கன்னட சினிமா டூ பான் இந்திய நாயகி.. போட்டோவில் இருக்கும் சிறுமி யாருனு தெரியுமா? இவர் தளபதியுடன் நடித்திருக்கிறார்!

Sounth Indian Celebrity Childhood Photos : சினிமா வட்டாரங்களை பொறுத்தவரையில் நடிகைகள், நடிகர்கள் குறித்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் வைரலாகுவது வழக்கம். அந்த விதத்தில் அவர்களின் சிறுவயது புகைப்படங்களும் வைரலாகிவருகிறது. இந்த போட்டோவில் இருக்கும் சிறுமி எந்த நடிகைன்னு தெரியுமா? அது குறித்து பார்க்கலாம்.

கன்னட சினிமா டூ பான் இந்திய நாயகி.. போட்டோவில் இருக்கும் சிறுமி யாருனு தெரியுமா? இவர் தளபதியுடன் நடித்திருக்கிறார்!

பிரபலத்தின் சிறுவயது புகைப்படம்

Published: 

19 Jan 2026 17:46 PM

 IST

தென்னிந்திய சினிமாவில் (South Indian Cinema) பல்வேறு நட்சத்திர நடிகர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு பான் இந்திய அளவிற்கு ரசிகர்கள் பட்டாளமும் இருக்கிறது. அந்த வகையில் இந்த பிரபலங்களின் அடையாளம் தெரியாத அல்லது குழந்தை பருவ புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருவது இயல்புதான். அந்த விதத்தில் மேலே இருக்கும் புகைப்படத்தில் ஸ்டைலாக அமர்ந்திருக்கும் சிறுமி யாருனு தெரிகிறதா?. இவர் கன்னட சினிமாவின் மூலமாக கதாநாயகியாக நுழைந்தார். தனது முதல் படத்தில் சிறு வேடத்தில் மட்டுமே இவர் நடித்திருந்தார். தொடர்ந்து கன்னட மொழியிலே நடித்துவந்த இவர், நடிகர் நாக ஷௌர்யா (Naga Shourya) நடிப்பில் வெளியான படத்தில் நடித்து தெலுங்கில் கதாநாயகியாக (Telugu Actress) அறிமுகமானார். இந்த படம் இவருக்கு நல்ல வரவேற்பையே கொடுத்திருந்தது. தொடர்ந்து தெலுங்கில் இவர் நடித்த 2வது படமே பான் இந்திய சூப்பர் ஹிட்டானது.

அந்த படத்தில் இவர் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கு (Vijay Deverakonda) ஜோடியாக நடித்திருந்தார். இவர்கள் இருவருக்குமே இப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்று பெருமையை தந்தது. இப்போது புகைப்படத்தில் இருக்கும் சிறுமி யார் என தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். இந்த சிறுமி வேறுயாருமில்லை பான் இந்திய ரசிகர்களின் க்ரஷ் ராஷ்மிகா மந்தனாதான் (Rashmika Mandanna).

இதையும் படிங்க: அந்த பெரிய நட்சத்திர நடிகர் என்னை தொட முயன்றார்.. உடனடியாக அவரை அறைந்தேன்- பூஜா ஹெக்டே பரபரப்பு பேட்டி!

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் பதிவு :

நடிகை ராஷ்மிகா மந்தனா சினிமாவில் கடந்துவந்த பாதை :

நடிகை ராஷ்மிகா மந்தனா கடந்த 1996ம் ஆண்டு ஏப்ரல் 5ம் தேதியில், கர்நாடக கோடவா இந்து குடும்பத்தில் சுமன் மற்றும் மதன் மந்தனா அவர்களுக்கு மகளாக பிறந்தார். சாதாரணமான குடும்பத்தில் பிறந்த இவர், இளம் வயதில் நடிப்பின் மீதுகொண்ட காதலால் சினிமாவில் நுழைந்தார். 2016ல் வெளியான க்ரிக் பார்ட்டி என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தெலுங்கில் முதல் படமாக சலோ என்ற படம் அமைந்தது. இதன் மூலமாக தெலுங்கில் நுழைந்த இவர் தனது 2வது படமான கீதா கோவிந்தம் என்ற படத்தின் மூலம் பின் இந்திய அளவிற்கு பிரபலமானார்.

இதையும் படிங்க: எனக்கு ஆதரவு கொடுக்க திரண்ட ரசிகர்கள்.. ஒருநாள் அவர்களை பெருமைப்படுத்துவேன் – அஜித் குமார் பேச்சு!

இதில் விஜய் தேவரகொண்டாவிற்கு இவர் ஜோடியாக நடித்திருந்த நிலையில், இப்படம் இவர்கள் இருவருக்குமே சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்து. மேலும் தமிழில் கார்த்தியின் சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமாகினார். அந்த வகையில் இவர் தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் என பான் இந்திய நாயகியாக இருக்கிறார். இவரின் நடிப்பில் இறுதியாக தி கேர்ள்ஃப்ரண்ட் படமானது வெளியாகி வெற்றி பெற்றிருந்தது. இதையடுத்து மைசா மற்றும் காக்டைல் 2 போன்ற படங்களில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories
விஷால் – சுந்தர் சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக், புரோமோ ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ
ஒரு தீர்ப்பெழுதுற அதிகாரத்தை அந்த பரபிரம்மா ஒரு கடைக்கோடி மனுஷன்கிட்ட கொடுத்துருக்கு – வெளியானது சசிகுமாரின் மை லார்ட் படத்தின் ட்ரெய்லர்!
ஒன்றாக வெக்கேஷன் சென்ற நடிகைகள் நயன்தாரா – த்ரிஷா… இணையத்தை தெறிக்கவிடும் புகைப்படங்கள்
அந்த ஒரு விசயத்துகாகவே விஜய் சிஎம் சீட்ல உக்கார்வதை பாக்கனும்  – நடிகர் மகேந்திரன்
Kayadu Lohar: இம்மார்ட்டல் படத்தில் கயாடு லோஹர் இணைந்தது இப்படிதான் – இயக்குநர் மாரியப்பன் சின்னா!
Rashmika Mandanna: A.R.முருகதாஸ் சார் என்னிடம் சொன்னது வேற.. சிக்கந்தர் பட ஸ்கிரிப்டில் பல மாற்றம் இருந்தது – ராஷ்மிகா மந்தனா!
ஆதார் அட்டைதாரர்களே.. இந்தத் தவறுகள் உங்கள் வங்கிக் கணக்கை காலி செய்துவிடும்.. அரசு எச்சரிக்கை!!
ரூ.1 லட்சத்தில் மின்சார ஜீப்…100 கி.மீட்டர் பயணம்..பீகார் இளைஞரின் புதுமை!
"பாட்டி.. மொத்த சமோசாவும் காலி".. ராணுவ வீரர்களின் செயலால் நெகிழ்ந்த நெட்டிசன்கள்!!
‘கழுத்தை அறுத்த சீன மாஞ்சா கயிறு’.. உயிர்தப்பிய மதபோதகர்..