வீடுங்றது மரியாதை… சரத்குமார் – சித்தார்த்தின் 3BHK படத்தின் ட்ரெய்லர் வெளியானது!

3BHK (Tamil) - Official Trailer | நடிகர்கள் சரத்குமார் மற்றும் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் 3 BHK. இந்தப் படம் வருகின்ற ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

வீடுங்றது மரியாதை... சரத்குமார் - சித்தார்த்தின் 3BHK படத்தின் ட்ரெய்லர் வெளியானது!

3 BHK

Updated On: 

26 Jun 2025 12:47 PM

நடிகர் சித்தார்த் (Actor Siddharth) தற்போது நாயகனாக நடித்துள்ள படம் 3 BHK. இந்தப் படத்தை இயக்குநர் ஸ்ரீ கணேஷ் (Director Sri Ganesh) இயக்கி உள்ளார். இவர் முன்னதாக 8 தோட்டாக்கள் மற்றும் குருதி ஆட்டம் ஆகிய படங்களை இயக்கு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் சித்தார்த் உடன் இணைந்து நடிகர்கள் சரத்குமார், தேவயானி, மீத்தா ரகுநாத், சைத்ரா மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்த 3 BHK படத்தை தயாரிப்பாளர் அருண் விஷ்வா தயாரித்துள்ள நிலையில் படத்திற்கு இசையமைப்பாளர் அம்ரித் ராம்நாத் இசையமைத்துள்ளார். சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற மிடில் கிளாஸ் குடும்பத்தின் கனவை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த 3 BHK படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

சித்தார்த் நடிப்பில் வெளியானது 3 BHK படத்தின் ட்ரெய்லர்:

நடிகர்கள் சரத்குமார் மற்றும் தேவயானியின் பிள்ளைகளாக நடிகர்கள் சித்தார்த் மற்றும் மீத்தா ரகுநாத் நடித்துள்ளனர். மிடில் கிளாஸ் வர்க்கத்தை சேர்ந்த இவர்கள் வாடகை வீட்டில் இருந்து சொந்த வீடு வாங்க கனவு காண்கிறார்கள். அந்த சொந்த வீட்டை வாங்குவதற்காக குடும்பமாக இணைந்து அவர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதே படத்தின் கதை.

சொந்த வீடு என்பது ஒவ்வொரு மிடில் கிளாஸ் குடும்பத்திற்கும் உள்ள மிகப் பெரிய ஆசை. அந்த ஆசையை மையமாக வைத்து வெளியான இந்தப் படத்தின் ட்ரெய்லர் தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் ஒவ்வொரு மிடில் கிளாஸ் குடும்பத்திற்கும் சொந்த வீடு வாங்குவது என்பது அவ்வளவு எளிமையான காரியம் இல்லை என்பதும் இந்தப் படத்தின் ட்ரெய்லரில் மிகவும் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.

படக்குழு வெளியிட்ட 3 BHK படத்தின் ட்ரெய்லர் பதிவு:

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை சமீப காலமாக சாதாரண மக்களின் வாழ்வியலை அப்படியே படமாக்கப்பட்டு காட்டப்படுவது நல்ல வரவேற்பை மக்களிடையே பெற்று வருகின்றது. அந்த வரிசையில் 3 BHK படம் வருகின்ற ஜூலை மாதம் 4-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தை மக்கள் விமர்சன ரீதியாக வரவேற்பார்கள் என்று படக்குழு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Related Stories
காமெடி படத்தில் இத்தனை ட்விஸ்டா? அமேசான் ப்ரைம் வீடியோவில் இருக்கும் இந்த மதுர மனோகர மோஹம் படத்தை கண்டிப்பா பாருங்க!
ஜோதிகா மற்றும் கார்த்தி இல்லாமல் சூர்யா இன்ஸ்டாவில் ஃபாலோ பண்ணும் அந்த ஒரே ஒரு தமிழ் நடிகர்… யார் தெரியுமா?
பிளாக் மெயில் முதல் சரண்டர் வரை… இந்த வாரம் தியேட்டரில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
இனி ஃபேமிலி செண்டிமெண்ட்லாம் ஹிட்டடிக்கதுனு நீ சினிமாவை விட்டு போ சொன்னாங்க – இயக்குநர் பாண்டிராஜ் பேச்சு!
பண மோசடி வழக்கில் பிரபல காமெடி நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது!
தூக்கமில்லாமல் கஷ்டப்பட்டேன்…. ‘கிங்டம்’ பட நிகழ்வில் விஜய் தேவரகொண்டா உருக்கம்!