Hi Movie: நயன்தாரா – கவின் நடிக்கும் ஹாய் பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? தமிழ் புத்தாண்டை முன்னிட்டு படக்குழு அறிவிப்பு!

Hi Movie First Single Release Update: நயன்தாரா மற்றும் கவின் ராஜா நடித்துள்ள புதிய திரைப்படம்தான் ஹாய். இப்படமானது வித்தியாசமான லவ் ஸ்டோரியில் தயாராகியுள்ளது. அந்த வகையில் இன்று (14/04/2026) தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இப்படத்தின் முதல் பாடல் ரிலீஸ் எப்போது என படக்குழு அறிவித்துள்ளது.

Hi Movie: நயன்தாரா - கவின் நடிக்கும் ஹாய் பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? தமிழ் புத்தாண்டை முன்னிட்டு படக்குழு அறிவிப்பு!

நயன்தாரா - கவின்

Updated On: 

14 Apr 2026 19:50 PM

 IST

தென்னிந்திய சினிமாவில் லீக் கதாநாயகியாக கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேல் நடித்துவருபவர் நயன்தாரா (Nayanthara). இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் தொடர்நது திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் தமிழில் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு பின் சிறப்பாக வெளியாக தயாராகிவரும் படம்தான் ஹாய் (Hi Movie). இப்படத்தை அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் (Vishnu Edavan) இயக்க, நயன்தராவின் ரௌடி பிக்ச்சர்ஸ், செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் போன்ற நிறுவனங்கள் இணைந்து தயாரித்துவருகிறது. இதில் நயன்தாரா லீட் நாயகியாக நடித்துவரும் நிலையில், அவருக்கு ஜோடியாக இளம் நடிகர் கவின் (Kavin) நடித்துவருகிறார்.

இந்த படமானது பீல் குட் காதல் கதையில் தயாராகிவரும் நிலையில், இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இசையமைத்துவருகிறார். அந்த வகையில் இன்று 2026 ஏப்ரல் 14ம் தேதியில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, இப்படத்தின் முதல் பாடல் கன்ன குழியே (Kanna kuzhiya) ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: ஜோ பட இயக்குநரின் புது படத்தில் இணைந்த ஜி.வி. பிரகாஷ்.. நடிகை யார் தெரியுமா?

நயன்தாரா மற்றும் கவினின் ஹாய் திரைப்படத்தின் முதல் பாடல்:

இந்த ஹாய் படத்திற்கு இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கும் நிலையில், கிட்டத்தட்ட பல பாடல்கள் தயாராகியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் ஹாய் திரைப்படத்தின் முதல் பாடலானது வரும் 2026 ஏப்ரல் 21ம் தேதியில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. கன்ன குழியே என்ற பாடலானது எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

ஹாய் திரைப்படத்தின் முதல் பாடல் ரிலீஸ் குறித்து படக்குழு அறிவிப்பு பதிவு:

இதையும் படிங்க: அஜித் சார் எப்போதும் பிக் ஸ்டார் என்ற அந்தஸ்தை காட்டியதில்லை – இயக்குநர் மனு ஆனந்த் பேச்சு!

ஹாய் படத்தின் ரிலீஸ் எப்போது:

இந்த ஹாய் படத்தில் கவின் மற்றும் நயன்தாராவுடன் நடிகர்கள் ராதிகா சரத்குமார், பிரபு, கே பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ், கேபிஒய் குரேஷி என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங்கானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சிறப்பாக தயாராகிவருகிறது. அந்த வகையில் இப்படத்தை வரும் 2026ம் ஆண்டு மே இறுதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
Related Stories
Kayadu Lohar: ஐஆம் கேம் படம் முற்றிலும் வித்தியாசமானது.. நிச்சயம் அனைவர்க்கும் பிடிக்கும் – கயாடு லோஹர் பேச்சு!
அவன் குறுக்க மட்டும் போயிடாதீங்க சார் – 4 ஆண்டுகளை நிறைவு செய்தது கேஜிஎஃப் சாப்டர் 2 படம்
சரி என்று தெரியாமல் தவறு என்று புரியாமல் எதில் வந்து சேர்ந்தேன் நான் எதிர்பார்க்கவில்லை நான் – 19 ஆண்டுகளை நிறைவு செய்தது உன்னாலே உன்னாலே படம்
GV Prakash: ஜோ பட இயக்குநரின் புது படத்தில் இணைந்த ஜி.வி. பிரகாஷ்.. நடிகை யார் தெரியுமா?
புத்தாண்டை முன்னிட்டு குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட ஹரிஷ் கல்யாண்
Karuppu: ராத்து ராசன் இவன்…. சூர்யாவின் கருப்பு படத்திலிருந்து வெளியான அடுத்த பாடல்!
வரலாறு படைத்துள்ளீர்கள் - ஆர்தமிஸ் விண்வெளி பயணக்குழுவை பாராட்டிய டிரம்ப்
ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு கட்டணம் விதிக்கத் திட்டம்!!
நடுவானில் விமானத்தின் 2 எஞ்சின்களும் செயலிழப்பு.. துரிதமாக செயல்பட்டு 69 பேரை காப்பாற்றிய பைலட்!
நடிகை ஹன்சிகா தனது மைத்துனி மீது கொடுத்த புகார்