விஜயகாந்தின் கேப்டன் பிரபாகரன் படத்தின் ரீ ரிலீஸில் தேம்பி அழுத பிரேமலதா
Captain Prabhakaran: தமிழ் சினிமா ரசிகர்களிடையே அன்புடன் கேப்டன் என்று அழைக்கப்படுபவர் நடிகர் விஜயகாந்த். இவரது பிறந்த நாளை முன்னிட்டு கேப்டன் பிரபாகரன் படம் தற்போது ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்தை திரையரங்கில் பார்த்த பிரேமலாதா விஜயகாந்த் தேம்பி அழும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பிரேமலதா விஜயகந்த்
மதுரை மாவட்டத்தில் 1952-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி பிறந்தவர் விஜயராஜ் அழகர்சாமி. இவர்தான் பின் நாட்களில் விஜயகாந்தாகவும் கேப்டனாகவும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். நடிகராக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் அரசியல் தலைவராகவும் மக்கள் மனதில் இடம் பிடித்தார். இந்த நிலையில் அவர் தனது 71-வது வயதில் கடந்த 28-ம் தேதி டிசம்பர் மாதம் 2023-ம் ஆண்டு உயிரிழந்தார். இவரது இறப்பிற்கு மொத்த தமிழக மக்களும் சோகத்தில் ஆழ்ந்தது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பலப் படங்களில் நடிகர் விஜயகாந்திற்கு (Captain Vijayakanth) அஞ்சலி செலுத்தும் விதமாக அவரது காட்சிகளையும், பாடல்களையும் பயன்படுத்தினர். சிலர் டீ ஏஜிங் மூலமாக தங்களது படங்களில் விஜயகாந்தை காட்டியது திரையரங்கில் ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்தது.
இந்த நிலையில் நடிகர் விஜயகாந்தின் 73-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது 100-வது படமான கேப்டன் பிரபாகரன் படத்தை ரீ ரிலீஸ் செய்யப் படக்குழு திட்டமிட்டு இருந்தது. அதன்படி இன்று 22-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தை ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் படக்குழுவினர் அனைவரும் திரையரங்குகளில் பார்த்தனர்.
விஜயகாந்தை திரையில் பார்த்து தேம்பி அழுத பிரேமலதா:
அதன்படி விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் தனது மூத்த மகன், தம்பி மற்றும் கட்சி தொண்டர்களுடன் படத்தை திரையங்கிற்கு சென்று பார்த்தார். அப்போது திரையில் விஜயகாந்தின் காட்சியைப் பார்த்ததுமே பிரேமலதா விஜயகாந்தின் கண்ணீர் விட்டு அழும் காட்சி பார்ப்பவர்களை கழங்கச் செய்துள்ளது. மேலும் அவர் அருகில் இருந்த மூத்த மகன் விஜய் பிரபாகரன் அழுதது குறிப்பிடத்தக்கது.
படத்தைப் பார்த்த பிறகு விஜயகாந்தின் இளைய மகன் சண்முகப்பாண்டியன் இந்தப் படத்தை திரையரங்கில் பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப் படம் வெளியாகும் போது நான் பிறக்கவில்லை. ஆனால் அந்த அனுபவம் எனக்கு தற்போது கிடைத்துள்ளது. மேலும் இது தற்போது உள்ள டெக்னாலஜிகள் அப்போதே பயன்படுத்தியுள்ளது மிகவும் பிரமிப்பாக இருந்தது என்று அவர் தெரிவித்து இருந்தார்.
Also Read… லியோ படத்தில் என் கதாப்பாத்திரத்தை கேட்டதும் பயந்துட்டேன் – டான்ஸ் மாஸ்டர் சாண்டி!
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
Time to watch #CaptainPrabhakaran…
See you on the other side… pic.twitter.com/51yi2QESbs
— Avinash Ramachandran (@Avinash_R13) August 22, 2025
Also Read… தனது படங்களை ரீ ரிலீஸ் செய்ய திட்டமிடும் டி. ராஜேந்தர் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்!