பராசக்திக்கு பிறகு சிவகார்த்திகேயனுடன் இணையும் இயக்குநர் இவர்தான்? ஷூட்டிங் எப்போது தெரியுமா?

Sivakarthikeyan's Next Movie: தமிழ் சினிமாவில் பிரபலமான நாயகனாக இருந்துவருபவர் சிவகார்த்திகேயன். இவரின் நடிப்பில் தமிழில் தொடர்ந்து பிரம்மாண்ட படங்கள் உருவாக தொடங்கியுள்ளது. அந்த வகையில் பராசக்தி படத்தை அடுத்ததாக பல படங்ககளை கையில் வைத்திருக்கும் நிலையில், எந்த இயக்குநருடன் இணைகிறார் என்பது தொடர்பான தகவல் இணையத்தில் வைரலாகிவருகிறது.

பராசக்திக்கு பிறகு சிவகார்த்திகேயனுடன் இணையும் இயக்குநர் இவர்தான்? ஷூட்டிங் எப்போது தெரியுமா?

சிவகார்த்திகேயன்

Published: 

13 Nov 2025 20:30 PM

 IST

நடிகர் சிவகார்த்திகேயனின் (Sivakarthikeyan) நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் மதராஸி. இந்த படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் (AR.Murugadoss) இயக்கியிருந்த நிலையில், கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இப்படமானது வெளியாகியிருந்தது. அந்த வகையில் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ருக்மிணி வசந்த் (Rukmini Vasanth) நடித்திருந்தார். இந்த படமானது சிவகார்த்திகேயனுக்கு கலவையான விமர்சனங்களை கொடுத்திருந்தது. இவர்களின் ஜோடி முதல் முறையாக இந்த படத்தில்தான் இணைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை அடுத்ததாக பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவந்தார். இந்த படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்த நிலையில், வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை அடுத்ததாக சிவகார்த்திகேயனின் கைவசம் கிட்டத்தட்ட 3 படங்கள் உள்ளது.

அந்த வகையில் சிவகார்த்திகேயன் 2 படங்களில் ஒரே நேரத்தில் இணைவதாக கூறப்படுகிறது. பராசக்தி (Parasakthi) படத்தை அடுத்ததாக சிபி சக்கரவர்த்தியின் (Cibi Chakravarthy) இயக்கத்தில் உருவாகும் படத்தில் சிவகார்த்திகேயன் இணைவதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் பற்றிய தகவல்களும் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க :  சின்ன வயசு க்ரஷ் யார்? ரசிகரின் கேள்விக்கு நடிகை ராஷ்மிகா ஓபன் டாக்

டான் திரைப்பட இயக்குநருடன் மீண்டும் இணையும் சிவகார்த்திகேயன்

இந்த பராசக்தி படத்தை அடுத்ததாக உடனே சிவகார்த்திகேயன், டான் படத்தை இயக்கி வெற்றிகொடுத்த சிபி சக்கரவர்தியின் இயக்கத்தில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் நிறைவடைய உள்ளதாகவும், இப்படத்தின் ஷூட்டிங் வரும் 2025 டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீலீலாதான் நடிக்கவுள்ளாராம்.

இதையும் படிங்க: இயக்குநர் மகிழ் திருமேனி அடுத்து இயக்க போவது இவரா? வைரலாகும் தகவல்

ஆரம்பத்தில் இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பதாக ஒப்பந்தமான நிலையில், அவர் தற்போது பிரம்மாண்ட படங்களில் பிஸியான நிலையில் நேரமின்மை காரணமாக அவர் விலகியதாக கூறப்படுகிறது. இதை அடுத்ததாக நடிகை ஸ்ரீலீலா 2வது முறையாக சிவகார்த்திகேயனுடன் இணையவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் தொடர்பான அதிராகப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.

பராசக்தி படம் குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்ட எக்ஸ் பதிவு :

சிவகார்த்திகேயனின் நடிப்பில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவரும் படம்தான் பராசக்தி. இந்த இடமானது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகவுள்ளது. மேலும் இப்படம் தளபதி விஜயின் ஜன நாயகன் வெளியாகி 6 நாட்களுக்கு பின் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தத்க்கது.