தனது 2-வது மகனின் பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடிய சௌந்தர்யா ரஜினிகாந்த் – வைரலாகும் போட்டோஸ்
Soundarya Rajinikanth: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் தான் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவர் பலப் படங்களில் கிராஃபிக்ஸ் டிசைனராகவும் சிலப் படங்களை இயக்கவும் செய்துள்ளார். இந்த நிலையில் இவரது இரண்டாவது மகனின் பிறந்த நாள் கொண்டாட்டப் புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார்.

குடும்பத்தினருடன் சௌந்தர்யா ரஜினிகாந்த்
உலகம் முழுவதும் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்கள் கொண்டாடுபவர் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் (Soundarya Rajinikanth) என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குநராக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். அதன்படி ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் கிராஃபிக்ஸ் டிசைனர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருகிறார். அதன்படி கடந்த 1999-ம் ஆண்டு வெளியான படையப்பா படத்தில் இருந்து கிராஃபிக் டிசைனராகப் பலப் படங்களில் பணியாற்றியுள்ளார். அதனைத் தொடர்ந்து கடந்த 2014-ம் ஆண்டு வெளியான கோச்சடையான் படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். அனிமேஷனின் பீரியட் ஆக்ஷன் படமாக வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நாயகனாகவும் நடிகை தீபிகா படுகோனே நாயகியாகவும் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி 2 படத்தினை சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கி இருந்தார். இந்தப் படமும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது சினிமாவில் படங்களை தயாரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார் சௌந்தர்யா ரஜினிகாந்த். அதன்படி தற்போது அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகி வரும் படத்தை தயாரித்து வருகிறார். இது தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.
2-வது மகன் வீரின் பிறந்த நாளை கொண்டாடிய சௌந்தர்யா ரஜினிகாந்த்:
இந்த நிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்த் அவரது இரண்டாவது மகனின் பிறந்த நாளை குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார். மேலும் இதுகுறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது, பெற்றோர்கள் மீண்டும் குழந்தைகளாக மாறும்போது, தாத்தா பாட்டியின் அன்பு நம் குழந்தைகளைச் சுற்றி ஒரு கேடயமாக நிற்கும்போது… வாழ்க்கை எவ்வளவு அழகானது என்பதை நீங்கள் உணரும்போது. எங்கள் அன்பான வீர் பாப்பா, 3வது பிறந்தநாள் வாழ்த்துக்கள். எல்லாவற்றிற்கும் கடவுளுக்கு நன்றி என்று தெரிவித்து இருந்தார்.
Also Read… Samantha: 1000 கோடி வசூல் செய்த படமும் இல்லை அதனால் பதற்றம் இல்லை – சமந்தா அதிரடி பேச்சு!
சௌந்தர்யா ரஜினிகாந்தின் எக்ஸ் தள பதிவு:
✨ When parents turn into children again, and when grandparents’ love stands like a shield around our little ones … that’s when you realize how truly beautiful life is. ❤️
Happy 3rd Birthday, our dearest Veer Papa 🎂🎉
Thank you God for everything 🙏🏻🙏🏻❤️❤️#VeerTurns3…— soundarya rajnikanth (@soundaryaarajni) September 14, 2025
Also Read… துணிவு படம் எனது சினிமா வாழ்க்கையே மாற்றியது – இயக்குநர் எச். வினோத்