இது அண்ணன் தம்பி பொங்கல்… ஜனநாயகன் vs பராசக்தி – சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சிவகார்த்திகேயன்
Sivakarthikeyan About Parasakthi : பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், நாங்கள் இந்தப் படத்தை 82 நாட்களில் முடித்தோம். என்னுடைய காட்சிகள் 67 நாட்கள் படமாக்கப்பட்டன. சுதா மேம் மற்றும் அவர் டீம் இல்லைனா இந்த மாதிரியான பெரிய படத்தை இவ்வளவு குறைவான நாட்களில் எடுக்க முடியாது என்றார்.

விஜய் - சிவகார்த்திகேயன்
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் பராசக்தி. இது ஜிவி பிரகாஷ் குமாரின் 100வது படம் என்பதும், சிவகார்த்திகேயனின் 25வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை டான் பிக்சர்ஸ் சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ளார். இந்தப் படம் வருகிற ஜனவரி 10, 2026 அன்று பொங்கலை முன்னிட்டு வெளியாகிறது. அதற்கு முதல் நாள் நடிகர் விஜய்யின் கடைசிப் படமான ஜனநயாகன் வெளியாகிறது. இதனையடுத்து இரண்டு படங்களுக்கும் பாக்ஸ் ஆபிசில் போட்டி ஏற்படும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா ஜனவரி 3, 2026 அன்று மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
‘பராசக்தி பவர் ஃபுல்லாக இருக்கும்’
பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், நாங்கள் இந்தப் படத்தை 82 நாட்களில் முடித்தோம். என்னுடைய காட்சிகள் 67 நாட்கள் படமாக்கப்பட்டன. சுதா மேம் மற்றும் அவர் டீம் இல்லைனா இந்த மாதிரியான பெரிய படத்தை இவ்வளவு குறைவான நாட்களில் எடுக்க முடியாது. ஸ்ரீலீலா நல்ல பெர்ஃபார்மர், நல்ல டான்சர், பராசக்தி பவர்பராசக்தி ரொம்ப பவர்ஃபுல்லான டைட்டில் அது போலவே இந்த படமும் ரொம்ப பவர்ஃபுல்லாக இருக்கும்.
மேலும் நடிகர் ரவி மோகன் குறித்து பேசிய அவர், ரவி சார்… உங்களை பார்த்ததும் என் கல்லூரி நாட்கள் நினைவுக்கு வந்துச்சு. நான் கல்லூரியில் படிக்கும்போது உங்கள் படங்களை தொடர்ந்து பார்த்தவன். குறிப்பாக எம்.குமரன் படத்தில் உங்கள் உடை, ஸ்டைல் எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும். ஒருநாள் சுதா மேம் வந்து, இந்த படத்தில் நடிக்க ரவி சார் ஓகே சொல்லிட்டார் அப்படினு சொன்னாங்க. உடனே நான் தலைவர் மோடுக்கு போயிட்டு, எது… ஜெயம் ரவியானு ரியாக்ட் பண்ணிட்டேன். சந்தோஷப்பட வேண்டிய விஷயம் தான், ஆனாலும் அதே நேரத்தில் ஒரு பெரிய ஆச்சரியமும் இருந்துச்சு.
தனி ஒருவன் படத்தில் அரவிந்த் சுவாமி எவ்வளவு சக்திவாய்ந்த வில்லனாக இருந்தாரோ, அதே மாதிரி பராசக்தியில் ரவி சார் ஒரு மிகப் பவர்ஃபுல் வில்லன் கதாபாத்திரத்தில் வருகிறார். திரையில் உங்களோடு நெருக்கமாக நடிக்கக் கிடைத்த ஒவ்வொரு நாளையும் நான் மனதார ரசித்தேன் என்றார்.
இது அண்ணன் – தம்பி பொங்கல்
முதலில் நாங்கள் தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டோம். அந்த நேரத்தில் ஜனநாயகன் வெளியாகவுள்ளதாக சொன்னார்கள். அதனால் நாங்கள் பொங்கலுக்கு ரிலீஸ் தேதியை மாற்றினோம். ஜனநாயகனும் பொங்கலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நான் உடனே ஆகாஷ் பாஸ்கரனுக்கு கால் பண்ணி, தளபதி விஜய் சார் படம் பொங்கலுக்கு வருது என சொன்னேன். அவர் நான் ஏற்கனவே விநியோகிஸ்தர்களிடம் சொல்லிவட்டோம் என்றார்.
உடனடியாக நான் ஜெகதீஷ்க்கு போன் செய்து பராசக்தியும் பொங்கலுக்கு வருது என சொன்னேன். அதற்கு அவர் பிரச்னை இல்லை. இரண்டு படங்களும் பொங்கலுக்கு வரட்டும் என்றார். அதற்கு உங்களுக்கு பிரச்னை இல்லை. எனக்கு தான் பிரச்னை. அது தளபதியின் கடைசி படம். எனக்காக விஜய் சாரிடம பேச முடியுமா என கேட்டேன். அவர் தளபதி சொன்னதாக, சூப்பர் பா வரட்டும். நீங்கள் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து சொன்னதாக சொல்லுங்கள் என்றாராம். இன்னும் சொல்றேன். யாரு என்ன வேணா சொல்லட்டும். இது அண்ணன் தம்பி பொங்கல் என்றார்.
மாணவர்களின் சக்தி என்ன என்பதை இதில் காட்டியிருக்கிறோம். மொழிக்காக தியாகம் செய்தவர்களை பெருமைப்படுத்தி இருக்கிறோம். சுதா மேம் என்னிடம் முதலில் ஒரு காதல் கதையை சொன்னார். நல்ல பவர்ஃபுல்லான கதை வேண்டும் என்று கேட்டேன். இந்த கதையின் ஒன்லைன் சொல்லி ஸ்கிரிப்ட் கொடுத்தார். ஸ்கிரிப்ட் முழுவதும் ஆங்கிலத்தில் இருந்தது. ஷூட்டிங்கின் போது கூட காட்சிகளை ஆங்கிலத்தில் தான் விவரிப்பார். அது எனக்கு சிரமமாக இருக்கிறது என்றவுடன் தமிழிலேயே காட்சிகளை விளக்கினார்.