10 ஆண்டுகளைக் கடந்த பிச்சைக்காரன் படம்… விஜய் ஆண்டனி வெளியிட்ட நெகிச்சிப் பதிவு!

10 Years Of Pichaikkaran Movie: தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் ஆண்டி நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் பிச்சைக்காரன். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்ததாக விஜய் ஆண்டனி எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.

10 ஆண்டுகளைக் கடந்த பிச்சைக்காரன் படம்... விஜய் ஆண்டனி வெளியிட்ட நெகிச்சிப் பதிவு!

பிச்சைக்காரன்

Published: 

04 Mar 2026 20:12 PM

 IST

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி தற்போது நாயகனாகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார் விஜய் ஆண்டனி. இவரது இசையில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல இவரது நடிப்பில் வெளியான படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் பிச்சைக்காரன். இந்தப் படம் கடந்த மார்ச் மாதம் 4-ம் தேதி 2016-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை இயக்குநர் சசி எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி உடன் இணைந்து நடிகர்கள் சட்னா டைட்டஸ், பகவதி பெருமாள், வழக்கு என் முத்துராமன், தீபா ராமானுஜம், கலா, ரக்ஷிதா, சந்தியாபாபு ஏழ்வார், தர்ஷன், கார்த்தி, பாலகிருஷ்ணன், ஜானகி அம்மா, லலிதா, தலையன், சுரேஷ், குணசேகர், தமிழ் புலி, மோகன் ராமன், மூர்த்தி, வினோத் சாகர் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் சார்பாக தயாரிப்பாளர் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்து இருந்தார். மேலும் இந்தப் படத்திற்கு விஜய் ஆண்டனியே இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

10 ஆண்டுகளைக் கடந்த பிச்சைக்காரன் படம்:

இந்தப் பிச்சைக்காரன் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த நிலையில் படத்தில் நாயகனாக நடித்து இருந்த நடிகர் விஜய் ஆண்டனி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, 10 வருட தியாகம். 10 வருட ஆன்மா. ஒவ்வொரு இதயத்தையும் தொட்ட ஒரு கதையின் 10 வருடங்கள் என்று அந்தப் பதிவில் விஜய் ஆண்டனி தெரிவித்து உள்ளார். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… வாடிவாசல் படத்தின் தற்போதைய நிலை என்ன? வைரலாகும் தகவல்

விஜய் ஆண்டனி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… தனுஷ் 56 படம் குறித்து அப்டேட் கொடுத்த இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து

Follow Us
எங்கள் விமானம் தாக்கப்படும் அபாயம் - பாகிஸ்தான் சென்ற ஈரான் குழுவினர் அச்சம்
போரைப் போல மோதிக்கொள்ளும் சிம்பான்சிகள் - காரணம் என்ன?
UPI-ல் ரூ.10,000-க்கு மேல் பணம் அனுப்ப ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?.. ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சீனா தயாரித்த செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பு? எழுந்த புதிய பாதுகாப்பு கவலை..