பேட்ரியாட் படத்திலிருந்து வெளியானது நயன்தாராவின் போஸ்டர்!
Nayanthara's poster from Patriot Movie : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் மலையாள சினிமாவில் பேட்ரியாட் என்ற படத்தில் நடித்து வரும் நிலையில் அந்தப் படத்திலிருந்து நடிகை நயன்தாராவின் போஸ்டரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

நயன்தாரா
மலையாள சினிமாவில் கடந்த 2003-ம் ஆண்டு வெளியான மனசினக்கரே என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார் நடிகை நயன்தாரா. தொடர்ந்து மலையாள சினிமாவில் படங்களில் நடித்து வந்த நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியான ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்து இருந்த நிலையில் அவரது ஹோம்லி லுக் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து ஹோம்லி பெண்ணாக வலம் வந்த நடிகை நயன்தாரா பிறகு மார்டன் பெண்ணாக வலம் வரத்தொடங்கினார். மேலும் இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் வரவேற்பைப் பெற்று வந்த நிலையில் ஒரு கட்டத்தில் நாயகியை மையமாக வைத்து உருவாகும் படங்களிலேயே நடித்து வந்தார்.
இந்த நிலையில் தொடர்ந்து நாயகியை மையாக வைத்து உருவாகும் படங்களில் நடித்து வந்த நடிகை நயன்தாரா தற்போது மீண்டும் முன்னணி நடிகர்களின் படங்களில் அவர்களுக்கு ஜோடியாக நடிக்கத் தொடங்கினார். அதன்படி நடிகை நயன்தாரா நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் மன சங்கர வர பிரசாத் காரு. தெலுங்கு சினிமாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்தில் நடிகர் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து இருந்தார். இந்தப் படம் தற்போது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
பேட்ரியாட் படத்திலிருந்து வெளியானது நயன்தாராவின் போஸ்டர்:
இந்த நிலையில் நடிகை நயன்தாரா அடுத்தடுத்தப் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதன்படி மலையாள சினிமாவில் நடிகர்கள் மம்முட்டி மற்றும் மோகன்லால் இருவரும் இணைந்து நடிக்கும் பேட்ரியாட் என்ற படத்தில் நடிகை நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இந்தப் படத்தில் இருந்து நடிகை நயன்தாராவின் போஸ்டரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… Janhvi Kapoor: அம்மா ஸ்ரீதேவியின் இளமை ரகசியம் இதுதான்.. ஜான்வி கபூர் சொன்ன விஷயம்!
பேட்ரியாட் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Presenting #Nayantara in #Patriot
Dissent is patriotic, In a world full of traitors, be a Patriot !!#AntoJoseph #MaheshNarayanan#AntoJosephFilmCompany pic.twitter.com/5C5gxNbHC9
— MammoottyKampany (@MKampanyOffl) January 25, 2026
Also Read… கியூடாக போஸ் கொடுக்கும் இந்த சிறுவன் யார் தெரிகிறதா? தமிழ் சினிமாவில் ரசிகர்களை கவர்ந்த நடிகர் இவர்!