பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் முதல் எவிக்‌ஷன் யார் தெரியுமா? இணையத்தில் கசிந்த தகவல்

Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி தற்போது ஒரு வாரம் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் இந்த வாரம் யார் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என்பது குறித்த தகவல் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் முதல் எவிக்‌ஷன் யார் தெரியுமா? இணையத்தில் கசிந்த தகவல்

பிக்பாஸ்

Published: 

12 Oct 2025 11:27 AM

 IST

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 (Bigg Boss Tamil Season 9)நிகழ்ச்சி தொடங்கி இன்றுடன் 7 நாட்கள் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் 5-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு ஞாயிற்றுக்கிழமை பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி மிகவும் பிரமாண்டமாக தொடங்கியது. இந்த நிலையில் 20 போட்டியாளர்களை பிக்பாஸ் வீட்டிற்குள் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான நடிகர் விஜய் சேதுபதி அறிமுகம் செய்துவைத்து அனுப்பினார். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் வீட்டிற்குள் சென்ற அன்று முதலே சர்ச்சைகள் தொடங்கியது. மேலும் சண்டைகளும் தொடங்கியது. இந்த சீசனைப் பொருத்தவரை பிக்பாஸ் நிகழ்ச்சி குழு ஒரு டாஸ்கை உருவாக்கி அதனை போட்டியாளர்களை விளையாட வைத்து சண்டையை மூட்டிவிட வேண்டிய தேவையே இல்லாத அளவிற்கு போட்டியாளர்களை மிகவும் வன்மத்துடன் இருப்பது பார்வையாளர்களுக்கு நன்றாக தெரிகிறது.

இதுகுறித்து ரசிகர்கள் தங்களது கருத்துகளையும் தொடர்ந்து சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 20 போட்டியாளர்கள் உள்ளே சென்ற நிலையில் முதல் வார நாமினேஷனில் ஆதிரை, அப்சரா, வியானா, திவாகர், பிரவீன் காந்தி, பிரவீன் ராஜ் மற்றும் கலையரசன் ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர். மேலும் சில உடல்நலப் பிரச்சனை காரணமாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு போட்டியாளர் நந்தினி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் மொத்தம் 19 போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் உள்ளனர்.

முதல் வார எவிக்‌ஷனின் இந்தப் போட்டியாளர் தான் வெளியேறுகிறார்:

இந்த நிலையில் இந்த வாரம் வீட்டில் உள்ள 19 போட்டியாளர்களில் இருந்து ஒருவர் வெளியேற உள்ளார். அதன்படி மக்களிடையே குறைவான வாக்குகளைப் பெற்ற இயக்குநர் பிரவீன் காந்தி வீட்டை விட்டு வெளியேற உள்ளார் என்ற தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. பிரபல இயக்குநராக இவர் இருந்தாலும் ரசிகர்களிடையே ஓட்டை பெற தவறியதால் இவர் தான் முதல் வார எவிக்‌ஷன் என்பது உறுதியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போது அறிவிக்கப்படும்.

Also Read… பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியை விட்டு தீடீரென வெளியேறிய போட்டியாளர் நந்தினி… காரணம் என்ன?

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்வதை நிறுத்துங்கள் – நடிகை பிரியங்கா மோகன் காட்டம்!