“என் அரும் நண்பனே”.. ரஜினிக்கு சிறப்பு பாடல் வெளியிட்டு, உணர்வுபூர்வமாக வாழ்த்திய கமல் தயாரிப்பு நிறுவனம்.. வீடியோ!!

Rajinikanth 75th birthday: அந்த வீடியோவில் 16 வயதினிலே படம் முதல் ரஜினியும், கமலும் இணைந்து பயணித்து வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றது ரசிகர்களை உணர்ச்சிபெங்க வைத்துள்ளது. அதோடு, அவர்கள் இருவருக்கும் இடையேயான நட்பை நினைத்து, இருதரப்பு ரசிகர்களும் நெகிழ்ந்து வருகின்றனர்.

என் அரும் நண்பனே.. ரஜினிக்கு சிறப்பு பாடல் வெளியிட்டு, உணர்வுபூர்வமாக வாழ்த்திய கமல் தயாரிப்பு நிறுவனம்.. வீடியோ!!

ரஜினி, கமல்

Published: 

12 Dec 2025 13:52 PM

 IST

நடிகர் ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாள் கொண்டாட்டம் இன்று விமர்சையாக நடந்து வருகிறது. இதனை ரசிகர்கள் முப்பெரும் விழாவாக கொண்டாடி வருகின்றனர். அதாவது, அவரது 75வது பிறந்தநாள், சினிமாவில் ரஜினிக்கு 50 ஆண்டு நிறைவு, 25 ஆண்டுகளுக்கு பின் படையப்பா படம் ரீ ரிலீஸ் என 3 நிகழ்வாக சேர்த்து அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதனிடையே, அவரது பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், கமல்ஹாசன், தனுஷ் உள்பட ஏராளமான நடிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழ்த் திரையுலகில் தவிர்க்க முடியாத ஆளுமையாக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். திரையுலகில் 50 ஆண்டுகளாக தன் ரசிகர்களை அதே உற்சாகத்துடன் வைத்திருக்கும் அவர், தன் வயதையும் கடந்து தொடர்ந்து தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக நீடித்து வருகிறார். எத்தனை பேர் திரையில் தனக்கு அடுத்து வந்தாலும், தன்னை யாராலும் மிஞ்ச முடியாது என்ற உறுதியுடன் இந்த வயதிலும் நடிப்பில் கோலோச்சி வருகிறார். தமிழ் மட்டுமல்லாது, சீனா, ஜப்பான் என உலகின் பல்வேறு நாடுகளிலும் ரஜினிக்கு தீவிர ரசிகர்கள் இருக்கின்றனர்.

உணர்வுபூர்வமாக வாழ்த்திய கமல் தயாரிப்பு நிறுவனம்:

இதனிடையே, ரஜினி- கமல் நட்பை மையப்படுத்தி அவரது பிறந்தநாளில் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் வாழ்த்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் அதன் ட்விட்டர் பதிவில், ரஜினிகாந்துக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது.

உருக்கமான பாடல்:

அதோடு, “கமல்ஹாசன் உடனான அவரது நட்பு இந்திய சினிமாவில் மிகவும் பொக்கிஷமான பிணைப்புகளில் ஒன்றாகத் தொடர்கிறது” என்றும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது. மேலும், அவர்களது நட்பை குறிக்கும் வகையில் சிறப்பு பாடல் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அந்த பாடலுடன் சேர்த்து AI மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ காட்சிகளையும் வெளியிட்டுள்ளது.

ரசிகர்களை நெகிழ வைத்த வீடியோ:

அந்தப்பாடலில், “உன் போல் யாருமில்லையே.. ஈரேழு உலகம் தேடியுமே.. மாறாத வைரம் உன் அகமே.. என் அரும் நண்பனே.. ஊர் போற்றும் இன்பனே.. நீ தனி நான் தனி என்றில்லை.. என்றுமே நாம் அது நிரந்தரமே” என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், வீடியோவில் கமலும், ரஜினியும் இணைந்து இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றது ரசிகர்களை உணர்ச்சிபெங்க செய்துள்ளது. அதோடு, அவர்கள் இருவருக்கும் இடையேயான நட்பை நினைத்து, இருதரப்பு ரசிகர்களும் நெகிழ்ந்து வருகின்றனர்.

25 மணி நேரம்... உலகின் நீண்ட நேரம் பயணிக்கும் விமானத்தை அறிமுகப்படுத்திய சீனா
ஒவ்வொரு மாதமும் 150 யூனிட் இலவசம், மக்களுக்கு இலவச மின்சாரம் எப்படி கிடைக்கும்?
நீலாம்பரி கதாப்பாத்திரத்துக்கு முதல் சாய்ஸ் யார் தெரியுமா? ரஜினிகாந்த் பகிர்ந்த சீக்ரெட்
உத்திரப்பிரதேசத்தில் தொடரும் ஓநாய் தாக்குதல்.. பீதியில் பொதுமக்கள்..