Sreeleela: முதல் முறையாக என் நடிப்புக்காக பாராட்டு.. பராசக்தி படம் குறித்து எமோஷனலாக பேசிய ஸ்ரீலீலா!

Sreeleela Emotional Speech: தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர்தான் ஸ்ரீலீலா. இவரின் தமிழ் அறிமுக படமாக அமைந்திருந்தது பராசக்தி. இந்த படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா,நேற்று 2026 ஜனவரியில் 12ம் தேதியில் நடந்த நிலையில், அதில் தனது நடிப்பிற்கு கிடைத்த பாராட்டு குறித்து ஸ்ரீலீலா பேசியுள்ளார்.

Sreeleela: முதல் முறையாக என் நடிப்புக்காக பாராட்டு.. பராசக்தி படம் குறித்து எமோஷனலாக பேசிய ஸ்ரீலீலா!

ஸ்ரீலீலா

Published: 

13 Jan 2026 23:01 PM

 IST

நடிகை ஸ்ரீலீலா (Sreeleela) கன்னடம் சினிமாவின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இவருக்கு முதல் திரைப்படத்தில் அந்த அளவிற்கு வரவேற்புகள் இல்லை. பின் தெலுங்கில் கடந்த 2021ல் வெளியான “பெல்லி சண்டாட்” (Pelli SandaD) என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் தனது நடனத்தின் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானார். மேலும் தொடர்ந்து அடுத்தடுத்த தெலுங்கு படங்களிலும் கதாநாயகியாகவே நடிக்க தொடங்கியிருந்தார். மேலும் தெலுங்கில் வருக்கு சிறந்த வரவேற்பை கொடுத்த மற்றொரு படமாக அமைந்தது பகவந்த் கேசரி (Bhagavanth Kesari). இதை அடுத்ததாக குண்டூர் காரம் போன்ற பிரம்மாண்ட பட்ஜெட் படங்களிலும் இவர் நடித்திருந்தார். இந்த படங்களின் வரிசையில் தமிழில் இவர் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ள படம்தான் பராசக்தி (Parasakthi).

இயக்குநர் சுதா கொங்கரா மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணியில் வெளியான இப்படத்தில் கதாநாயகியாக நடிகை ஸ்ரீலீலா நடித்திருந்தார். இந்த படமானது வெளியாகி வரவேற்பைப் பெற்றுவரும் நிலையில், நேற்று 2026 ஜனவரி 12ம் தேதியில் வெற்றி சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டிருந்தது. அதில் பேசிய நடிகை ஸ்ரீலீலா, பராசக்தி படத்தின் மூலம் தனது நடிப்பிற்கு நல்ல பாராட்டுக் கிடைத்துள்ளதாக எமோஷனலாக பேசியுள்ளார்.

இதையும் படிங்க: ரசிகர்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு நலன் படமாக இருக்காது – வா வாத்தியார் படம் குறித்து இயக்குநர் நலன் குமாரசாமி!

பராசக்தி பராசக்தி படத்தின் மூலம் தனக்கு கிடைத்த அங்கீகாரம் பற்றி ஸ்ரீலீலா பேச்சு :

அந்த சந்திப்பின்போது பேசிய நடிகை ஸ்ரீலீலா, “இதுவரை எனக்கு கிடைத்த பெரும்பாலான பாராட்டுக்கள் படத்தின் பாடல்களில் நடனமாடியிருந்ததற்கே கிடைத்திருந்தது. ஆனால் முதல் முறையாக என் நடிப்பிற்கு இப்படிப்பட்ட பாராட்டுக்கள் கிடைப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. இந்த பராசக்தி படம் எனக்கு ஒரு சிறந்த அறிமுக திரைப்படமாகவே அமைந்துள்ளது.

இதையும் படிங்க: வா வாத்தியார் பட ரிலீஸை முன்னிட்டு ‘எம்.ஜி.ஆர்’ நினைவிடத்திற்கு சென்ற படக்குழு!

இந்த படத்திற்கான வாய்ப்பை கொடுத்த சுதா மேம் மற்றும் டான் பிக்ச்சர்ஸ் நிறுவனத்திற்கு மிக்க நன்றி. இனி என் பயணத்திற்கு இது ஒரு வலுவான ஒரு அடித்தளமாக இருக்குமே என நான் உணர்கிறேன்” என அதில் அவர் எமோஷனலாக பேசியிருந்தார்.

பராசக்தி படம் குறித்து நடிகை ஸ்ரீலீலா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு :

நடிகை ஸ்ரீலீலா பராசக்தி படத்தில் ரத்னமாலா என்ற தெலுங்கு பெண் வேடத்தில் நடித்திருந்தார். இதில் சிவகார்த்திகேயன் நடித்த செழியன் என்ற கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த் படத்தில் வரின் நடிப்பும் ருமியாக இருந்தது என்று கூறலாம். கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தைச் சிறப்பாகவே செய்துள்ளார். இப்படமானது வெளியாகி 3 நாட்களை கடந்துள்ள நிலையில், பாக்ஸ் ஆபிஸிலில் சுமார் ரூ 65 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விரைவில் இந்த் பராசக்தி படம் ரூ 100 கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகின் முதல் குளோன் ஹைபிரிட் அரிசி வகையை உருவாக்கிய சீனா
மக்களின் துயரத்தை துடைக்கும் போன் பூத்
வெனிசுலா அதிபரை பிடிக்க அமெரிக்க வீரர்கள் சென்ற காட்சி.. AI வீடியோ..
ரஷ்யக் கொடியுடன் கூடிய எண்ணெய் கப்பலை பறிமுதல் செய்த அமெரிக்கா.. ரஷ்யா கடும் எதிர்ப்பு!