கு வர காரணமாக இருந்திருக்காங்க. 40 வருடங்கள் கழித்து கமல் சாரின் படத்தில் நடிக்கக் கூடிய வாய்ப்பு எனக்கு வருது. இந்த இசை வெளியீட்டு விழாவுக்கு என் அப்பாவை வரவேண்டாம் என்று சொன்னேன். காரணம் அவர் ரொம்ப எமோஷனலாவாருனு வேண்டாம் என்றேன். இப்போ நான் எமோஷனலாகிவிட்டேன். மணிரத்னம் சார் பொன்னியின் செல்வன் படத்துக்கு என்னை கூப்பிட்டு கதை சொன்னார். சில காரணங்களால் அந்தப் படத்தில் என்னால் நடிக்க முடியவில்லை. தக் லைஃப் படத்துக்கும் என்னைக் கூப்பிட்டு கதை சொன்னார்.

முதலில் வேறு படத்தில் நடிப்பதற்காக கெட்டப் மாற்றியிருந்தேன். அதன் காரணமாக இந்தப் படத்தில் நடிக்க முடியாமல் இருந்தது. அந்தப் படம் தாமதமானதால் மீண்டும் எனக்கு தக் லைஃப் வாய்ப்பு வந்தது. நான் நடித்தது மாஸ் மசாலா படங்கள் என்பதால் மணிரத்னம் படத்தில் நடிக்க முடியாது போல என நினைத்தேன். காரணம் நான் நடித்தது எல்லாம் மாஸ் மசாலா படங்கள் தான். அந்த நேரத்தில் தயாரிப்பாளர் சங்கத்தில் என் மீது ரெட் கார்டுலாம் போட்டாங்க. அப்போது என் மீது நம்பிக்கை வைத்து மணிரத்னம் செக்கச்சிவந்த வானம் படத்துக்கு வாய்ப்பு கொடுத்தார்.

பீப் சாங் வந்தபோது எனக்கு கடினமான நேரமாக இருந்தது. அப்போது எனக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று தன்னுடைய பயணங்களை ரத்து செய்துவிட்டு தள்ளிப்போகாதே பாடலை பண்ணிக்கொடுத்தார் ரஹ்மான் சார். அதனை நான் என்றைக்கும் மறக்க மாட்டேன் என்று பேசினார்