பத்ம பூஷன் விருது பெற்ற நடிகர் அஜித் குமாருக்கு வாழ்த்து சொன்ன பவன் கல்யாண்!

Pawan Kalyan Congratulates Ajith Kumar: இந்திய அரசின் உயரிய விருதான பத்ம பூஷன் விருது திரைப் பிரபலங்கள் உட்பட பலருக்கும் டெல்லியில் 28-ம் தேதி ஏப்ரல் மாதம் 2025-ம் ஆண்டு டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். இதில் நடிகர்கள் அஜித் குமார் மற்றும் நந்தமுரி பாலகிருஷ்ணா ஆகியோருக்கும் விருது வழங்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பத்ம பூஷன் விருது பெற்ற நடிகர் அஜித் குமாருக்கு வாழ்த்து சொன்ன பவன் கல்யாண்!

அஜித் குமார், பவன் கல்யாண், நந்தமுரி பாலகிருஷ்ணா

Published: 

29 Apr 2025 12:10 PM

 IST

நாட்டில் பல்வேறு துறைகளில் சாதிக்கும் மக்களுக்கு இந்திய அரசின் உயரிய விருதான பத்ம பூஷன் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகின்றது. சினிமா மட்டும் இன்றி பல துறைகளில் சாதனைப் படைத்தவர்கள் பலருக்கும் இந்த விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் குடியரசு தினத்தை தொடர்ந்து இந்த விருதுகளின் பட்டியல் அறிவிக்கப்படும். அந்த வகையில் சினிமா துறையில் இருந்து நடிக்ரகள் அஜித் குமார் (Ajith Kumar), நந்தமுரி பாலகிருஷ்ணா (Nandamuri Balakrishna) மற்றும் சோபனா ஆகியோருக்கு இந்த ஆண்டு விருது வழங்கப்பட உள்ளது என்று ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டது. இதில் நடிகர் அஜித் குமார் நடிப்பு மற்றும் கார் ரேஸ் என நாட்டிற்கு பெறுமை சேர்க்கும் விதமாக பல சாதனைகளை செய்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

நடிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பவன் கல்யாண்:

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து நடிகரும் ஆந்திர பிரதேசத்தின் துணை முதல்வருமான பவன் கல்யாண் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அஜித் குமார் மற்றும் நந்தமுரி பாலகிருஷ்ணா இருவருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துச் செய்திகளைப் பகிர்ந்து கொண்டார். அஜித் குமார் மீதான தனது வாழ்த்தை தெரிவித்த பவன் கல்யாண், அஜித் குமாரின் பல்துறை திறன் மற்றும் ரசிகர்கள் மீது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியதற்காக அவரைப் பாராட்டினார்.

அந்தப் பதிவில் அவர் கூறியதாவது, திரை உலகில் அஜித் குமார் ஒரு தனித்துவமான முத்திரையைப் பதித்துள்ளார். கார் ரேஸில் ஃபார்முலா 2 பந்தய வீரராகவும் சிறந்து விளங்குகிறார். நடிகர் மற்றும் கார் பந்தய வீரராக திரு அஜித் குமார் இன்னும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

பவன் கல்யாண் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

மேலும் அஜித் குமாரின் சூப்பர் ஹிட் படமான காதல் கோட்டை போன்ற படங்களைக் குறிப்பிட்டு பேசிய பவன் கல்யாண் அஜித்தின் பன்முகத்தன்மை கொண்ட படைப்புகளையும் பாராட்டி பேசினார். மேலும் அனைத்து வயதினரையும் மகிழ்வித்ததற்காகவும் அஜித் குமாரைப் பாராட்டி இருந்தார் பவன் கல்யாண்.

நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவின் சாதனை குறித்து தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்ட நடிகர் பவன் கல்யாண், தெலுங்குத் திரையுலகில் நந்தமுரி பாலகிருஷ்ணாவின் ஆழமான செல்வாக்கை வெளிப்படையாக கூறினார். வரலாற்று, மத மற்றும் நாட்டுப்புற வேடங்களில் பாலகிருஷ்ணாவின் சக்திவாய்ந்த நடிப்புகள் தலைமுறை தலைமுறையாக ரசிகர்களிடம் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதையும் அந்தப் பதிவில் பவன் கல்யாண் குறிப்பிட்டிருந்தார்.

அதிகரித்து வரும் தங்க குத்தகை.. என்ன காரணம்?
மக்களை காக்கும் வவ்வால்கள் - கிராம மக்களின் விசித்திர நம்பிக்கை
உங்கள் அறையின் ஓரத்தில் நிற்பது பேயல்ல. அது ஸ்லீப் பேரலிசிஸ்!
ஏலியனுடன் தொடர்பில் இருந்த ஜார்ஜ் புஷ்? அமேசான் பிரைம் ஆவண படத்தால் சர்ச்சை