Sandy Master : ஹாரிஷ் ஜெயராஜ் நடனமாடி பாத்திருக்கீங்களா! சாண்டி மாஸ்டர் சொன்ன விஷயம்!

Sandy Master About Harris Jayaraj : தமிழ் சினிமாவில் பிரபல நடன இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் சாண்டி மாஸ்டர். இவர் தமிழ் மற்றும் மலையாளம் போன்ற படங்களில் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இவர், தன்னுடன் ஹாரிஸ் ஜெயராஜ் பாடல் ஒன்றில் நடனமாடியிருப்பதாக கூறியுள்ளார்.

Sandy Master : ஹாரிஷ் ஜெயராஜ் நடனமாடி பாத்திருக்கீங்களா! சாண்டி மாஸ்டர் சொன்ன விஷயம்!

சாண்டி மாஸ்டர் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ்

Published: 

26 Sep 2025 08:30 AM

 IST

கோலிவுட் சினிமாவில் பிரபலம் நடன இயக்குநர் மற்றும் நடிகராக இருந்து வருபவர் சாண்டி மாஸ்டர் (Sandy Master). இவர் தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) லியோ (Leo) படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். அந்த படத்தில் சாக்லேட் காபி என்ற டயலாக் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியிருந்தார். இந்த படத்தை தொடர்ந்து, தற்போது மலையாளம் படத்திலும் முக்கிய வில்லன் வேடத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான லோகா (Lokah)திரைப்படத்தில் வில்லன் வேடத்தில் நடித்து, மலையாள சினிமாவில் மிக பிரபலமாகியிருந்தார். மேலும் இவர் தற்போது பா.ரஞ்சித் (Pa. Ranjith) தயாரிப்பில், ஹீரோவாக புதிய படத்தில் நடித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் குறித்து பேசியுள்ளார். இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் (Harris Jayaraj) , தன்னுடன் பாடல் ஒன்றில் முதன் முறையாக நடனமாடியிருப்பதாக கூறியுள்ளார். இந்த தகவலானது தற்போது இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் ரசிகர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : பொல்லாதவன் படத்தின்போதே முடிவு செய்தேன்.. சிம்புவுடன் பணியாற்றுவது பற்றி வெற்றிமாறன் பேச்சு!

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் குறித்து சாண்டி மாஸ்டர் பேசிய விஷயம் :

அந்த நேர்காணலில் சாண்டி மாஸ்டர், “சமீபத்தில் நாங்கள் ஏ.எல். விஜய் சார் படத்திற்கு ப்ரோமோ பாடல் ஒன்றில் நடனமாடியிருந்தேன். அந்த ப்ரோமோ வீடியோவில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் சார் நடனமாடியிருக்கிறார். முதன் முறையாக ஹாரிஸ் சார் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

இதையும் படிங்க : அஜித் ரசிகர்கள் பாணியை பின்தொடரும் சூர்யாவின் ரசிகர்கள்.. இணையத்தில் வைரலாகும் போஸ்டர்!

அதுவும் அந்த பாடல் முழுவதிலும் நடனமாடியிருக்கிறார். அந்த பாடலில், நானும், ஹாரிஸ் சாரும் இணைந்துதான் நடனமாடியிருக்கிறோம். இதுவரைக்கும் ஹாரிஸ் சார் நடனமாடி யாரும் பார்த்ததில்லை, அனால் வரும் புதிய பாடலில் அவரின் நடனத்தை பார்க்கலாம்” என சாண்டி மாஸ்டர் அந்த நேர்காணலில் பேசியிருந்தார்.

ஹாரிஸ் ஜெயராஜ் குறித்து சாண்டி மாஸ்டர் பேசிய வீடியோ :

சாண்டி மாஸ்டரின் புதிய படம் :

நடிகர் சாண்டி மாஸ்டர், பா. ரஞ்சித் தயாரிப்பில், ஹீரோவாக புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் நடித்திருக்கிறாராம். இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்திருக்கும் நிலையில், இறுதிக்கட்ட வேளைகளில் இருக்கிறதாம். இந்த படத்தை அடுத்ததாக லோகா பார்ட் 2 படத்திலும் நடிக்கவுள்ளார் என்பது குரிப்பிடத்தக்கது.