Parasakthi: ஓடிடியில் சாதனை படைத்த சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம்.. அப்படி என்ன செய்தது தெரியுமா?
Parasakthi Movie OTT Record: தமிழில் சிவகார்த்திகேயனின் நடிப்பில் கடந்த 2026 ஜனவரி 10ம் தேதியில் வெளியான திரைப்படம்தான் பராசக்தி. இப்படமானது திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், கடந்த 2026 பிப்ரவரி 7ம் தேதி முதல் ஓடிடியில் வெளியானது. இந்நிலையில் தற்போது இப்படம் ஓடிடியில் புது சாதனைப் படைத்துள்ளது.

பராசக்தி திரைப்படம்
நடிகர் சிவகார்த்திகேயனின் (Sivakarthikeyan) அசத்தல் நடிப்பிலும், இயக்குநர் சுதா கொங்கராவின் (Sudha Kongara) இயக்கத்திலும் வெளியான படம்தான் பராசக்தி (Parasakthi). இந்த படமானது தமிழகத்தில் 1965ம் ஆண்டு தொடர்ச்சியில் நடந்த இந்தி மொழித்திணிப்பிற்கு எதிரான கதைக்களத்தில் வெளியாகியிருந்தது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் “செழியன்” என்ற வேடத்தில் நடிக்க, அவருக்கு ஜோடியாக ஸ்ரீலீலா (Sreeleela) “ரத்னமாலா” என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படமானது அதிரடி ஆக்ஷன், எமோஷனல் மற்றும் காதல் போன்ற கதைக்களத்தில் வெளியாகியிருந்தது. இதில் ரவி மோகன் (Ravi Mohan), அதர்வா (Athrvaa), ராணா (Rana) மற்றும் பேசில் ஜோசப் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது கடந்த 2026 ஜனவரி 10ம் தேதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகியிருந்தது. திரையரங்குகளில் இப்படமானது சரியான வரவேற்பை பெறவில்லை.
அதைத் தொடர்ந்து கடந்த 2026 பிப்ரவரி 7ம் தேதி முதல் ஜீ5 (Zee5) என்ற ஓடிடியில் இப்படமானது ஸ்ட்ரீம் செய்யப்பட்டுவந்தது. இந்நிலையில் இப்படம் ஓடிடியில் பது சாதனைப் படைத்துள்ளது, அது என்னவென்றால் ஜீ5 ஓடிடியில் வெளியான பராசக்தி வேகமான 100M+ ஸ்ட்ரீமிங் நிமிடங்களை கடந்த முதல் படம் என சாதனைப் படைத்துள்ளது.
இதையும் படிங்க: ரசிகர்களின் பாசிட்டிவ் ரிவ்யூஸ்.. 3 நாட்களில் ‘வித் லவ்’ படம் எவ்வளவு வசூலித்துள்ளது தெரியுமா?
பராசக்தி படத்தின் ஓடிடி ரிலீஸ் சாதனை குறித்து வெளியான பதிவு:
Fastest 100M+ streaming minutes on ZEE5! History made with the fire of #Parasakthi🔥#Parasakthi is Now Streaming On ZEE5!🔥 @siva_kartikeyan @Sudha_Kongara @iam_ravimohan @Atharvaamurali @gvprakash @DawnPicturesOff @redgiantmovies_ @Aakashbaskaran @sreeleela14 @saregamasouth… pic.twitter.com/qVA83hciXD
— ZEE5 Tamil (@ZEE5Tamil) February 9, 2026
பராசக்தி பட திரையரங்கு தோல்விக்கு என்ன கரணம் :
இந்த பராசக்தி படத்தில் மொத்தமாக 3 நடிகர்கள் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படமானது முதலில் புறநானூறு என அறிவிக்கப்பட்ட நிலையில், சூர்யாதான் நடிக்கவிருந்தார். பின் பட்ஜெட் காரணமாக சூர்யா மற்றும் அவரின் தயாரிப்பு நிறுவனமும் இப்படத்திலிருந்து விலகியது. இதையடுத்து சிவகார்த்திகேயன் இப்படத்தில் இணைய, டான் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படமானது 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்யப்பட்டிருந்த நிலையில், ஜன நாயகன் படமானது ஜனவரி 9ம் தேதியில் வெளியாகவிருந்தது.
இதையும் படிங்க: தனது புதுப் படத்தின் அப்டேட் எப்போது வெளியாகும்? சிவகார்த்திகேயன் கொடுத்த மாஸ் அப்டேட்
சென்சார் பிரச்சனையின் காரணமாக இப்படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், சிங்கிளாக பராசக்தி படம் மட்டுமே வெளியானது. ஜன நாயகன் படத்தின் மீது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பை வைத்திருந்த நிலையில், பராசக்தி படத்திற்கு அந்தளவிற்கு எதிர்பார்ப்பு இல்லை. மேலும் இப்படத்திற்கு முதல் நாளிலே ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை கொடுக்கவே, திரையரங்கில் இப்படமானது வரவேற்கப்படவில்லை. மேலும் தற்போது ஓடிடிடியில் படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.