Thaai Kizhavi: 25 நாட்களில் பாக்ஸ் ஆபிஸ் சாதனை.. ராதிகா சரத்குமாரின் தாய் கிழவி பட மொத்த வசூல் இத்தனை கோடியா?

Thaai Kizhavi Box Office Collection: அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், நடிகை ராதிகா சரத்குமார் நடித்திருந்த படம்தான் தாய் கிழவி. இன்றுடன் இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 25 நாட்களை கடந்த நிலையில், பாக்ஸ் ஆபிசில் மொத்தமாக இப்படம் எவ்வளவு வசூலித்துள்ளது என்பது குறித்து படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Thaai Kizhavi: 25 நாட்களில் பாக்ஸ் ஆபிஸ் சாதனை.. ராதிகா சரத்குமாரின் தாய் கிழவி பட மொத்த வசூல் இத்தனை கோடியா?

தாய் கிழவி

Updated On: 

23 Mar 2026 18:45 PM

 IST

தென்னிந்திய சினிமாவில் சீனியர் ஆர்டிஸ்டாக இருந்துவரும் பிரபல நடிகைதான் ராதிகா சரத்குமார் (Radhika Sarathkumar). இவர் சினிமாவில் தொடர்ந்து படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துவருகிறார். அந்த வகையில் இவரை லீட் கதாபாத்திரமாக கொண்டு கடந்த 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியான திரைப்படம்தான் “தாய் கிழவி” (Thaai Kizhavi). இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) தயாரித்திருந்த நிலையில், அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் (Sivakarthikeyan Murugesan) இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடிகை ராதிகா சரத்குமார், “பவுனுதாயி” என்ற கிழவி வேடத்தில் நடித்திருந்தார். பணத்தை ஒரு பெண் எப்படி சேமிப்பது, ஒரு பென்னி மரியாதைக்கு என்ன செய்வது என அதீத கருத்துக்களை கொண்ட திரைப்படமாக அமைந்திருந்தது. இந்த படமானது கடந்த 2026 பிப்ரவரி 27ம் தேதியில் உலகமெங்கும் வெளியான நிலையில், திரையரங்குகளில் த்ற்போதுவரையிலும் திரையிடப்படுகிறது.

இந்நிலையில் இன்றுடன் (23/03/2026) தாய் கிழவி படம் வெளியாகி 25 நாட்களை கடந்துள்ளது. அந்த வகையில் இந்த 25 நாட்களில் இப்படம் மொத்தம் எவ்வளவு வசூலித்துள்ளது என படக்குழு அறிவித்துள்ளது. இப்படமானது உலகளவில் மொத்தமாக ரூ75 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளது. தற்போது இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: நான் கருப்பு படத்தை பான் இந்திய படமாக இயக்க நினைக்கல – ஆர்.ஜே.பாலாஜி சொன்ன விஷயம்!

தாய் கிழவி படத்தின் 25வது நாள் வசூல் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:

இந்த தாய் கிழவி படமானது முழுக்க முழுக்க காமெடி, எமோஷனல் மற்றும் சிந்திக்கும் கதைக்களத்தை மையமாக கொண்டு அமைந்திருந்தது. இதில் ராதிகா சரத்குமாருடன் நடிகர்கள் முனீஷ்காந்த், சிங்கம்புலி, ரேச்சல், ஜார்ஜ் மரியான், இளவரசு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இடத்தி சிவகார்த்திகேயன் தயாரித்திருந்த நிலையில் நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருந்தார்.

இதையும் படிங்க: அஜித் குமாரின் AK64 படத்தின் நிலை என்ன? லேட்டஸ்ட் அப்டேட்!

இந்த படம் வெறும் ரூ 9 முதல் 10 கோடி செலவில் உருவான இப்படம் தற்போது, சுமார் ரூ 75 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் வாங்கியுள்ள நிலையில், எப்போது வெளியாகும் என எதிர்பார்த்துவருகின்றனர். இப்படமானது வரும் 2026 மார்ச் 26ம் தேதியில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகிறது.

Follow Us
தூங்கி எழுந்ததும் நீல நிறமாக மாறிய நபர் - என்ன நடந்தது?
ஈரான் மீது நடத்தப்படும் தாக்குதல்.. எழுந்த புதிய சிக்கல்..
உலகின் அருவருப்பான பெண் என அழைத்த மக்கள் - குழந்தைகளுக்கு சிறந்த தாயாக மாறிய பெண்
"தெலுங்கு பேச தடுமாறினேன், பதற்றத்தில் தவறு நடந்துவிட்டது".. மன்னிப்பு கேட்ட பார்த்திபன்..