Killer : எஸ்.ஜே. சூர்யா மற்றும் ப்ரீத்தி அஸ்ரானியின் ‘கில்லர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

SJ Suryahs Killer Movie First Look : நடிகர் எஸ்.ஜே. சூர்யா சுமார் 10 வருடங்களுக்குப் பின், மீண்டும் இயக்குநராக இயக்கும் படம்தான் கில்லர். இந்த படத்தில் அவரே கதாநாயகனாகவும் நடித்தது வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் ஆரம்பமான நிலையில், இப்படத்தின் முதல் பார்வையையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்த முதல் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் படு வைரலாகி வருகிறது.

Killer : எஸ்.ஜே. சூர்யா மற்றும் ப்ரீத்தி அஸ்ரானியின் கில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

SJ சூர்யா மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி

Updated On: 

19 Jul 2025 20:33 PM

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் உதவி இயக்குநராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய எஸ்.ஜே. சூர்யா (SJ Suryah), அதன் பின் இயக்குநராக அஜித் குமார் (Ajith Kumar) முதல் தளபதி விஜய் (Thalapathy Vijay) வரை முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கியிருக்கிறார். அதைத் தொடர்ந்து படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருந்தார். தற்போது மற்ற நடிகர்களின் படங்களில் வில்லன் மற்றும் சிறப்பு கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகிறார். இவர் கதாநாயகனாக சில படங்களில் நடித்திருக்கும் நிலையில், மீண்டும் அவரின் இயக்கத்தில் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். சுமார் 10 வருடங்களுக்குப் பின் மீண்டும் படங்களை இயக்க ஆரம்பித்துள்ள நடிகர் எஸ்.ஜே. சூர்யா, கில்லர் (Killer) என்ற படத்தை இயக்கிவருகிறார்.

இந்த படத்தில் அவரே கதாநாயகனாக நடிக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாக நடிகை ப்ரீத்தி அஸ்ரானி (Preethi Asrani) நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே தமிழில் கிஸ் மற்றும் அயோத்தி போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் இவர்களின் கூட்டணியில் உருவாகிவரும் இப்படத்தின் முதல் வெளியாகியுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : அனுஷ்காவின் ‘காதி’ படத்துடன் மோதும் ராஷ்மிகாவின் ‘தி கேர்ள்ஃபிரண்ட்’ ?

எஸ்.ஜே. சூர்யா வெளியிட்ட கில்லர் படத்தின் முதல் பார்வை பதிவு :

10 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இயக்குநராக எஸ்.ஜே. சூர்யா

நடிகர் எஸ்.ஜே. சூர்யா தற்போது படங்களில் வில்லன் மற்றும் நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் வெளியான பல படங்கள் சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. தனுஷ் முதல் விஜய் வரை பல்வேறு பிரபலங்களின் படங்களில் நெகடிவ் ரோலில் நடித்து அசத்தியிருக்கிறார். இவரின் இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் இசை.

இதையும் படிங்க : அஜித் சாருடன்தான் அடுத்த படம்.. AK64 படத்தை இயக்குவதை உறுதி செய்த இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்!

கடந்த 2015ம் ஆண்டு வெளியான இப்படத்திற்குப் பின் சுமார் 10 வருடத்திற்கு அடுத்தாக மீண்டும் படத்தை இயக்கவுள்ளார். அவர் இயக்கும் இந்த கில்லர் படத்தில் அவரே ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் ஆரம்பமான நிலையில், முதற்கட்ட ஷூட்டிங் வரும் 2025 ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் ஆரம்பமாகும் எனக் கூறப்படுகிறது.

கில்லர் திரைப்படத்தின் ஷூட்டிங் :

எஸ்.ஜே. சூர்யாவின் கில்லர் படத்தின் ஷூட்டிங் 2025 ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கவுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் வெளிநாடுகளில் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தைக் கோகுலம் மூவிஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் தயாரித்து வருகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானை இசையமைக்கவுள்ளார்.

இவர் இறுதியாக எஸ்.ஜே. சூர்யாவின் இயக்கத்தில் வெளியான புலி என்ற தெலுங்கு படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்நிலையில் அந்த படத்திற்குப் பின் மீண்டும், எஸ்.ஜே. சூர்யாவுடன் கூட்டணியில் கில்லர் படத்தில் இணைந்துள்ளார். இப்படமானது வரும் 2026ம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியிடுவதற்குப் படக்குழு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.