என்னோட அடுத்தப் படத்தின் டைட்டில் என்னனு தெரியுமா? ராஷ்மிகா மந்தனா கொடுத்த அப்டேட்!

Actress Rashmika Mandanna: தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்திய நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா தனது அடுத்தப் படம் குறித்து எக்ஸ்தள பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

என்னோட அடுத்தப் படத்தின் டைட்டில் என்னனு தெரியுமா? ராஷ்மிகா மந்தனா கொடுத்த அப்டேட்!

ராஷ்மிகா மந்தனா

Published: 

26 Jun 2025 13:43 PM

இந்திய சினிமா ரசிகர்களால் நேஷ்னல் க்ரஸ் என்று அன்புடன் அழைக்கப்படுபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா (Actress Rashmika Mandanna). இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் குபேரா. இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் (Actor Dhanush) நாயகனாக நடிக்க நடிகர் நாகர்ஜுனா முக்கிய வேடத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ஒரே நேரத்தில் உருவான இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பைப் பார்த்த ரசிகர்கள் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர். தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா தனது புதிய படம் குறித்த அறிவிப்பு ஒன்றை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது “என்னுடைய அடுத்த படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும்னு உங்களால் யூகிக்க முடிகிறதா? யாராலும் யூகிக்க முடியாதுன்னு நினைக்கிறேன்.. ஆனா நீங்க யூகிக்க முடிஞ்சா நான் உங்களை வந்து பார்க்கிறேன்னு உறுதியளிக்கிறேன்” என்று அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும் நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ஒரு போஸ்டரையும் வெளியிட்டு இருந்தார். அதில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் புதியப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற 27-ம் தேதி ஜூன் மாதம் 2025-ம் ஆண்டு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது புதுப் படம் குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ராணியாக வலம் வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா:

இந்திய சினிமாவைப் பொருத்தவரை நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸில் சாதனைப் படைத்து வருகின்றது. திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் பாக்ஸ் ஆபிஸின் ராணி என்று நடிகை ராஷ்மிகா மந்தனாவை புகழ்ந்து பேசும் வகையில் அவரது நடிப்பில் முன்னதாக வெளியான படங்கள் அனைத்தும் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.