Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Retro Review: கம்பேக் கொடுத்த சூர்யா.. ரெட்ரோ எப்படி இருக்கு? – விமர்சனம் இதோ!

Retro Movie Review in Tamil: சூர்யா நடித்த கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ரெட்ரோ படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீசாகியுள்ளது. இந்த படத்திற்கு சூர்யாவின் நடிப்பு, பூஜா ஹெக்டேவின் கதாபாத்திரம், மற்றும் சந்தோஷ் நாராயணனின் இசை படத்தின் பலமாக அமைந்திருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இந்த படத்தின் விமர்சனம் காணலாம்.

Retro Review: கம்பேக் கொடுத்த சூர்யா.. ரெட்ரோ எப்படி இருக்கு? – விமர்சனம் இதோ!
ரெட்ரோ படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 01 May 2025 17:15 PM

பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே கார்த்திக் சுப்பராஜ் (Karthik Subbaraj) இயக்கத்தில் சூர்யா (Suriya) ஹீரோவாக நடித்துள்ள ரெட்ரோ படம் இன்று (மே 1, 2025) வெளியாகியுள்ளது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஜெயராம், ஜோஜூ ஜார்ஜ், நாசர், கருணாகரன், பிரகாஷ்ராஜ், பிரேம் குமார், சுவாசிகா, சிங்கம்புலி உள்ளிட்டபலரும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் ஸ்டூடியோஸ் மற்றும் சூர்யாவின் 2டி என்டெர்டெயின்மெண்ட் ஆகியவை இணைந்து தயாரித்துள்ளது. பல வருடங்களாக சரியான ஒரு வெற்றிக்காகக் காத்திருந்த சூர்யா ரெட்ரோ படம் கைகொடுத்ததா என்பதை விமர்சனம் (Retro Movie Review) வழியாக காணலாம்.

படத்தின் கதை என்ன?

ட்ரெய்லர் பார்க்கும்போது இது கடந்த காலத்தில் நடந்த கதை என்பதை நம்மால் யூகிக்க முடிந்தது. அந்த வகையில் பாரிவேல் கண்ணனான (சூர்யா) தனது குழந்தைப் பருவத்திலேயே பெற்றோரை இழக்கிறார். அவனை உள்ளூர் ரவுடியான திலக் ராஜ் (ஜோஜு ஜார்ஜ்) வீட்டில் வளர்கிறார். ஜோஜூ ஜார்ஜ்க்கு சூர்யா மீது வெறுப்பு இருந்தாலும், தன் மனைவிக்காக அதைத் தாங்கிக் கொள்கிறான். சிறுவயதில் தான் ஒரு கண்ட அதிர்ச்சிகரமான சம்பவத்தால் சூர்யாவுக்கு சிரிக்க தெரியாமல் இருக்கிறது.

இதற்கிடையில் தாயை இழந்த பூஜா ஹெக்டேவுடன்  காதலும் உள்ளது. இப்படியான நிலையில் சூர்யாவும் ஒரு கேங்ஸ்டராக மாறுகிறார். காதலுக்காக ரவுடிசத்தை விட்டு விலகும் சூர்யா – பூஜா ஹெக்டே இருவரும் திருமண வாழ்க்கையில் அடியெடித்து வைக்கும் நேரத்தில் எதிர்பாராத சம்பவம் நிகழ்கிறது. இதனால் சூர்யா ஜெயிலுக்கு செல்கிறார். இதன்பிறகு என்ன ஆனது? சூர்யா – பூஜா ஹெக்டே இணைந்தனரா? என்பது தான் ரெட்ரோ படத்தின் அடிப்படை கதையாகும்.

படம் எப்படி இருக்கு?

வழக்கம்போல இப்படமும் கார்த்திக் சுப்பராஜின் ட்ரேட் மார்க் படமாக அமைந்துள்ளது. கதாநாயகனாக இல்லாமல் கதையின் நாயகனாக சூர்யா இருக்கிறார். இது அவருக்கான மைனஸாகவே பார்க்கப்படுகிறது. காரணம் கார்த்திக் சுப்பராஜ் தனது படங்களில் வழக்கமான ஒரு ஃபார்முலாவை பின்பற்றி வருகிறார். ஆனால் திரைக்கதை சரியாக இருந்தால் தான் ரசிகர்களை கவரும் என்பது நிதர்சனமான உண்மை. அதில் சற்று சரிவை சந்தித்திருக்கிறார்கள். காரணம் படம் எங்கே தொடங்கி எங்கே முடிகிறது என்ற புரிதல் ரசிகர்களுக்கு கிடைப்பதற்கே அதிக நேரம் எடுப்பதாக பலரின் கருத்தாக வெளிப்பட்டுள்ளது.

