Pradeep Ranganathan: டியூட் படத்தில் எனது கதாபாத்திரம் இப்படிதான் இருக்கும்- பிரதீப் ரங்கநாதன் ஓபன் டாக்!
Pradeep Ranganathan About Dude: தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் பிரதீப் ரங்கநாதன். இவரின் நடிப்பில் தமிழில் வரும் 2025 தீபாவளிக்கு வெளியாகவும் படம் டியூட். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய பிரதீப் ரங்கநாதன், டியூட் படத்தில் தனது கதாபாத்திரத்தை பற்றி ஓபனாக பேசியுள்ளார்.

பிரதீப் ரங்கநாதன்
தமிழ் சினிமாவில் பிரதீப் ரங்கநாதனின் (radeep Ranganathan) நடிப்பில் டிராகன் (Dragon) படத்தை தொடர்ந்து, மிக பிரமாண்டமாக தயாராகியுள்ள படம் தான் டியூட் (Dude). இந்த படத்தை அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் (Keerthiswaran) இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் சுதா கொங்கராவின் உதவி இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டியூட் படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மமிதா பைஜூ (Mamitha Baiju) நடித்துள்ளார். இந்த படமானது அதிரடி காதல் மற்றும் நட்பு தொடர்பான கதைக்களத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் (Sai Abhyankkar) இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் இப்படத்திலிருந்து கிட்டத்தட்ட 3 பாடல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.
அந்த வகையில் இப்படத்தின் வெளியீட்டிற்கு சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பிரதீப் ரங்கநாதன் கலந்துகொண்டார். அதில் பேசிய அவர், டியூட் படத்தின் தனது கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அந்த படத்தை நான் இயக்கவில்லை… வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரதீப் ரங்கநாதன்!
டியூட் படத்தில் தனது கதாபாத்திரம் பற்றி பேசிய பிரதீப் ரங்கநாதன் :
அந்த நேர்காணலில் நடிகர் பிரதீப் ரங்கநாதன்பல்வேறு விஷயங்களை பகிர்ந்துகொண்டார். குறிப்பாக டியூட் படத்தை பற்றியும் பேசியிருந்தார். அதில் நடிகர் பிரதீப் ரங்கநாதன், “டியூட் படத்தில் எனது வேடம் மிகவும் இனிமையான கதாபாத்திரம்தான். இந்த கதாபாத்திரம் ஒரு ராவணன் போலத்தான் இருக்கும்.
இதையும் படிங்க : எனது கேரியரில் நான் பண்ண பெரிய பட்ஜெட் படம் டீசல் தான் – ஓபனாக பேசிய ஹரிஷ் கல்யாண்!
ஆனால் அவர் உண்மையிலேயே இனிமையானவர், அவரது குணம் மிகவும் மென்மையானது, அது நிச்சயம். மேலும் மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்த நினைக்கும் ஒரு கதாபாத்திரம். நிச்சயமாக மிகவும் அருமையாக இருந்தது. மேலும் அவர் தன்னை ஒரு ராஜாவாக நினைக்கிறார், அவ்வளவுதான்” என்று நடிகர் பிரதீப் ரங்கநாதன் அந்த நேர்காணலில் ஓபனாக பேசியிருந்தார்.
டியூட் படம் பற்றி பிரதீப் ரங்கநாதன் பேசிய வீடியோ பதிவு :
#PradeepRanganathan Recent
– #Dude is actually a very sweet character; he’s a Raw’vaana.
– But he’s also genuinely sweet, his character is raw, that’s for sure.
– He thinks of himself as a king and all that.#Likpic.twitter.com/dDghqbKxL1— Movie Tamil (@_MovieTamil) October 6, 2025
இந்த டியூட் படத்தின் வெளியாக இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ளது. வரும் 2025 தீபாவளியை முன்னிட்டு இப்படம் வெளியாகவும் நிலையில், இப்படத்துடன் கிட்டத்தட்ட பல தமிழ் படங்களும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.