விஜயுடன் மோதும் பிரபாஸ்… தி ராஜா சாப் படத்தின் ரிலீஸ் அப்டேட் இதோ!
The Raja Saab Tamil Trailer | தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் பிரபாஸ். இவரது நடிப்பில் தற்போது உருவகியுள்ள படம் தி ராஜா சாப். இந்தப் படத்தின் ட்ரெய்லரை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது. அது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

தி ராஜா சாப்
நடிகர் தளபதி விஜய் (Actor Vijay) நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ஜன நாயகன். இந்தப் படம் நடிகர் விஜயின் நடிப்பில் உருவாகும் கடைசிப் படம் என்பதால் ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை இயக்குநர் எச்.வினோத் எழுதி இயக்கி உள்ளார். படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அதன்படி இந்தப் படம் வருகின்ற ஜனவரி மாதம் 09-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் படத்தின் முதல் பாடல் வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்தப் படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்தப் படத்துடன் எந்த படங்கள் திரையரங்குகளில் வெளியாகிறது என்று தொடர்ந்து அப்டேட்கள் வெளியாகி வருகின்றது.
அதன்படி தமிழில் விஜயின் ஜன நாயகன் படத்துடன் சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் வெளியாகிறது. ஆனால் ஜன நாயகன் வெளியாகி 5 நாட்களுக்குப் பிறகே இந்தப் படம் வெளியாக உள்ளது. மேலும் ஜன நாயகன் படத்துடன் தற்போது பிரபாஸின் தி ராஜா சாப் படம் போட்டியிட உள்ளது. அதன்படி தி ராஜா சாப் படம் மற்ற மொழிகளில் 9-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு வெளியாக உள்ள நிலையில் 10-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு தமிழில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று படத்தின் ட்ரெய்லருடன் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இணையத்தில் ரசிகர்களிடையே கவனம் பெறும் தி ராஜா சாப் பட ட்ரெய்லர்:
இந்தப் படத்தை இயக்குநர் மாருதி எழுதி இயக்கி உள்ள நிலையில் படத்தில் நடிகர் பிரபாஸ் உடன் இணைந்து நடிகர்கள் சஞ்சய் தத், போமன் இரானி, மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார், ஜரீனா வஹாப், சமுத்திரக்கனி, வெண்ணிலா கிஷோர், பிரம்மானந்தம், வி.டி.வி கணேஷ், பிரபாஸ் ஸ்ரீனு யோகி பாபு, சப்தகிரி, சுப்ரீத் ரெட்டி, வரலக்ஷ்மி சரத்குமார், ஜிஷு சென்குப்தா என பலர் நடித்துள்ளனர். மேலும் இந்த படம் ரொமாண்டிக் ஹாரர் காமெடி பாணியில் உருவாகியுள்ள நிலையில் படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read… பிரபல தெலுங்கு நடிகருடன் இணையும் நடிகை மடோனா செபாஸ்டியன்
தி ராஜா சாப் படத்தின் தமிழ் ட்ரெய்லர் இதோ:
Also Read… எனக்கு மிகவும் பிடித்த நடிகருடன் நடிச்சு இருக்கேன் – பள்ளிச்சட்டம்பி படம் குறித்து பேசிய கயாடு லோஹர்