விண்டேஜ் சூர்யாவாக நடிப்பில் ஸ்கோர் செய்யும் சூர்யாவுக்கு நிகரான கேரக்டரில் நியாயம் சேர்த்துள்ளார் பூஜா ஹெக்டே.படத்தின் இரண்டாம் பாதியை சற்று குறைத்திருக்கலாம். கனிமா பாடலில் வரும் சிங்கிள் ஷாட் நடனம், சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட பிளாஷ்பேக் காட்சி என படம் மேக்கிங்கில் வந்தாலும் கதையில் சுவாரஸ்யம் இல்லாமல் போவது ஏமாற்றமளிக்கும் விதமாக அமைந்திருக்கிறது. ஜோஜூ ஜார்ஜ், சுவாசிகா, நாசர், ஜெயராம் என அனைவரும் தங்கள் கேரக்டரை சிறப்பாக செய்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணனின் இசை இந்த ரெட்ரோ படத்தின் பலமாக அமைந்துள்ளது. பின்னணி இசையில் மாஸ் காட்டியுள்ளார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு நன்றாக கண்களுக்கு விருந்து படைக்கும் வகையில் அமைந்துள்ளது.

தியேட்டரில் பார்க்கலாமா?

கனிமா பாடலுக்காவே வைப் செய்ய குழந்தைகளுடன் கண்டிப்பாக தியேட்டருக்கு செல்லலாம். மற்றபடி ஆக்‌ஷன் படமாக இல்லாமல் அனைத்து கலந்து கொடுத்திருப்பதால் குடும்பத்துடன் தாராளமாக சென்று கண்டு இந்த விடுமுறையை ரெட்ரோவோடு கொண்டாடலாம்.

வெயிலால் ஏற்படும் தோல் எரிச்சல்... டாக்டர் சொல்லும் அறிவுரை!
வெயிலால் ஏற்படும் தோல் எரிச்சல்... டாக்டர் சொல்லும் அறிவுரை!...
கோடையில் நீங்கள் சிக்கன் சாப்பிடுகிறீர்களா? பிரச்சனை உண்டாகும்!
கோடையில் நீங்கள் சிக்கன் சாப்பிடுகிறீர்களா? பிரச்சனை உண்டாகும்!...
குங்ஃபூவை பயன்படுத்தி திருடனை வீழ்த்திய இளைஞர் - வைரல் வீடியோ
குங்ஃபூவை பயன்படுத்தி திருடனை வீழ்த்திய இளைஞர் - வைரல் வீடியோ...
Amazon Great Summer Sale - டாப் 5 ஏசி பிராண்டுகள்!
Amazon Great Summer Sale - டாப் 5 ஏசி பிராண்டுகள்!...
காதலில் விழுந்த ஷிகர் தவான்! பெண் புகைப்படத்துடன் வெளியான அப்டேட்
காதலில் விழுந்த ஷிகர் தவான்! பெண் புகைப்படத்துடன் வெளியான அப்டேட்...
இளைஞருக்கு குளிரை சூடாகவும், சூடானவை குளிராகவும் உணரும் நோய்!
இளைஞருக்கு குளிரை சூடாகவும், சூடானவை குளிராகவும் உணரும் நோய்!...
பனீர் டிக்கா மசாலா சாப்பிட ஆசையா..? எளிதாக இப்படி செய்து பாருங்க!
பனீர் டிக்கா மசாலா சாப்பிட ஆசையா..? எளிதாக இப்படி செய்து பாருங்க!...
தியேட்டரில் புகைபிடிக்கும் எச்சரிக்கைகள் மனநிலையைக் கொல்லும்
தியேட்டரில் புகைபிடிக்கும் எச்சரிக்கைகள் மனநிலையைக் கொல்லும்...
யாருடன் கூட்டணி ? பிரேமலதா விஜயகாந்த் சொன்னது என்ன?
யாருடன் கூட்டணி ? பிரேமலதா விஜயகாந்த் சொன்னது என்ன?...
விஜய்யின் பேச்சை கேட்காத ரசிகர்கள் - சேதமடைந்த வாகனம் !
விஜய்யின் பேச்சை கேட்காத ரசிகர்கள் - சேதமடைந்த வாகனம் !...
வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் நாயகி இவரா?
வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் நாயகி இவரா?...