Thaai Kizhavi Movie: ராதிகா சரத்குமாரின் ‘தாய் கிழவி’ பட ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது? – வெளியான அப்டேட் இதோ!!

Thaai Kizhavi Movie Trailer Update: தமிழில் 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் பிரபல கதாநாயகியாக இருந்துவந்தவர் ராதிகா சரத்குமார். இவர் லீட் கதாநாயகியாக நடிக்க, கிராமத்து கதையில் தயாராகியுள்ள படம்தான் தாய் கிழவி. தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

Thaai Kizhavi Movie: ராதிகா சரத்குமாரின் தாய் கிழவி பட ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது? - வெளியான அப்டேட் இதோ!!

தாய் கிழவி படம்

Updated On: 

22 Feb 2026 18:18 PM

 IST

கோலிவுட் சினிமாவில் அறிமுக இயக்குநராக நுழைந்து, தற்போது சிவகார்த்திகேயனின் (Sivakarthikeyan) 26வது படத்தை இயக்கவுள்ளவர் இயக்குநர் சிவகுமார் முருகேசன் (Sivakumar Murugesan). அந்த வகையில் இவரின் இயக்கத்தில் முதல் முதலில் தயாராகியுள்ள படம்தான் “தாய் கிழவி” (Thaai Kizhavi). இப்படத்தில் நடிகை ராதிகா சரத்குமார் (Radhika Sarathkumar) லீட் கதாநாயகியாக நடிக்க, அவருடன் நடிகர்கள் பாலா சரவணன், சிங்கம்புலி, முனீஷ்காந்த் மற்றும் இளவரசு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தில் நடிகை ராதிகா சரத்குமார் “பவுனுத்தாயி” என்ற கிழவி வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்க, சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனமானது தயாரித்துள்ளது.

முற்றிலும் கிராமப்புற கதைக்களத்தில், பொழுதுபோக்கு மற்றும் நகைச்சுவை கலந்த படமாக இந்த தாய் கிழவி படம் தயாராகியுள்ளது. இப்படமானது வரும் 2026 பிப்ரவரி 27ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. அந்த வகையில் இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது என்பது குறித்து படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: பல கட்டுப்பாடுகள்.. ஹாலிவுட் சினிமாவிற்கு சென்ற காரணம் இதுதான் – பிரியங்கா சோப்ரா!

ராதிகா சரத்குமாரின் தாய் கிழவி பட ட்ரெய்லர் எப்போது:

இந்த தாய் கிழவி படமானது கிட்டத்தட்ட ரூ 8 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ளதாம். இப்படத்திற்கு இசைஅயமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள நிலையில், இதுவரை 2 பாடல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தின் ரிலீசிற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், தாய் கிழவி பட ட்ரெய்லர் வரும் 2026 பிப்ரவரி 23ம் தேதியில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிற்து.

தாய் கிழவி படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:

தாய் கிழவி படத்தை பாராட்டிய கமல்ஹாசன் :

நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பில்தான் சிவக்குமார் முருகேசன் மற்றும் சிவகார்த்திகேயனின் சேயோன் படமானது தயாராகவுள்ளது. அந்த வகையில் சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் வெளியாகி காத்திருக்கும் படம் தாய் கிழவி. இப்படமானது நடிகர் கமல்ஹாசனுக்கு சிறப்பாக காட்டப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: புஷ்பா 2 படத்திற்காக ஃபிலிம் ஃபேர் விருது வென்ற அல்லு அர்ஜுன் – வைரலாகும் எக்ஸ் பதிவு

அந்த வகையில் இப்படத்தய் பார்த்த கமல்ஹாசன், படக்குழுவினரையும், இயக்குநர் மற்றும் சிவகார்திகேயனையும் பாராட்டியிருந்தார். இப்படமானது நிச்சயமாக மக்கள் மத்தியில் வரவேற்கப்படும் என்றும் அவர் விமர்சனம் கொடுத்திருந்தார். அந்த வகையில் தற்போது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியிலும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
Related Stories
Kayadu Lohar: ஐஆம் கேம் படம் முற்றிலும் வித்தியாசமானது.. நிச்சயம் அனைவர்க்கும் பிடிக்கும் – கயாடு லோஹர் பேச்சு!
Hi Movie: நயன்தாரா – கவின் நடிக்கும் ஹாய் பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? தமிழ் புத்தாண்டை முன்னிட்டு படக்குழு அறிவிப்பு!
அவன் குறுக்க மட்டும் போயிடாதீங்க சார் – 4 ஆண்டுகளை நிறைவு செய்தது கேஜிஎஃப் சாப்டர் 2 படம்
சரி என்று தெரியாமல் தவறு என்று புரியாமல் எதில் வந்து சேர்ந்தேன் நான் எதிர்பார்க்கவில்லை நான் – 19 ஆண்டுகளை நிறைவு செய்தது உன்னாலே உன்னாலே படம்
GV Prakash: ஜோ பட இயக்குநரின் புது படத்தில் இணைந்த ஜி.வி. பிரகாஷ்.. நடிகை யார் தெரியுமா?
புத்தாண்டை முன்னிட்டு குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட ஹரிஷ் கல்யாண்
வரலாறு படைத்துள்ளீர்கள் - ஆர்தமிஸ் விண்வெளி பயணக்குழுவை பாராட்டிய டிரம்ப்
ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு கட்டணம் விதிக்கத் திட்டம்!!
நடுவானில் விமானத்தின் 2 எஞ்சின்களும் செயலிழப்பு.. துரிதமாக செயல்பட்டு 69 பேரை காப்பாற்றிய பைலட்!
நடிகை ஹன்சிகா தனது மைத்துனி மீது கொடுத்த புகார்