Priyamani: சூர்யா, கார்த்தி இருவரும் சொக்கத்தங்கம்.. பிரியாமணி நெகிழ்ச்சி!

Priyamani Praises Suriya And Karthi : தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் பிரியாமணி. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், சூர்யா மற்றும் கார்த்தியைப் பற்றி நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார். அவர்களைப் பற்றி பிரியாமணி பேசியதை விளக்கமாகப் பார்க்கலாம்.

Priyamani: சூர்யா, கார்த்தி இருவரும் சொக்கத்தங்கம்.. பிரியாமணி நெகிழ்ச்சி!

சூர்யா, கார்த்தி மற்றும் பிரியாமணி

Published: 

03 Jul 2025 17:21 PM

 IST

நடிகை பிரியாமணி (Priyaman) தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார். இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடனும் படங்களில் நடித்தது அசத்தியிருக்கிறார். இவர் கடந்த 2004ம் ஆண்டு வெளியான “கண்களால் கைது செய்” (Kangalal Kaidhu Sei)  என்ற படத்தில் நடித்து தமிழில் நாயகியாக அறிமுகமானார். இந்த படமானது அவருக்கு அந்த அளவிற்கு வரவேற்புகளைக் கொடுக்கவில்லை. அதை தொடர்ந்து மலையாளம் சினிமாவிலும் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழி படங்களில் நடித்துவந்தார் பிரியாமணி. இவருக்கு தமிழில் பிரம்மாண்ட வெற்றிப் படமாக அமைந்தது பருத்திவீரன் (Paruthiveeran  என்று கூறலாம். நடிகர் கார்த்தியுடன் (karthi) இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். கடந்த 2007ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம்தான் கார்த்தியின் முதல் படமும் கூட, இந்த படமானது பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. அதைத் தொடர்ந்து சூர்யா (Suriya) மற்றும் கார்த்தியுடனும் படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும் தற்போது இவர் தளபதி விஜய்யின் (Thalapathy Vijay ) இறுதி படமான ஜன நாயகன்  (Jana Nayagan) படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார் . மேலும் வெப் தொடர்களிலும் நடித்துவருகிறார் நடிகை பிரியாமணி. இந்நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “சூர்யா மற்றும் கார்த்தி 96 ஹால்மார்க் தங்கம் என்று நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார். அதைப் பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.

நடிகை பிரியாமணியின் நியூ போட்டோஷூட் பதிவு :

சூர்யா மற்றும் கார்த்தி பற்றி பிரியாமணி பேச்சு :

நடிகை பிரியாமணி குட் வைஃப் என்ற வெப் தொடரில் நடித்திருக்கிறார். இந்த தொடரின் தொடர்பாகச் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டார். அந்த நேர்காணலில் பேசிய பிரியாமணி, “நான் சூர்யாவுடன், ரத்த சரித்திரம் படத்தில் மட்டும்தான் இணைந்து நடித்தேன். அந்த ஒரே படம் மட்டும்தான். ஆனால் அதிலே தெரிந்தது சூர்யா எவ்வளவு பெரிய பொக்கிஷம் என்று எனக்கு தெரியவந்தது. 96 ஹால்மார்க் தங்கம் போலச் சூரியாவும்,  கார்த்தி இருவரும் சொக்கத்தங்கம்.

மேலும் அவர்களின் குடும்பமும் அப்படித்தான். எனது கல்யாணத்திற்கு கார்த்தி வந்திருந்தார், மேலும் நாங்கள் இன்றுவரையிலும் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். எனது பிறந்தநாளுக்கு அவர் மெசேஜ் செய்து வாழ்த்துக் கூறுவார், நானும் அவரின் பிறந்தநாளுக்காக வாழ்த்துக்களைக் கூறியிருக்கிறேன். ஆனால் நான் சூர்யாவிடம் அதிகம் பேசியதில்லை, ஜோதிகாவிடம் பேசியிருக்கிறேன். அவருடன் ஒருமுறை ஒரு படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசியிருக்கிறேன். சூர்யாவுடன் ரத்தசதித்திரம் படத்தில் பணிபுரியும்போதுதான் பேசியிருக்கிறேன்” என நடிகை பிரியாமணி ஓபனாக பேசியிருந்தார். இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குட்டியை காப்பாற்ற தாய் குரங்கு செய்த செயல்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..
இந்தியாவின் முதல் அதிவேக புல்லட் ரயில் திட்டம்.. மும்பை - அகமதாபாத் இடையே வரும் மாற்றம்..
கிரீன்லாந்தில் நிலவும் பதற்றம்.. தங்கம், வெள்ளி விலை புதிய உச்சம்!!
இணையத்தில் வைரலாகும் விராட் கோலியின் வீடியோ.. என்ன தெரியுமா?