11 ஆண்டுகளுக்குப் பிறகு வெப் சீரிஸ் மூலம் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரியாகும் நஸ்ரியா – உற்சாகத்தில் ரசிகர்கள்
Actress Nazriya Nazim: மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நஸ்ரியா நசிம். தமிழ் சினிமாவில் இவரது நடிப்பில் சிலப் படங்களே வெளியாகி இருந்தாலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

நஸ்ரியா
மலையாள சினிமாவில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் நஸ்ரியா நசீம் (Nazriya Nazim). இவர் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிப்பதற்கு முன்பே சின்னத்திரையில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக தனது மழலை தன்மை மாறாமல் பேசியது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களிலும் ரசிகர்களிடையே வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான மாட் டாட் என்ற மலையாளப் படத்தின் மூலம் சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து மலையாள சினிமாவில் பலப் படங்களில் நாயகியாக நடித்தார். அவை அனைத்தும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான நேரம் என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார்.
குறிப்பாக தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளிலும் இந்தப் படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ராஜா ராணி மற்றும் நையாண்டி, 2014-ம் ஆண்டு வெளியான திருமணம் எனும் நிக்கா ஆகிய படங்களில் நடித்தார். இது தமிழ் சினிமாவில் இவர் இறுதியாக நடித்தப் படம் என்பது குறிப்பிடத்தக்கது. மலையாளம் மற்றும் தமிழ் சினிமா மட்டும் இன்றி தெலுங்கு மொழியிலும் நடிகை நஸ்ரியாவிற்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மெட்ராஸ் மிஸ்டரி சீரிஸ் மூலம் தமிழில் ரீ என்ட்ரியாகும் நஸ்ரியா:
இந்த நிலையில் சுமார் 11 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகை நஸ்ரியா நசீம் 11 ஆண்டுகளுக்கும் பிறகு தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரியாக உள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி இந்த மெட்ராஸ் மிஸ்டரி என்ற இணையதள தொடரை அறிமுக இயக்குனர் ஆஷிப் பாவபெட்டடயில் இயக்குகிறார்.
மேலும் கெட்டோ என்டர்டெயின்மென்ட்டுடன் இணைந்து நேற்று இன்று இந்த இணையதள தொடரை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த இணையதள தொடர் சோனிலிவ் ஓடிடியில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இது தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Also Read… அனிகா சுரேந்திரனின் செலிபிரிட்டி க்ரஸ் யார் தெரியுமா? அவரே சொன்ன விசயம்!
நஸ்ரியா நசீமின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு:
Also Read… சார்பட்டா படத்தில் டான்ஸிங் ரோஸ் கேரக்டர் குறித்து நெகிழ்ந்து பேசிய ஷபீர்!