ரஜினிகாந்த் எழுதும் கதை.. நிச்சயம் பிரம்மாண்டமாக இருக்கும் – சௌந்தர்யா ரஜினிகாந்த்!

Soundarya Rajinikanth About Rajinikanth Story: தமிழ் சினிமாவில் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக இருந்துவருபவர் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவரின் தயாரிப்பில் வித் லவ் என்ற படமானது வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்றுவருகிறது. ரஜினிகாந்த் ஒரு பிரம்மாண்ட படத்தின் கதையை எழுதவுள்ளார் என்பது குறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் அப்டேட் கொடுத்துள்ளார்.

ரஜினிகாந்த் எழுதும் கதை.. நிச்சயம் பிரம்மாண்டமாக இருக்கும் - சௌந்தர்யா ரஜினிகாந்த்!

ரஜினிகாந்த் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த்

Published: 

29 Jan 2026 19:12 PM

 IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) மகளும், தமிழ் சினிமாவில் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக படங்களை உருவாக்கிவருபவர் சௌந்தர்யா ரஜினிகாந்த் ( Soundarya Rajinikanth ). இவர் தயாரிப்பாளராக இயக்குநரும், நடிகருமான அபிஷன் ஜீவிந்தின் ( Abhishan Jeevinth ) “வித் லவ்” (With Love) என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கி கிட்டத்தட்ட 45 நாட்களிலேயே இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக முடிந்த நிலையில், இத போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவந்தது. இந்நிலையில் இப்படம் வரும் 2026ம் ஆண்டு பிப்ரவரி 6ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சிறப்பாக நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய சௌந்தர்யா ரஜினிகாந்த்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிரம்மாண்ட படம் ஒன்று கதையை எழுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார். அது வேற எந்த திரைப்படமும் இல்லை படையப்பா 2 ( Padayappa 2) படம்தான். இப்படத்தின் கதையை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எழுதிவருவதாகவும், அது குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: போன் கூட எடுக்கமாட்டார்கள்.. பாலிவுட் சினிமா அவமானம் குறித்து மனம் திறந்த ரகுல் ப்ரீத் சிங்!

படையப்பா 2 படம் குறித்து சௌந்த்யா ரஜினிகாந்த் கொடுத்த அப்டேட்:

அந்த நேர்காணலில் பேசிய சௌந்தர்யா ரஜினிகாந்த் அதில் “கடந்து வந்த 25 ஆண்டுகளாக படையப்பா படத்தின் கதையை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எழுதியதாக நாங்கள் எங்குமே தெரிவித்ததில்லை. மேலும் தற்போது படையப்பா 2 படத்தின் ஐடியாவை விடவும், அந்த கதை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திடம் தயாராகவுள்ளது.

இதையும் படிங்க: STR ஃபேன்… இணையத்தில் வைரலாகும் பூக்கி படத்தின் 2-வது புரோமோ வீடியோ

அது நிச்சயமாக மிக பிரம்மாண்டமாக வெளிவரும். ஆனால் அந்த படத்தை யார் இயக்க போகிறார்கள், மற்றும் அந்த படத்தைதான் ஷூட்டிங்  எப்போது நடக்கும் என்பதை நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை” என அவர் அதில் தெரிவித்துள்ளார்.

வித் லவ் படம் குறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட எக்ஸ் பதிவு:

இந்த வித் லவ் படத்தை அறிமுக இயக்குநர் மதன் இயக்க, அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் முழுக்க காதலை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளிப் பருவம், கல்லூரி பருவம் போன்ற கதையை மையமாக கொண்டு தயாராகியுள்ளது. இப்படமானது வரும் 2026 பிப்ரவரி 6ம் தேதியில் வெளியாகவுள்ள நிலையில், இதன் ட்ரெய்லர் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இது குறித்த அறிவிப்புகளை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

40 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிச்சத்திற்கு வந்த அழிந்துபோன பாம்பு இனம்
போர் சூழல்.. பதிலளிக்க தயாராக இருக்கும் ஈரான்..
மீண்டும் ஒரே மேடையில் ஏ.ஆர். ரஹ்மான் - விஜய் சேதுபதி.. எங்கு தெரியுமா?
அமெரிக்காவை புரட்டிப்போட்ட பனிப்புயல்.. சூப்பர் மார்க்கெட்டுகளில் பொருட்களை வாங்கி குவித்த மக்கள்..