Dude Movie: பிரதீப் ரங்கநாதனின் குரலில்… ‘டியூட்’ படத்தின் ‘சிங்காரி’ பாடல் வெளியானது!

Dude Movie 3rd Single: நடிகர் பிரதீப் ரங்கநாதன் முன்னணி ஹீரோவாக நடித்திருக்கும் படம் டியூட். இப்படமானது வரும் 2025 தீபாவளிக்கு வெளியாகும் நிலையில், இப்படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகிவருகிறது. அந்த வகையில் இப்படத்தின் மூன்றாவது பாடலை பிரதீப் ரங்ககநாதன் பாடியிருக்கும் நிலையில், தற்போது அது வெளியாகியுள்ளது.

Dude Movie: பிரதீப் ரங்கநாதனின் குரலில்... டியூட் படத்தின் சிங்காரி பாடல் வெளியானது!

சிங்காரி பாடல்

Updated On: 

04 Oct 2025 19:44 PM

 IST

கோலிவுட் சினிமாவில் டியூட் (Dude) என்ற படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் கீர்த்திஸ்வரன் (Keerthiswaran). இவரின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan) ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) நடித்துள்ளார். இந்த டியூட் படமானது அதிரடி காதல், நட்பு மற்றும் குடும்பம் என மாறுபட்ட திரைக்கதையில் தயாராகியுள்ளதாம். இந்த படைத்த அஜித் குமாரின் குட் பேட் அக்லி படத்தைத் தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் (Mythri Movie Makers) என்ற நிறுவனம்தான் தயாரித்துள்ளது. மேலும் இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். தமிழ் சினிமாவில் இவரின் இசையமைப்பில் முதலில் வெளியாகவும் படமாக டியூட் அமைந்துள்ளது.

இப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி, அதை தொடர்ந்து இப்படத்தின் பாடல்களும் வெளியாகிவருகிறது. அந்த வகையில், தற்போது இப்படத்திலிருந்து “சிங்காரி” (Singari) என்ற 3வது பாடலையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலை நடிகர் பிரதீப் ரங்கநாதன்தான் பாடியுள்ளார். இதன் மூலம் சினிமாவில் இவர் பாடகராகவும் அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சூரியின் மண்டாடி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து… நல்வாய்ப்பாக உயிர் தப்பிய படக்குழுவினர்

டியூட் படத்தின் சிங்காரி என்ற பாடலை வெளியிட்ட படக்குழு :

நடிகர் பிரதீப் ரங்கநாதன், கடந்த 2019ம் ஆண்டு வெளியான கோமாளி என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்த படத்தில் நடிகர் ரவி மோகன் முன்னணி வேடத்தில் நடித்திருந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தை அடுத்து, இவரே லவ் டுடே என்ற படத்தை இயக்கி, அதில் ஹீரோவாகவும் அறிமுகமானார்.

இதையும் படிங்க: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 வீட்டில் இத்தனை வசதிகளா? வைரலாகும் வீடியோ!

இயக்குநராக தொடங்கி, படத்தில் ஹீரோவாகவும் பிரபலமானார். இந்த படத்தைத் தொடர்ந்து டிராகன், லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, டியூட் என தொடந்து படங்களில் நடித்து வந்தார். மேலும் தற்போது பாடகராகவும் அறிமுகமாகியுள்ளார். இந்த டியூட் படத்தின் 3வது பாடலான “சிங்காரி” என்ற பாடலை நடிகர் பிரதீப் ரங்கநாதன்தான் பாடியுள்ளார். இந்நிலையில், தற்போது இந்த பாடலானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டியூட் படத்தின் ஓடிடி உரிமையை பெற்ற நிறுவனம்

இயக்குநர் கீர்த்திஸ்வரன் மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் இந்த டியூட் படமானது உருவாகியுள்ளது. இதில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் நடிகர்கள் சரத்குமார், ரோகிணி மற்றும் ஹிருது ஹூரன் உட்பட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர்.

மேலும் நடிகர் சிவகார்த்திகேயனும் கேமியோ வேடத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாம். இந்த படம் வரும் 2025 அக்டோபர் 17ம் தேதியில் வெளியாகும் நிலையில், நவம்பர் 20ம் தேதிக்குள் ஓடிடியில் வெளியாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.