Pradeep Ranganatha: எனது மறக்கமுடியாத தீபாவளி ரிலீஸ் படங்கள் அதுதான்- பிரதீப் ரங்கநாதன் பேச்சு!

Pradeep Ranganathan About Memorable Diwali Releases:சினிமாவில் பிரபல இளம் நாயகனாக ரசிகர்களை கவந்துவருபவர் பிரதீப் ரங்கநாதன். இவரின் முன்னணி நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்கள் வெளியாகிவரும் நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் தனது தீபாவளி படங்கள் நினைவுகள் குறித்து பகிர்ந்துள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

Pradeep Ranganatha: எனது மறக்கமுடியாத தீபாவளி ரிலீஸ் படங்கள் அதுதான்- பிரதீப் ரங்கநாதன் பேச்சு!

பிரதீப் ரங்கநாதன்

Published: 

12 Oct 2025 19:41 PM

 IST

நடிகர் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan) முன்னணி நடிப்பில் தமிழில் தொடர்ந்து திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. ரவி மோகனின் கோமாளி (Comali) திரைப்படத்தின் மூலம் இயக்குநராக நுழைந்த இவர், லவ் டுடே (Love Today) என்ற படத்தில் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமானார். இந்த படமானது கடந்த 2022ம் ஆண்டில் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்திருந்தது. இந்த படத்தை தொடர்ந்து தற்போதுவரை சினிமாவில் ஹீரோவாகவே நடிக்க தொடங்கியுள்ளார். இவரின் நடிப்பில் இறுதியாக டிராகன் (Dragon) என்ற படமானது வெளியாகியிருந்தது. இந்த படமானது இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்து ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து வெற்றிபெற்றிருந்தது. இந்த படத்தைத் தொடர்ந்து லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (Love Insurance Kompany) மற்றும் டியூட் (Dude) என 2 படங்ககளில் நடித்துவந்தார். இதில் அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் (Keerthiswaran) இயக்கத்தில் வெளியாக காத்திருக்கும் படம்தான் டியூட்.

இப்படமானது வரும் 2025 அக்டோபர் 17ம் தேதியில் தீபாவளியை முன்னிட்டு வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சிறப்பாக நடைபெற்றுவரும் நிலையில், நேர்காணல் ஒன்றில் பிரதீப் ரங்கநாதன் கலந்துகொண்டார். அதில் அவர், ஒரு காலத்தில் தீபாவளி என்றால் அவருக்கு எவ்வாறு இருக்கும் என்பது பற்றி ஓபனாக பேசியுள்ளார்.

இதையும் படிங்க: நிஜமாவே விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனாவிற்கு நிச்சயம் முடிந்ததா? வைரலாகும் வீடியோ

முன்பு தனது தீபாவளி ரிலீஸ் திரைப்படங்கள் பற்றி பிரதீப் ரங்கநாதன் பகிர்ந்த விஷயம்:

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய பிரதீப் ரங்கநாதன், அதில் “எனக்கு தீபாவளியை பொறுத்தவரையிலும் வேலாயுதம் மற்றும் 7ஆம் அறிவு என இரு படங்ககளும் ஒரே நாளில் வெளியிடப்பட்டிருந்தது. மேலும் மற்றொரு தீபாவளிக்கு துப்பாக்கி படமும் வெளியாகியிருந்தது. அதுவே எனது மறக்கமுடியாத தீபாவளி ரிலீஸ் திரைப்படங்கள்.

இதையும் படிங்க: கருப்பு சாமியும் கன்று குட்டியும் கலங்க வைக்கிறது.. இட்லி கடையை பாராட்டிய செல்வராகவன்!

அந்த வகையில் தற்போது இந்த தீபாவளிக்கு எனது டியூட் படத்தில் கட்அவுட் திரையரங்குகளில் இருக்கிறது. அந்த உணர்வை என்னால் வார்த்தைகளால் விளக்க முடியாது” என்று நடிகர் பிரதீப் ரங்கநாதன் ஓபனாக பேசியுள்ளார். இது தொடர்பான தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டுவருகிறது.

டியூட் திரைப்படத்தின் ட்ரெய்லர் குறித்து பிரதீப் ரங்கநாதன் வெளியிட்ட பதிவு :

இயக்குனர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜூ இணைந்து நடித்திருக்கும் படம்தான் டியூட். இந்த் படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். அதிரடி காதல் மற்றும் எமோஷனல் கதைக்களத்தில் இப்படமானது தயாராகியுள்ளது. இந்த படம் வரும் 2025 அக்டோபர் 17ம் தேதியில் தீபாவளியை முன்னிட்டு வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.