சர்வதேச திரைப்பட விழாவில் காந்தாரா படம் குறித்து ரன்வீர் சிங் செயலால் கிளம்பிய சர்ச்சை.. வைரலாகும் வீடியோ!

Ranveer Singh Controversy :பாலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர்தான் ரன்வீர் சிங். இவர் சமீபத்தில் நடைபெற்றிருந்த 56வது சர்வதேச திரைப்பட விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டிருந்தார். இந்நிகழ்ச்சியின்போது மேடையில் பேசிய அவர், காந்தாரா படத்தில் ரிஷப் ஷெட்டி நடித்த கதாபாத்திரம் குறித்து கேலி செய்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.

சர்வதேச திரைப்பட விழாவில் காந்தாரா படம் குறித்து ரன்வீர் சிங் செயலால் கிளம்பிய சர்ச்சை.. வைரலாகும் வீடியோ!

ரன்வீர் சிங் சர்ச்சை

Published: 

30 Nov 2025 21:32 PM

 IST

நடிகர் ரன்வீர் சிங் (Ranveer Singh) பாலிவுட் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் மிகவும் பிரம்மாண்ட கதைக்களத்தில் உருவாகியுள்ள படம்தான் துரந்தர் (Dhurandhar). இப்படம் வரும் 2025ம் டிசம்பர் 5ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக சைவம் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரமான சாரா அர்ஜுன் (Sara Arjun) நடித்துள்ளார். இந்த படம் அதிரடி ஆக்ஷ்ன் மற்றும் காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 2025 நவம்பர் 28ம் தேதியில் கோவாவில் சர்வதேச திரைப்பட விருது விழா (International Film Awards Ceremony) நிறைவடைந்திருந்தது. இந்த நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth), ஜி.வி. பிரகாஷ் (GV. Prakash), ரிஷப் ஷெட்டி (Rishabh Shetty) மற்றும் நடிகர் ரன்வீர் சிங் போன்ற பிரபலங்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கிடைத்திருந்தது. இந்நிலையில் இதை அடுத்ததாக நிகழ்ச்சி மேடையில் பேசிய ரன்வீர் சிங், காந்தாரா (Kantara) படத்தில் ரிஷப் ஷெட்டி நடித்த கதாபாத்திரத்தை கேலி செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ கன்னட மக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சிலம்பரசனின் அரசன் பட ஷூட்டிங் எங்கு எப்போது தொடங்குகிறது? வைரலாகும் தகவல்!

இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்திவரும் ரன்வீர் சிங் குறித்த வீடியோ பதிவு :

இந்த வீடியோவில் நடிகர் ராவீர் சிங், ” நான் காந்தாரா சாப்டர் 1 படத்தை திரையரங்கில் பார்த்தேன். ரிஷப் ஷெட்டி மிகவும் நன்றாகவே நடித்திருந்தார். மேலும் அவருக்கு பெண் தெய்வம் (சாமுண்டி) உடலில் நுழையும்போது, எடுக்கப்பட்டிருந்த ஷாட் மிகவும் அற்புதமாக இருந்தது. மேலும் நான் காந்தாரா பார்ட் 3யில் நடிக்கவேண்டுமா? என மேடையில் இருந்து ரசிகர்களிடம் ரன்வீர் சிங் கேட்டிருந்தார். அப்போது அனைவரும் “ஆமாம் ஆமாம்” என கூறியிருந்தார். மேலும் பேசிய ரன்வீர் சிங், அதை ரிஷப் ஷெட்டியிடம் கூறுங்கள்” என்று கூறியிருந்தார்.

இந்த பேச்சை தொடர்ந்துதான் ரன்வீர் சிங், காந்தாரா படத்தில் ரிஷப் ஷெட்டி வைத்திருந்த முகபாவனையை வைக்க முயற்சி செய்திருந்தார். அதில் அவர் அதை கிண்டல் அடிப்பதுபோல இருந்தது. அதே சமயத்தில் ரிஷப் ஷெட்டியும் அந்த விஷயத்தை பார்வையாளராக பார்த்துக்கொண்டிருந்தார். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் பார்த்துக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நடிகர் ரியோவின் நடிப்பில் 6-வது படத்தின் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகிவரும் நிலையில், கன்னட மக்களின் தெய்வங்களை இவர் இழிவுப்படுத்துகிறார் என்றும், இதற்காக அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் மக்கள் தங்கள் கருத்தை பதிவிட்டு வருகின்றனர். மேலும் அவர் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் துரந்தர் படத்தின் ரிலீஸை தடுப்போம் என்றும் கூறிவருகின்றனர். இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories
ஆதார் அட்டைதாரர்களே.. இந்தத் தவறுகள் உங்கள் வங்கிக் கணக்கை காலி செய்துவிடும்.. அரசு எச்சரிக்கை!!
ரூ.1 லட்சத்தில் மின்சார ஜீப்…100 கி.மீட்டர் பயணம்..பீகார் இளைஞரின் புதுமை!
"பாட்டி.. மொத்த சமோசாவும் காலி".. ராணுவ வீரர்களின் செயலால் நெகிழ்ந்த நெட்டிசன்கள்!!
‘கழுத்தை அறுத்த சீன மாஞ்சா கயிறு’.. உயிர்தப்பிய மதபோதகர்..