Kantara Chapter 1: ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா சாப்டர் 1 – முதல் வாரத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?
Kantara Chapter 1 Box Office: ரிஷப் ஷெட்டியின் நடிப்பில் வெளியான திரைப்படம்தான் காந்தாரா சாப்டர் 1. கடந்த 2025 அக்டோபர் 2ம் தேதியில் இப்படமானது உலகமெங்கும் வெளியானது. இப்படம் வெளியாகி 1-வாரத்தை கடந்த நிலையில், படக்குழு வசூல் விவரத்தை வெளியிட்டுள்ளது.

ரிஷப் ஷெட்டியின் காந்தாரா சாப்டர் 1
கடந்த 2022ம் ஆண்டில் வெளியாகி ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிரவைத்த திரைப்படம்தான் காந்தாரா (Kantara). இந்த படத்தை ரிஷப் ஷெட்டி (Rishabh Shetty), இயக்கி அதில் கதாநாயகனாக நடித்திருந்தார். இது கர்நாடகாவின் துளு மக்களின் தெய்வமான பஞ்சுரலியின் கதைக்களத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருந்தது. இந்நிலையில், இந்த காந்தாரா படத்தின் தொடர்ச்சியாக கடந்த அக்டோபர் 2, 2025 அன்று வெளியான திரைப்படம்தான் காந்தாரா சாப்டர் 1 (Kantara Chapter 1). இந்த படத்தை இயக்குநர் ரிஷப் ஷெட்டி, இயக்கி நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் நடிகை ருக்மிணி வசந்த் (Rukmini Vasanth) மற்றும் ஜெயராம் (Jayaram) முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். அதிரடி ஆக்ஷ்ன், தெய்வீகம் மற்றும் காதல் என மாறுபட்ட கதைக்களத்தில் இந்த காந்தாரா சாப்டர் 1 படமானது, கடந்த 2025 அக்டோபர் 2ம் தேதியில் வெளியானது.
இந்நிலையில் இன்றுடன் இந்த படமானது வெளியாகி 9 நாட்களைக் கடந்துள்ள நிலையில், மொத்தமாக சுமார் ரூ 509.25 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த தகவலானது தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது.
இதையும் படிங்க: மிகவும் திறமையானவர்.. சாய் அபயங்கரைப் பாராட்டிய டியூட் பட தயாரிப்பாளர்!
படத்தின் முதல் வார வசூல் குறித்த தகவலை வெளியிட்ட காந்தாரா சாப்டர் 1 படக்குழு :
The divine cinematic storm continues to soar higher at the box office 🔥💥#KantaraChapter1 crosses 509.25 CRORES+ GBOC worldwide in the 1st week! #BlockbusterKantara running successfully in cinemas near you. ❤️🔥#KantaraInCinemasNow #DivineBlockbusterKantara… pic.twitter.com/jxYuPN47jL
— Hombale Films (@hombalefilms) October 10, 2025
காந்தாரா பட வசூல் விவரங்கள் :
கடந்த 2022ம் ஆண்டில் வெளியான காந்தாரா படமானது, சிறிய பட்ஜெட்டில் வெளியானது. இந்த படமானது சுமார் ரூ 16 கோடி பட்ஜெட்டில் தயாராகியிருந்ததாக கூறப்பட்டநிலையில், அந்த படம் சுமார் ரூ 550 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சூப்பர் ஹிட்டாக அமைந்தது. எதிர்பாராத அளவிற்கு இந்த படமானது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இதையும் படிங்க: புஷ்பா 3 படத்திற்கு முன்பாக பிரபல நடிகருடன் இணையும் இயக்குநர் சுகுமார் – உற்சாகத்தில் ரசிகர்கள்
அந்த வகையில் இந்த காந்தாரா சாப்டர் 1 படமானது சுமார் ரூ 120 கோடி பட்ஜெட்டில் தயாராகியிருந்ததாக ரிஷப் ஷெட்டி ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த படமானது வெளியாகி 9 நாட்களான நிலையில், தற்போதுவரை சுமார் ரூ 509.25 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த வார இறுதிக்குள் எப்படியும் சுமார் ரூ 600 கோடிகளுக்கு மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காந்தாரா சாப்டர் 1 படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?
இந்த காந்தாரா சாப்டர் 1 படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிவருகிறது. சாதாரணமாக ஒரு திரைப்படமானது வெளியாகி 4 அல்லது 6 வாரத்திற்குள் ஓடிடியில் வெளியாகும் என்பது தெரிந்ததே.
அந்த வகையில் இந்த காந்தாரா சாப்டர் 1 படமானது 8 வாரத்திற்கு பிறகுதான் ஓடிடியில் வெளியாககும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ள நிலையில், வரும் 2025 நவம்பர் இறுதியில் இப்படம் ஓடிடியில் வெளியாக வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.