மீண்டும் மீண்டுமா? கடைசி நேரத்தில் ஒத்திவைத்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படக்குழு – ஏமாற்றத்தில் ரசிகர்கள்!

LIK Movie Pre-release Event: விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில், தமிழில் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள படம்தான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி இன்று (06/04/2026) சென்னையில் நடைபெறவிருந்த நிலையில், அதை ஒத்திவைத்ததாக படக்குழு அறிவித்துள்ளது.

மீண்டும் மீண்டுமா? கடைசி நேரத்தில் ஒத்திவைத்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படக்குழு - ஏமாற்றத்தில் ரசிகர்கள்!

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம்

Updated On: 

06 Apr 2026 17:14 PM

 IST

நடிகர் பிரதீப் ரங்கநாதனின் (Pradeep Ranganathan) நடிப்பில், முற்றிலும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகியுள்ள திரைப்படம்தான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (Love Insurance Kompany). இந்த படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் (Vignesh Shivan) இயக்கியுள்ள நிலையில், செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் மற்றும் நயன்தாராவின் (Nayanthara) ரௌடி பிக்ச்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படமானது 2040ம் ஆண்டில் நடக்கும் காதல் கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக இளம் நடிகை கிரித்தி ஷெட்டி (Krithi Shetty) நடித்துள்ளார். இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதியில் வெளியாகவுள்ளது. அந்த வகையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.

அந்த வகையில் தற்போது ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சியான தகவலை லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படக்குழு அறிவித்துள்ளது. இது தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது என்னவென்றால், சென்னையில் நடைபெறவிருந்த ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியை படக்குழு ஒத்திவைத்துள்ளதாம்.

இதையும் படிங்க: அரசன் படத்தில் இணைந்த நடிகர் கென் கருணாஸ்… வைரலாகும் தகவல்

ப்ரீ -ரிலீஸ் நிகழ்ச்சி குறித்து படக்குழு வெளியிட்ட அறிவிப்பு:

பிரதீப் ரங்கநாதனின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் தெலுங்கு ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றிருந்தது. அதைத் தொடர்ந்து இன்று 2026 ஏப்ரல் 6ம் தேதியில், சென்னை வேல்ஸ் யூனிவெர்சிட்டியில் இப்படத்தின் ப்ரீ- ரிலீஸ் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் இன்று (06/04/2026) சென்னையில் பயங்கரமாக மழைப் பெய்துவரும் நிலையில், இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி 2026 ஏப்ரல் 07ம் தேதியில் நடைபெறுவதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க: ஆயிரத்தில் ஒருவன் – புதுப்பேட்டை படங்களில் வேண்டும் என்றே அதை செய்தோம்… இயக்குநர் செல்வராகவன்

LIK படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

சமீபத்தில் பிரதீப் ரங்கநாதனின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பைப் பெற்றிருந்தது. இந்த படமானது சாதரண மனிதர்கள் மற்றும் ஆப் மூலம் காதலிக்கும் மனிதர்கள் என வித்தியாசமான காதல் கதையில் தயாராகியுள்ளது. அந்த வகையில் இப்படமானது வரும் 2026 ஏப்ரல் 10ம் தேதியில் கண்டிப்பாக வெளியாகிவிடும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இந்த படமானது பிரதீப் ரங்கநாதனுக்கு மேலும் ஒரு ரூ 100 கோடி வசூலைக் கொடுக்கும் திரைப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துவருகிறது.

Follow Us
2 அணுகுண்டு தாக்குதல்களுக்கு பிறகும் உயிர் பிழைத்த மனிதர் - எதிர்கொண்ட கசப்பான அனுபவங்கள்
காசாவில் போர் எதிரொலி - பொம்மைக்கு இறுதி ஊர்வலம் நடத்தும் குழந்தைகள் - மனதை உலுக்கும் காட்சி
ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் நான் நடிக்க மாட்டேன் - ஆண்ட்ரியா அதிர்ச்சி தகவல்
நண்பரை கொலை செய்த நபர் - பேய் பயம் காரணமாக போலீசில் சரண்