Sivakarthikeyan: மெரினா படத்தின்போது பாண்டிராஜ் சார் கேட்ட விஷயம்- ஓபனாக சிவகார்த்திகேயன் பேச்சு!
Sivakarthikeyan About Wheelie Atrocity From Marina Shooting: தமிழ் சினிமாவில் இளம் நடிகராக பிரம்மாண்ட பட்ஜெட் படங்களில் நடித்துவருபவர் சிவகார்த்திகேயன். இவர் முன்னதாக நேர்காணல் ஒன்றில் மெரினா படத்தின்போது இயக்குநர் பாண்டிராஜ் சார் கேட்ட விஷயம் குறித்து மனம் திறந்துள்ளார். அது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

சிவகார்த்திகேயன் மற்றும் பாண்டிராஜ்
நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவராக இருந்துவருகிறார். இவரின் இறுதியாக பராசக்தி (Parasakthi) என்ற திரைப்படம் வெளியாகியிருந்தது. இந்த படத்தை இயக்குநர் சுதா கொங்கரா (Sudha Kongara) இயக்கியிருந்த நிலையில், சிவகார்த்திகேயன், அதர்வா மற்றும் ரவி மோகன் (Ravi Mohan) உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது கடந்த 2026 ஜனவரி 10ம் தேதியில் வெளியாகியிருந்த நிலையில், கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது. மேலும் இவர் இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் புது படத்தில் இணைந்துள்ளார். இந்த படமானது அறிவியல் புனைக்கதைகளை மையமாக கொண்டு உருவாக்கப்படவுள்ளதாம். இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகளை சிவகார்த்திகேயன் மற்றும் வெங்கட் பிரபு (venkat Prabhu) இருவரும் கடந்த 2025ம் ஆண்டு இறுதியில் அமெரிக்கா சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இப்படத்தை அடுத்ததாக மேலும் புது படங்களுக்கான கதையை சிவகார்த்திகேயன் கேட்டுவருகிறாராம். இந்நிலையில் முன்பு ஒரு நேர்காணலில் பேசிய சிவகார்த்திகேயன், பாண்டிராஜன் (Pandiraj) இயக்கத்தில் நடித்த மெரினா பட ஷாட்டிங்கின்போது நடந்த நகைச்சுவையான சம்பவம் குறித்து பேசியுள்ளார்.
இதையும் படிங்க: எனக்கு அதன் மீது எப்போதும் நம்பிக்கை இருந்ததில்லை – ஓபனாக பேசிய விஜய் சேதுபதி!
இயக்குநர் பாண்டிராஜ் குறித்து சிவகார்த்திகேயன் பகிர்ந்த விஷயம் :
அந்த நேர்காணலில் நடிகர் சிவகார்த்திகேயன், ” மெரினா படத்தில் முதல் முதலில் ஒப்பந்தமாகும்போது இயக்குநர் பாண்டிராஜ் சார் என்னிடம் கேட்ட முதல் கேள்வி, “உங்களுக்கு பைக்கில் வீலிங் பண்ண தெரியுமா?” என்றுதான். நானும் உடனே வாய்ப்பு கிடைக்கிறதே என “ஆம், நல்ல தெரியும் சார், என்னோட காலேஜ் டைமில் பண்ணிருக்கேன்னு” சொல்லிட்டேன். அதன் பின் பெசன்ட் நகர் பீச்சில் வீலிங் செய்யும் சாட் தான் முதலிலே எடுக்கப்போறோம்னு சொல்லிட்டாரு.
இதையும் படிங்க: அங்க நான் தப்பு பண்ணிட்டேன்.. மொத்தம் 84 டேக் – மிஷ்கின் சொன்ன சுவாரஸ்ய சம்பவம்!
உடனே ஷாட் ரெடி ஆயிட்டு, நானும் வீலிங் பண்ணுறது மாதிரியே, பைக்கை திருக்கிக்கொண்டே இருக்கேன். பைக் ஆப் ஆகிகிட்டே இருந்துச்சி. அப்போதுதான் பாண்டியராஜ் சார் நினைச்சிருப்பாரு வாய்ப்பு கிடைப்பதற்காக பையன் நம்மட பொய் சொல்லிருக்கானு முறைத்துக்கொண்டு இருந்தார்” என அதில் அவர் தெரிவித்திருந்தார்.
நடிகர் சிவகார்த்திகேயனின் இன்ஸ்டாகிராம் பதிவு :
நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் பாண்டிராஜ் கூட்டணியில் கடந்த 2012ம் ஆண்டில் வெளியானது. இதில் சிவகார்த்திகேயன் மற்றும் ஓவியா இணைந்து நடித்திருந்தனர். காமெடி மற்றும் எமோஷனல் கதைக்களத்தில் இப்படம் வெளியாகியிருந்த நிலையில், மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்படம்தான் சிவகார்த்திகேயனின் முதல் படமாக அமைந்திருந்தது. இதன் பிறகே தமிழில் அடுத்தடுத்த படங்களில் கதாநாயகனாக நடித்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.