LIK Movie: பிரதீப் ரங்கநாதனின் ‘LIK’ படத்திலிருந்து ‘பூக்கட்டும்’ லிரிக்கல் பாடல் வெளியீடு!
Pookattum Lyric Video Song: பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் 4வது படமாக வெளியீட்டிற்கு காத்திருப்பது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தயாராகியுள்ள இப்படத்திலிருந்து, பூக்கட்டும் என்ற புது லிரிக்கல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

பூக்கட்டும் லிரிக்கல் பாடல்
இயக்குநர் விக்னேஷ் சிவனின் (Vignesh Shivan) இயக்கத்தில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாக தயாராகியுள்ள படம்தான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (Love Insurance Kompany). இப்படத்தில் கதாநாயகனாக நடிகர் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan) நடிக்க, அவருக்கு ஜோடியாக இளம் நடிகை கிரித்தி ஷெட்டி (Krithi Shetty) நடித்துள்ளார். இந்த படமானது மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில், வித்தியாசமான கதையில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக தயாராகிவந்தது. இப்படத்தின் ஷூட்டிங் 2024ம் ஆண்டு இறுதியில் தொடங்கிய நிலையில், 2025ம் ஆண்டு இறுதியில் முடிவடைந்தது. அதை தொடர்ந்து கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கும் மேலாக போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளில் இப்படம் இருந்தது அந்த வகையில் வரும் 2026 ஏப்ரல் 10ம் தேதியில் இப்படமானது வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள நிலையில், இதுவரை தீமா தீமா, பட்டுமா, அடாவடி போன்ற பாடல்கள் வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து இப்படத்திலிருந்து 4வது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. “பூக்கட்டும்” (Pookattum) என்ற இப்பாடலை விக்னேஷ் சிவன் எழுத, அனிருத் ரவிச்சந்தர் (Anirudh Ravichander) மற்றும் பாடகி பூமி இணைந்து பாடியுள்ளனர். தற்போது வெளியான இந்த லிரிக்கல் பாடல் ரசிகர்கள் மத்தியில் பரவிவருகிறது.
இதையும் படிங்க: ரஜினியின் ஜெயிலர் 2 பட ஷூட்டிங்கை முடித்த மோகன்லால்? – வைரலாகும் தகவல்!
LIK திரைப்படத்திலிருந்து வெளியான பூக்கட்டும் லிரிக்கல் பாடல் குறித்த எக்ஸ் பதிவு:
Straight out of Rockstar’s soul 🎸#Pookattum lyric video out now ❤️🔥 : https://t.co/pdFR8Q81QM#LIKFromApril10 #LIK #LoveInsuranceKompany
An @anirudhofficial musical 🎵
A #Wikki originalStarring @pradeeponelife @IamKrithiShetty @iam_SJSuryah @Gourayy @iYogiBabu… pic.twitter.com/RR8kAlwN3I
— Seven Screen Studio (@7screenstudio) April 7, 2026
LIK திரைப்படத்தின் டிக்கெட் ப்ரீ- புக்கிங் தொடக்கம் :
இந்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் பிரதீப் ரங்கநாதன், கிரித்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு, ஆனந்த ராஜ், சுனில் ஷெட்டி, கௌரி ஜி கிஷன், சீமான் போன்ற பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் கதையானது 2040ம் ஆண்டில் நடக்கும் ஒரு காதல் கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ளது. சாதாரணமான மனிதனின் காதல் மற்றும் ஆப் மூலம் காதலிக்கும் மனிதர்கள் என வித்தியாசமான கதைக்களத்தில் தயாராகியுள்ளது.
இதையும் படிங்க: தேர்தல் முடியும்வரை.. TN2026 பட ரிலீஸை நிறுத்த கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு!
இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. அந்த வகையில் இப்படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இதன் டிக்கெட் ப்ரீ புக்கிங் இன்று 2026 ஏப்ரல் 7ம் தேதியில் தொடங்கியுள்ளது. அந்த விதத்தில் இதுவரையில் டிக்கெட் புக்கிங்கில் ரூ 1 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. அந்த வகையில் பிரதீப் ரங்கநாதனுக்கு 4வது ரூ 100 கோடி வசூல் படமாக, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.