‘துரந்தர் 2’ படத்தை உச்சிமுகர்ந்த ரஜினிகாந்த்.. “வாழ்வின் மிகப்பெரிய தருணம்” என மெய்சிலிர்த்த இயக்குநர்..

Rajinikanth praise 'Durandhar 2': உலகம் முழுவதும் இந்தப் படம் இதுவரை 800 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்தப் படத்தில் ரன்வீர் சிங் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, அவருடன் சஞ்சய் தத், ஆர். மாதவன், அர்ஜுன் ராம்பால் மற்றும் சாரா அர்ஜுன் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே இணைந்துள்ளனர்.

துரந்தர் 2 படத்தை உச்சிமுகர்ந்த ரஜினிகாந்த்.. வாழ்வின் மிகப்பெரிய தருணம் என மெய்சிலிர்த்த இயக்குநர்..

'துரந்தர் 2' படத்தை உச்சிமுகர்ந்த ரஜினிகாந்த்

Updated On: 

24 Mar 2026 09:58 AM

 IST

இயக்குநர் ஆதித்யா தர் இயக்கத்தில், ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி உலகளவில் பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளைத் தகர்த்து வரும் திரைப்படம் ‘துரந்தர் 2’. தேசபக்தி மற்றும் உளவுத்துறையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், நாடு முழுவதும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது ரூ.800 கோடியை வசூலை நெருங்கி இருக்கும் நிலையில், விரைவில் ரூ.1000 கோடி வசூலை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தை பார்த்துவிட்டு பிரபலங்கள் பலரும் படக்குழுவை பாராட்டி வருகின்றனர். அந்தவகையில், இந்தியத் திரையுலகின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாராட்டையும் பெற்றுள்ளது. இந்தியத் திரையுலகின் இமயமலை என்று அழைக்கப்படும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஒரு படத்தைப் பாராட்டுகிறார் என்றால் அது சாதாரணமான விஷயமாக இருக்காது என்று திரைத்துறையில் பெருமை பேச்சுகளையும் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: Dhurandar 2: வசூலில் பட்டையை கிளப்பும் துரந்தர் 2.. தமிழகத்தில் எழுந்த சர்ச்சை என்ன தெரியும்?

“துரந்தர் 2”-வை புகழ்ந்த தள்ளிய ரஜினிகாந்த்:

இந்நிலையில், ‘துரந்தர் 2’ படத்தைப் பார்த்த ரஜினிகாந்த், தனது எக்ஸ் தளத்தில் படக்குழுவினரை வெகுவாகப் புகழ்ந்து தள்ளியுள்ளார். அதில், “என்ன ஒரு படம் #Dhurandhar2!!! ஆதித்யா தர் பாக்ஸ் ஆபீஸின் தந்தை (Box office-ka baap)!!! ரன்வீர் சிங் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். ஒவ்வொரு இந்தியனும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். ஜெய் ஹிந்த்!” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

இயக்குநர் ஆதித்யா தர் நெகிழ்ச்சி:

திரையுலகின் ஜாம்பவான் ஒருவரிடமிருந்து இத்தகைய பாராட்டுக் கிடைத்தது படக்குழுவினருக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகக் கருதப்படுகிறது. ரஜினிகாந்தின் பாராட்டைக் கண்டு நெகிழ்ந்துபோன இயக்குநர் ஆதித்யா தர், அவருக்கு மிக உருக்கமான முறையில் பதில் அளித்துள்ளார். தனது குருவாகவும், ஆதர்ச நாயகனாகவும் ரஜினியைப் பார்க்கும் ஆதித்யா தர் தனது பதிவில் கூறியிருப்பதாவது, ‘பொழுதுபோக்கு’ என்ற சொல்லுக்கு உங்களை மட்டுமே ஒரே அளவுகோலாகக் கொண்டு நாங்கள் வளர்ந்திருக்கிறோம். இத்தனை ஆண்டுகளாகியும் எங்களை விசில் அடிக்க வைத்து, சிரிக்க வைத்தும், அழ வைத்தும், உங்களது அதே ஸ்டைலும், கண்ணியமும் குறையாமல் எங்களை பிரமிக்க வைக்கிறீர்கள்.

அப்படிப்பட்ட நீங்கள் ‘துரந்தர் 2’ படத்தைப் பாராட்டிக் கூறிய வார்த்தைகள் என் வாழ்வின் மிகச்சிறந்த ‘சூப்பர் ஸ்டார்’ தருணமாக உணர்கிறேன். எங்களையெல்லாம் பெரிய கனவுகளைக் காணக் கற்றுக்கொடுத்த ஒருவரிடமிருந்து கிடைத்த ஆசியாகவே இதைக் கருதுகிறேன். வார்த்தைகளால் விவரிக்க முடியாத நன்றிகள் ஐயா. உங்கள் வாழ்த்து நேரடியாக என் இதயத்தைத் தொட்டுவிட்டது. ஜெய் ஹிந்த்! என்று குறிப்பிட்டுள்ளார்.

பாக்ஸ் ஆபீஸில் ‘துரந்தர் 2’ செய்த சாதனை:

ஆதித்யா தர் இயக்கியுள்ள இந்தப் படம், தேசபக்தி மற்றும் ஆக்‌ஷன் கலந்த ஒரு பக்கா கமர்ஷியல் விருந்தாக அமைந்துள்ளது. உலகம் முழுவதும் இந்தப் படம் இதுவரை 800 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்தப் படத்தில் ரன்வீர் சிங் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, அவருடன் சஞ்சய் தத், ஆர். மாதவன், அர்ஜுன் ராம்பால் மற்றும் சாரா அர்ஜுன் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே இணைந்துள்ளனர்.

இதையும் படிங்க: கர பட தனுஷின் கதாபாத்திர அறிமுகம் எப்போது? படக்குழு கொடுத்த அப்டேட்!

சினிமா வட்டாரத்தில் வரவேற்பு:

ரஜினிகாந்த் மட்டுமல்லாமல், இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி, நடிகர் அனுபவம் கெர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் இந்தப் படத்தை ஏற்கனவே பாராட்டியுள்ளனர். எனினும், ரஜினியின் பாராட்டு படத்தின் வசூலையும், மக்கள் மத்தியிலான எதிர்பார்ப்பையும் இன்னும் ஒரு படி மேலே கொண்டு சென்றுள்ளது. ஒட்டுமொத்தத்தில், ‘துரந்தர் 2’ திரைப்படம் இந்திய சினிமாவின் ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

Follow Us
தூங்கி எழுந்ததும் நீல நிறமாக மாறிய நபர் - என்ன நடந்தது?
ஈரான் மீது நடத்தப்படும் தாக்குதல்.. எழுந்த புதிய சிக்கல்..
உலகின் அருவருப்பான பெண் என அழைத்த மக்கள் - குழந்தைகளுக்கு சிறந்த தாயாக மாறிய பெண்
"தெலுங்கு பேச தடுமாறினேன், பதற்றத்தில் தவறு நடந்துவிட்டது".. மன்னிப்பு கேட்ட பார்த்திபன்..