யாரும் எதிர்பார்க்காத காம்போ.. சியான்63 படத்தில் விக்ரமிற்கு ஜோடியாகும் பிரபல நடிகை.. யார் தெரியுமா?

Chiyaan 63 Movie Update: தமிழில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சியான் விக்ரம். இவர் அறிமுக இயக்குநரின் இயக்கத்தில் சியான்63 படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக பிரபல நடிகரின் மகள் ஜோடியாக நடிக்கவுள்ளார். அது யார் என்பது குறித்து பார்க்கலாம்.

யாரும் எதிர்பார்க்காத காம்போ.. சியான்63 படத்தில் விக்ரமிற்கு ஜோடியாகும் பிரபல நடிகை.. யார் தெரியுமா?

விக்ரமின் சியான்63 திரைப்படம்

Updated On: 

06 Feb 2026 17:14 PM

 IST

தமிழ் சினிமாவில் பிரம்மாண்டம் முதல் சிறு பட்ஜெட் படங்களில் நடித்துவருபவர் சியான் விக்ரம் (Chiyaan Vikram). இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வீர தீர சூரன் 2 (Veera Dheera Sooran) என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை இயக்குநர் எஸ்.யு. அருண் குமார் (SU. Arun Kumar) இயக்கியிருந்த நிலையில், மக்களிடையே மிக சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக துஷாரா விஜயன் (Dushara Vijayan) நடித்திருந்தார், ஆக்ஷன் கதைக்களத்தில் வெளியான இப்படத்தை அடுத்தாக அறிமுக இயக்குநர் இயக்கத்தில் சியான்63 (Chiyaan63) படத்தில் விக்ரம் இணைந்துள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குநர் போடி கே ராஜ்குமார் (Bodi K. Rajkumar) இயக்க, சாந்தி டாக்கீஸ் நிறுவனமானது தயாரித்துவருகிறது.

இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், இந்த படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக எந்த நடிகை நடிக்கவுள்ளார் என ரசிகர்கள் எதிர்பார்த்துவந்த நிலையில், இப்படத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் (Shruti Haasan) கதாநாயகியாக நடிக்கவுள்ளார். படக்குழுவுடன் ஸ்ருதி ஹாசன் இருக்கும் புகைப்படமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.

இதையும் படிங்க: எனது படங்கள் எல்லாம் புதுமுக இயக்குநர்களோட.. தோல்வியடைந்த இயக்குநர்களுடன்தான் – சசிகுமார் பேச்சு!

சியான்63 படத்தில் கதநாயகியாக இணைந்த நடிகை ஸ்ருதி ஹாசன் குறித்த பதிவு:

இந்த சியான்63 படத்தில் நடிகர் விக்ரம் ஒரு கேங்ஸ்டராக நடிக்கவுள்ளாராம். இப்படத்தை சாண்டி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துவரும் நிலையில், 3BHK படத்திற்கு இசையமைத்த இளம் இசையமைப்பாளர் அம்ரித் ராம்நாத் இசையமைத்துவருகிறார்.

இதையும் படிங்க: தனுஷின் ‘டி55’ படத்தின் ஷூட்டிங் பூஜை.. படக்குழு வெளியிட்ட வீடியோ வைரல்!

இந்த படமானது சுமார் ரூ 100 கோடி பட்ஜெட்டில் தயாராகவுள்ளதாக கூறப்படும் நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் சென்னையில் தொடங்கியுள்ளது. கிட்டத்தட்ட பல ஆண்டுகளுக்கு பின் நடிகர் சியான் விக்ரம் அறிமுக இயக்குநரின் படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சியான் விக்ரமின் புது படம் :

நடிகர் விக்ரம் சியான்63 படத்தின் தொடர்ந்து, 96 மற்றும் மெய்யழகன் பட இயக்குநர் பிரேம் குமாரின் இயக்கத்தில் சியான்64 படத்தில் இணையவுள்ளார். இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படமானது ஆக்ஷன் திரில்லர் கதையில் உருவாகவுள்ளதாகவும், சியான்63 படத்தின் ஷூட்டிங்கிற்கு பின் உடனே இப்படத்தில் விக்ரம் இணையவுள்ளார் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இப்படத்தின் ஷூட்டிங் குறித்தும் விரைவில் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories
With Love Movie: முதல் காதலை தேடி பயணம்.. அபிஷன் ஜீவிந்தின் ‘வித் லவ்’ படம் எப்படி இருக்கு? – விமர்சனங்கள் இதோ!
என்னைக்கும் விடாமுயற்சி…1- வருடத்தை கடந்த அஜித் குமாரின் ‘விடாமுயற்சி’.. படக்குழு வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ!
Atharvaa: நான் பட இயக்குநருடன் கைகோர்த்த அதர்வா.. வெளியானது புது படத்தின் டைட்டில் டீசர்!
WIth Love Movie: ‘வித் லவ்’ பட ரிலீஸ்.. திரையரங்கில் அலைமோதும் ரசிகர்கள் கூட்டம் – வைரலாகும் வீடியோ!
Sasikumar: எனது படங்கள் எல்லாம் புதுமுக இயக்குநர்களோட.. தோல்வியடைந்த இயக்குநர்களுடன்தான் – சசிகுமார் பேச்சு!
Jana Nayagan: தளபதி ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ‘ஜன நாயகன்’ பட ரிலீஸில் புது திருப்பம்!
சிரஞ்சீவி - மோகன்லாலின் மெகா கூட்டணி இணையும் படம் - வெளியான அப்டேட்
அஜித் குமார் - ஆதிக் ரவிச்சந்திரனின் ஏகே 64 - தயாரிப்பாளர் இவரா?
இரு விமானங்களில் இறக்கைகள் உரசியதால் பரபரப்பு
4 கி.மீ கடலில் நீந்தி தனது குடும்பத்தைக் காப்பாற்றிய 13 வயது சிறுவன்